ந.க.துறைவன் கவிதைகள் | Na Ga Thuraivan Poems

 

1.

நினைத்ததற்கு மாறாக
செயல்படுகிறது அந்த மனம்
நினைத்தது நினைத்தவுடன் நடந்து விடுமா?
நினைத்தது நடப்பதற்கு கொஞ்சம்
கால அவகாசம் தேவை
நினைத்த எண்ணம்
ஆழ்மனத்தில் பதிந்தவிட்டால்
என்றேனும் ஒரு நாள் நடந்தே தீரும்
எண்ணங்களுக்கு வலிமை
அதிகம் என்கிறார்கள்
அவரவர்களுக்கு எத்தனை எத்தனையோ
எண்ணங்கள்
சிறகு விரித்து பறக்கிறது
வான்வெளியெங்கும்….

2.

குழந்தைகள் பொம்மைகளோடு
விளையாடிட அனுமதியுங்கள்
பேச அனுமதியுங்கள்
விளையாடாதே படி என்று
அவர்களைக் கண்டிக்காதீர்கள்
அவர்கள் வெளியில் செல்லக் கேட்டால்
அழைத்துச் செல்லுங்கள்
விரும்பும் சுவையான தின்பண்டங்கள்
வாங்கித் தாருங்கள்
பிடித்த ஆடைகள் அவர்களே தேர்வு செய்ய
அனுமதியுங்கள்
மதிப்பெண் பார்த்து விட்டு
முகம் சுளித்து தண்டிக்காதீர்கள்
இப்பொழுது குழந்தைகள் எல்லோரும்
படுசுட்டியாக இருக்கிறார்கள் எனப்படும்
மனதில் வையுங்கள்
அவர்கள் ஏமாறுவதில்லை
நாம்தான் சிலநேரங்களில்ஏமாறுகிறோம்
என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்
குட்டிப் பையன்கள் எப்பொழுதும்
சுட்டிப் பையன்களே…

3.

இலையுதிர் காலத்தில் ஒளிந்திருக்கிறது
வசந்த காலம்
வேப்பம்பூக்கள் பூத்துக் குலுங்கிச் சிரிக்கின்றன
மண்தரையெங்கும் புங்கம் பூக்கள்
வெண்கம்பளம் விரித்திருக்கின்றன
கடும் வெயிலில் நடந்து போகிறேன்
என் நிழல் சூட்டை உணர்ந்திருக்குமோ?
வியர்வை மேனியில் வழிகின்றன
எதிரில் வரும் வாகனம் புழுதியைக் கிளப்பி
வேகமாய் பறக்கிறது எங்கோ
நான் போக வேண்டிய இடம் இன்னும்
சில நிமிடநேரத்தில் நெருங்கலாம்
எதற்காகப் போய்க் கொண்டிருக்கிறேன் என்று
என் உள்மனம் அசைப்போட்ட வண்ணமிருக்கிறது

4.

தயங்கி தயங்கி தான் அழைக்கிறான்
தயங்கி தயங்கி தான் பேசுகிறான்
தயங்கி தயங்கி தான் கேட்கிறான்
தயங்கி தயங்கி தான் எடுக்கிறான்
தயங்கி தயங்கி தான் கொடுக்கிறான்
தயங்கி தயங்கி தான் பார்க்கிறான்
தயங்கி தயங்கி தான் நிற்கிறான்
தயங்கி தயங்கி தான் குடிக்கிறான்
தயங்கி தயங்கி தான் சாப்பிடுகிறான்
தயங்கி தயங்கி தான் அன்பு காட்டுகிறான்
தயங்கி தயங்கி தான் காதலிக்கிறான்
தயங்கி தயங்கி தான் முத்தமிடுகிறான்
தயங்கி தயங்கி தான் வாழத் துவங்குகிறான்
தயக்கம் துறந்தவன் துணிகிறான் தெளிகிறான்
தேர்ந்த வாழ்க்கை தேடி வாழ்கிறான்
துணிவே வாழ்க்கை, வாழ்க்கையே துணிவு.

5.

அரளிப் பூவை யாரும் சூடுவதில்லை
ஆவாரம் பூவை யாரும் சூடுவதில்லை
இட்லிப் பூவை யாரும் சூடுவதில்லை
ஊமத்தம் பூவை யாரும் சூடுவதில்லை
எருக்கம் பூவை யாரும் சூடுவதில்லை
தாழம்பூவை யாரும் சூடுவதில்லை
தாமரைப் பூவை யாரும் சூடுவதில்லை
தும்பைப் பூவை யாரும் சூடுவதில்லை
நந்தியாவட்டைப் பூவை யாரும் சூடுவதில்லை
சரக்கொன்றைப் பூவை யாரும் சூடுவதில்லை
தலையில் சூடுவதற்கு
தகுதியற்ற பூக்கள் எல்லாம்
பூமியை அழகு செய்கிறது நாளும்…..!!

கவிதையை எழுதியவர்: 

ந க துறைவன்,
வேலூர் – 632 009.
Cell No: 8903905822.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *