நூல் அறிமுகம்: என்.ராமகிருஷ்ணன் அவர்களின் *அந்தமான் தீவுச் சிறை* – இருவாட்சிநூல் – அந்தமான் தீவுச் சிறை
ஆசிரியர் – என்.ராமகிருஷ்ணன்

1896ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு ஆயிரத்து 1897 ஆம் ஆண்டில் 400 அறைகள் கட்டி முடிக்கப்பட்டன. அந்த பணி தொடர்ந்து 1910 ஆம் ஆண்டில் 663 அருகில் தயாராகின. அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்ட கைதிகள் வெகுகாலம் வரை தண்டனை குடியிருப்பிலேயே வாழ்ந்தனர். சிறைச்சாலை எதுவும் கட்டப்பட்டு இருக்கவில்லை. ஆனால் 1890 ஆம் ஆண்டில் லில் மற்றும் லேத்பிரிட்ஜ் என்ற இரண்டு ஆங்கிலேய அதிகாரிகள் அந்தமானுக்கு வந்து பார்வையிட்டனர். கைதிகளுக்கான தண்டனையை கடுமையாக்கப்பட வேண்டும் என கூறியவர்கள் அதற்காக ஒரு சிறைச்சாலை கட்டப்பட வேண்டும் என ஆங்கிலேய அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்தனர் .கைதிகள் அந்த சிறையின் அறைகளுக்குள் மட்டும் கிடக்கும்படி செய்ய வேண்டும் என அவர்கள் சிபாரிசு செய்தனர்.
கடினமான வேலையை செய்ய மறுத்தால் சவுக்கடி ,கசையடி கைவிலங்கு, இரும்பு சட்டம் சுமப்பது, சாக்குத் துணி உடுத்துவது போன்ற தண்டனைகள் கொடுக்கப்படும். காலையில் புழு பூச்சி நிறைந்த ஒரு டப்பா கஞ்சி. மதிய உணவு பன்றிகள் கூட உண்ணாது. வேகவைத்த சோற்றில் புழு பூச்சிகள் நிறைந்த நாற்றமடிக்கும் .ஒரு கரண்டி கசக்கும் பருப்பு உப்புடன் வேக வைக்கப்பட்ட முள்ளுள்ள காட்டுவீர்கள் சிறிது. இதை உண்ட பின் மீண்டும் வேலைக்கு செல்லவேண்டும். மாலையில் கல்லும் மண்ணும் கலந்த சப்பாத்தி! வங்காள விரிகுடாவின் இந்தப் பகுதியின் தண்ணீர் கருநீல நிறம் கொண்டதாக இருப்பதால் அது கருந்தண்ணீர் காலபாணி என்று அழைக்கப்படலாயிற்று.

31 ஆண்டுகள் சிறையில் இருந்த தோழர் சதீஷ் பக்ராஷி . 28 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தோழர் கணேஷ் கோஷ் , ஹரி கிருஷ்ண கோனார், அமிர்தேந்து முகர்ஜி, சுபத்ரோய் ,சுதான்சுதாஸ் குப்தா . பகத்சிங்கின் தோழர்களான சிவவர்மா ,கயா பிரசாத் மற்றும் பிரான் கிருஷ்ண சக்ரவர்த்தி பலரை இவ்வாறு குறிப்பிடலாம்.

1933 மே 12ம் தேதி உண்ணாவிரதம் துவங்கியது. அடுத்த ஆறாவது நாள் அதாவது மே 17ஆம் தேதியன்று மகாவீர் சிங்கிற்கு வலுகட்டாயமாக ரப்பர் குழாய் மூலம் பாலை ஊற்ற அங்கிருந்த மருத்துவர் துணிந்தார் .ரப்பர் குழாயின் ஒரு பகுதியும் அவரது மூச்சுக் குழாயிகுள்ளும் , நுரையீரலிலும் போனது உடனே நினைவிழந்த அவர் அடுத்த நாள் அதிகாலையில் காலமானார். அவரது உடல் பாரங்கல்லோடு சேர்த்து கட்டப்பட்டு கடலில் வீசப்பட்டது. அரசியல் கைதிகளான வீரர்கள் துவங்கிய உண்ணாவிரதத்தில் மகாவீர் சிங், மோகன் கிஷோர் நாமதாஸ் , மோகித் மொய்த்ரா என்ற மூன்று புரட்சியாளர்கள் உயிர் நீத்தனர்.

இந்தியாவில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை அத்தீவுகளில் கொண்டுபோய் இறக்கி அவர்களது வாழ்நாள் முழுவதும் அங்கேயே தங்க செய்த ஆங்கிலேயர்க்கு தேவைப்படும் வசதிகளை செய்து தரவேண்டும். தேசபக்த சிப்பாய்களை தண்டனை கைதிகளாக கொண்ட அந்த முதல் கப்பல் 1858ஆம் ஆண்டு மார்ச்சு பத்தாம் தேதியன்று அந்தமானில் உள்ள போர்ட் பிளேயர் துறைமுகத்தை அடைந்தது. ஏசி வாக்கர் என்ற ஆங்கிலேய அதிகாரி அவர்களை அழைத்துச் சென்றார்.
1858ஆம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் இடைப்பட்ட காலத்தில் 228 பேர் தப்பி ஓடினர் .ஆனால் அவர்களில் 88 பேர் மீண்டும் பிடிபட்டனர் ஆங்கில அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் ஒரே நாளில் தூக்கிலிட்டு கொன்றான். கைதிகளுக்கு தினசரி படியாக ஒன்னே முக்கால் கொடுக்கப்பட்டது. ஒரு ரூபாய்க்கு அப்போது 16 நாட்கள் என்ற கணக்கின்படி பார்த்தால் இது எவ்வளவு மோசமானது என்பது புலப்படும்.

.: வரலாறு படைத்த என். ராமகிருஷ்ணன் நூல்களில் வரலாற்றின் நாயகர்கள்
என்.ராமகிருஷ்ணன்

1857 வருட சிப்பாய் புரட்சிக்காரர்களுக்கு பின் அந்தமான் தீவில் அடைக்கப்பட்டவர்கள் வகாபி இயக்கத்தினர். 1872 ஆம் ஆண்டில் அந்தமானில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடந்தது இந்தியாவின் வைசிராயாக இருந்த மேயோ பிரபு என்பவர் அந்தமான் தீவிற்கு வந்து இருந்தபோது அங்கிருந்த முகமது ஷிராலி என்ற வாகாபி இயக்கத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி அவரைக் குத்திக் கொன்றார். முகமது ஷிராலியும் உடனடியாக பிடிக்கப்பட்டு தூக்கில் போடப்பட்டார் .அதன் மூலம் ஷிராலி அந்தமான் தீவில் முதல் இந்திய தியாகியானார். 1909 ஆம் ஆண்டில் வி.டி. சவார்க்கர் அவரது சகோதரர் ஜி.டி சாவர்க்கர் மற்றும்
நாராயணன் ஜோஷி போன்ற மூவரும் மும்பையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

1921 நவம்பர் 19ம் தேதி கைது செய்யப்பட்ட 100 கைதிகளை மூடப்பட்ட ஒரு சரக்கு ரயில் பெட்டியில் ஏற்றினர். இந்த 100 பேரும் 97 பேரும் மாப்ளா முஸ்லிம்கள் 3 பேர் இந்துக்கள் .பெட்டிக்குள் இடமே இல்லை அந்த பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது. உள்ளே உட்கார இடமில்லை நிற்கவும் கூட இடமில்லை , மூச்சுவிட வழியில்லை 70 மாப்பிள்ளைகள் மூச்சுத்திணறி இறந்தனர் .இது இந்திய நாடு முழுவதும் உலுக்கியது மாப்ள ஆங்கிலேயப்படை மோதலில் சுமார் பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டனர் இதில் ஆங்கிலேய அதிகாரிகளும் அடங்குவர்.

1922 -24 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரம்பா எழுச்சியில் பங்கேற்றவர்கள் ஆவர். இன்றைய ஆந்திரப் பகுதி. காடுகளில் இருந்து கிடைக்கும் பொருட்களை சேகரிக்க பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. இது ரம்பா பகுதி விவசாயிகளை ஏழை, எளிய மக்களை கொதிப்படையச் செய்தது. இதற்குத் தலைமை தாங்கியவர் அல்லூரி சீதாராம ராஜு என்ற சந்நியாசி. நிலம் நமது, நீர் நமது ,விவசாயம் நமது ஆனால் ஆங்கிலேய அரசாங்கமும் அவர்களது கைக்கூலிகளின் தான் நமது விவசாயிகளின் துன்ப துயரங்களுக்கு காரணம் என அவர்களுக்கு போதனை அளித்தார். 27 வயதான எழுச்சியாளர் சீதாராமராஜு வீரமரணம் எய்தினார். ரம்பா விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் பலர் அந்தமானுக்கு அனுப்பப்பட்டு அங்கேயே மடிந்தனர்.
பூபல் சந்திரபோஸ் கூறுகிறார் ..

சிறைக் கொடுமை ,சித்திரவதை, பட்டினி, நோய் நொடி. பத்திரிக்கைகள் இல்லை. கடுமையான வேலையாக இவை அனைத்தையும் பொருத்து அணுஅணுவாய் சாவதா இல்லை, அடக்குமுறைக்கு ஆளானாலும் போராடுவதா என்ற பிரச்சினை எங்கள் மத்தியில் எழுந்தது. சிறுமைப்பட்டு நாயினும் கீழாக வாழ்வதை விட போராடி உயிர் நீப்பது மகத்தானது என்ற முடிவில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது. அரசியல் கைதிகள் தங்களுக்கு கிடைத்த புத்தகங்களை எல்லாம் படிக்க ஆரம்பித்தார்கள்.

45 நாட்கள் நீண்ட இந்த உண்ணாவிரதம் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் முடிந்தது. அதே மாதத்தில் ஒரு பகுதி அரசியல் கைதிகள் இந்திய சிறைக்கு மாற்றப்பட்டனர் .கடைசி பகுதி அரசியல் கைதிகளை ஏற்றுக் கொண்ட கப்பல் 1938 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள் மாலை நேரத்தில் அந்தமான் தீவில் இருந்து இந்தியாவை நோக்கி நகர ஆரம்பித்தது .அரசியல் கைதிகளின் கண்களிலிருந்து தீவுசிறைச் மறைந்து கொண்டே போனது!