1. வீடு
நேற்று வரை அது என் தாத்தா வீடு
இன்று அதுவே என் அம்மா வீடு
நாளை என் வீடாக இருக்குமோ?
அல்லது வேறு
யாருடைய வீடாக இருக்குமோ? தெரியாது.
நல்ல விலைக்கு விற்கப்படுமா?
யாரின் கைக்காவது மாறிடுமா?
தெரியாது
வீடு என்பது
எப்போதும் நிரந்தர
குடியிருப்பும் அல்ல
ஒரு தற்காலிக் குடியிருப்பும் அல்ல
யார் யாருக்கோ
கை மாறி மாறி சென்று கொண்டேஇருக்கிறது
அது சரி,
எதுதான்
எனக்கான சொந்த வீடு?
*
2.
சீடன்:
குருவே, பொய் பற்றி கூறுங்கள்
குரு:
” பொய்யைக் கவனி
பொய்யைக் கேள்
பொய்யை யோசித்து பார் ”
என்றார் குரு.
சீடன் குரு சொன்னதன் அர்த்தம் புரியாமல் திகைத்து நின்றான்.

