ந க துறைவன் ஹைக்கூ கவிதைகள் na ka thuraivan: haiku kavithaigal

ந க துறைவன் ஹைக்கூ கவிதைகள்


தியான நிலையில் மலை
அலைகின்றன மேகங்கள்
அமைதி தேடும் மனம்.

கற்பூர நெடி தாங்காமல்
படத்தின் பின்பறம் இருந்து
வெளியே வந்தது பல்லி.

பூரணமாய் நிறைந்திருக்கிறேன்
பௌர்ணமி நிலவொளியில்
புத்தனுடன் நான்.

கிளை கீழே விழாமல்
பாதுகாத்தது தாங்கி
மற்றொரு கிளை.

குயிலின் குரல் ஒலி கேட்டு
அதே குரலில் குரல் கொடுக்க
கற்றான் ஆதிமனிதன்.

கோயில் மணியோசை
என்னைச் சுற்றி ஒலி அதிர்வு
பூவிலிருந்து வெளியேறுகிறது வண்டு.

காலி டீ கோப்பை
சுற்றி  சுற்றி வருகிறது
தாகத்தில் ஈ

கோடை வெப்பம்
மின்தடை புழுக்கம்
படுக்கையறை இருட்டில் பூனை.

பிரபஞ்ச சக்தியை
காதில் வைத்து கேட்டேன்
வலம்புரி சங்கின் ஒலி.

நிழல் கொடுக்கிறது
மரணக்குழி மேல்
வளரும் தும்பைச் செடி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 


Show 1 Comment

1 Comment

  1. Thuraivan NG

    எனது ஹைக்கூ கவிதைகள் வெளியிடுள்ளமைக்கு மிக்க நன்றி. ..

    ந க துறைவன் வேலூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *