கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கு
யாரும் பறிக்காத எருக்கப்பூக்கள்
போகும் போதும் வரும் போதும்
பறி பறி என்று சொல்கிறது மனம்
பாதையோரம் அதன் மீதான
தூசிகள் ஏராளம்
அதனை நேற்று பெய்த மழை
துடைத்து விட்டு சென்றது
எருக்கம் பாலுக்கும்
மருத்துவ குணம் உண்டு
அதனை அவ்வப்போது
நாடிவருவோரும் உண்டு
விநாயகருக்கு பிடித்த பூவாம்
மாலைக்கட்டி போட்டு
அழகு பார்க்கிறார்கள்
வேறு எந்த கடவுளும்
எருக்கம் பூ எற்பதில்லை
போல தெரிகிறது
அதன் நார் உரித்து திரித்து
பிறந்த குழந்தைகளுக்கு
அரைஞாண் கயிறு கட்டுகிறார்கள்
தோஷங்கள் விலக
பேய் பிடித்தவர்களை அடிக்க
எருக்கம் விறால் பயன்படுத்துகிறார்கள்
நஞ்சு முறிக்கும் சக்தி
இதற்குண்டென சொல்கிறார்கள்
சமுதாயதத்திற்கு இப்பொழுது
அவசியமாகிறது எருக்கம்.
பறத்தல் பார்ப்பது
பார்வைக்கு அழகு.
வெறுப்பு விதைப்பவர்கள்
வெறுக்கப்படுகிறார்கள்
வலிகள் தான் வாழ்க்கையை
வழி நடத்துகின்றன.
பொறாமை கொல்லும்
அடக்கம் வெல்லும்.