பகலில் மிதிபட்டு
இரவில் மெத்தையானது
நகரத்து நடைபாதை

***

பூட்டிய வீட்டுக்குள்
துள்ளி குதித்து விளையாட்டு
கொலுசின் பரல்கள்!

***

தலைசாய்ந்த நெற்கதிர்கள்
வருடாவருடம் நினைவுக்கு வரும்
கூன்பாட்டி

***

பழுதான லாரிக்கடியில்
மல்லாந்து புரண்டபடி…
நாய்க்குட்டி 

***

அமைதியான இரவு
எரியும் தெருவிளக்கை சுற்றி
அலைபாயும் ஈசல்கள்

***

கொட்டும் மழையால்
தேங்கி நின்றது
இளநீர் விற்பனை


***

பெண்ணுரிமை வசனங்கள்

வெளுத்து வாங்கிய நடிகருக்கு
ஜோடியாக இளம் நடிகை!


***

The Bright Crescent Moon In A Deep Black Night With Branches Stock Photo,  Picture And Royalty Free Image. Image 109066123.

இரவு மழையில் இசைக்கச்சேரி
மறைந்து கொண்டு ரசிக்கும்
பிறைநிலா


***

விரித்த புத்தகத்தில்
எழுத்தை உற்றுபார்த்தபடி
ஒரு கொசு!

***

நிரம்பி வழிந்தாலும்
நிறுத்தி ஏற்றிக்கொண்டு செல்லும்…
குப்பை வண்டி!

***

மதுபாட்டில் மூடிகளில்
தமிழகஅரசின் கோபுர சின்னம்
குப்பையில் எறிந்தனர் குடிமக்கள்!

***

மரத்தை  சூழ்ந்திருந்த இருட்டு
நிழலில் பதுங்கி கொண்டது!
சூரியனைக் கண்டதும்

***

2 thoughts on “ந.ஜெகதீசன் ஹைக்கூ கவிதைகள்”
  1. தாங்கள் ஹைக்கூ நன்றாக வந்துள்ளது. வார்த்தைகளை இன்னும் கவனமாக பயன்படுத்தினால் இன்னும் அற்புதமாக இருக்கும்.

  2. அருமையான ஹைக்கூ கவிதைகள் தோழர். புத்தகம் கவிதை சிறப்பு தோழர். வாழ்த்துகள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *