na ka thuraivan kavithaigal ந க துறைவன் கவிதைகள்
na ka thuraivan kavithaigal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

எதையோ தொலைத்துவிட்டு
மழையில் நனைந்து தேடுகிறாள்
நனையாமல் இருக்க கையில் குடை
நடையில் வேகம்
இன்னும் கிடைக்கவில்லை
தேடுகிறாள்
நிற்காமல் பெய்கிறது மழை.

*****

நீரில் விழுந்து வட்டம் போட்டது
இலைகள் சொட்டிய மழைத்துளி
வட்டத்திற்குள் தான்
வாழ்கிறது குளம்.

*****

ஏதோ சொல்ல வந்தான்
எதையும் சொல்லாமல்
திரும்பி போனான்
என்ன சொல்ல வந்திருப்பான்?

*****

எதுக்குள் எது இருக்கிறது என்று
எதுவும் சொல்ல முடியாது?
அதுக்குள் எது வேண்டுமானாலும்
இருக்கலாம்
இருப்பது அதன் இயல்பு.

*****

ஊர் மக்களுக்கு தெரியும்
அந்த கிணற்றின் ஆழம்
ஒரு பெண்ணின் தற்கொலை
முயற்சி தோல்வி.

*****

மந்தையில் கூடி
இருப்பது தான்
ஆடுகளுக்கு எப்பொழுதும்
பெரு மகிழ்ச்சி.

*****

அருகில் நின்று கேட்டேன்
அவர்களின் உச்சக்கட்டப் பேச்சு
அவர்களின் வெறுப்பின் சூடு
புரிந்து கொள்கிறது என் மனம்.

*****

மிகப் பிரபலமானதும் வசீகரிப்பதுமான
உயர்ந்த கருமலைமேல் ஏற்கிறேன்
மூலிகை வாசம் சுவாசித்தபடியே
எண்ணங்கள் அற்ற மனதோடு.

*****

எச்சமிட்டு தரையை
அசிங்கப்படுத்தியது
எழுந்து போகாமல்
அடம் பிடித்தது
சூ…சூ…என்று
காகத்தை விரட்டியது
குழந்தை.

*****

நாலு குழந்தைகள் பெற்றவள்
ஐந்தாவது குழந்தைக்கு
‘ வேண்டாம் ‘ என்று
பெயர் வைத்தாள்.

*****
ந க துறைவன் வேலூர்
8903905822.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *