காலந்தோறும் கல்வி - நூல் அறிமுகம் -என். மாதவன் - N.Mathavan, Kalanthorum Kalvi Published by Books For Children book review - https://bookday.in/

காலந்தோறும் கல்வி – நூல் அறிமுகம்

 

நூலின் தகவல்கள் : 

நூல் : காலந்தோறும் கல்வி

ஆசிரியர்: என்.மாதவன்

பதிப்பகம்: – பாரதி புத்தகாலயம்

விலை: ரூ.90

காலந்தோறும் கல்வி என்னும் இப்புத்தகம் ஆசிரியர், தலைமையாசிரியர்,கல்வியாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்க முக்கிய ஆளுமை, கவிஞர், கதை சொல்லி,தன்னம்பிக்கை பேச்சாளர்,குழந்தைகள் நேய கல்வியாளர் என்னும் பல பன்முக ஆளுமை கொண்ட ஐயா என்.மாதவன் அவர்களால் எழுதப்பட்டது.

இந்நூல் நீண்ட கால கல்வி வரலாற்றைச் சுருக்கமாகத் தரும் முயற்சி.

நான்கு பகுதிகளைக் கொண்டது.

முதலாவது பகுதியான. “ கல்வி” என்னும் தலைப்பில் கல்வியின் நோக்கங்களையும், இந்த சமூகத்தில் கல்வியின் தேவையையும் விவரிக்கிறார். இச்சமூகத்தில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறார். இந்த அதிகாரம் பரவலாக்கப்பட ஒரு நாட்டில் தழைக்கும் ஜனநாயகமும், கல்விப்பரவலுமே கை கொடுக்கிறது என்கிறார்.

நூலின் இரண்டாவது பகுதி “பள்ளிகளின் பரிணாமம்” என்பது, இதில் உலக நாடுகளில் மன்னராட்சி காலம் தொட்டு இப்போதைய மக்களாட்சி காலம் வரை பள்ளி என்னும் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன.

“மூன்றாவது பகுதியின் தலைப்பு “இந்தியாவில் கல்விப் பரவல்” என்பதாகும்.

நான்காம் பகுதி முழுவதும் கல்வியின் வளர்ச்சிக்கும், அனைத்து குழந்தைகளையும் கல்வி பெற வேண்டும் என்னும் இலக்கை அடையவும் ஒரு தேர்ந்த கல்வியாளராய் ஐயா மாதவன் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மாணவர்கள் கேள்விகள் கேட்டு கேள்வியின்
நாயகர்களாக இருக்கவேண்டும்.

காலந்தோறும் கல்வி - நூல் அறிமுகம் -என். மாதவன் - N.Mathavan, Kalanthorum Kalvi Published by Books For Children book review - https://bookday.in/
     நூலாசிரியர் – என்.மாதவன்

 

மாணவனே
குனிந்தால்
பாடப்புத்தகத்தைப்படி…!
நிமிர்ந்தால்
உலகப்புத்தகத்தைப்படி…!

உடல் உள்ளம் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும் கல்விமுறை

குழுமனப்பான்மையோடு செயல்படல்
போன்ற கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

 

நூல் அறிமுகம் எழுதியவர்: 

வ.பெரியசாமி
புத்தக ஆர்வலன்
தன்னம்பக்கை பேச்சாளர்,போட்டித்தேர்வு பயிற்சியாளர்
பட்டதாரி ஆசிரியர் கணிதம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்ககிரி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *