na ka thuraivan kavithaikal ந க துறைவன் கவிதைகள்
na ka thuraivan kavithaikal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

வானம் மேகமூட்டமாய் இருக்கிறது
எப்பொழுது மழை வருமென்று தெரியாது
காற்று வேகமாய் வீசுகிறது
பூச்செடிகள் அசைந்து அசைந்து
அமைதியின்றி தவிர்க்கின்றன
அச்சத்தில் சில பூக்கள் உதிர்கின்றன
சில பூக்கள் துணிவோடு நிமிர்ந்து
அசைகின்றன
பூக்களளைப் பலரும் பார்க்காமல் போகிறார்கள்
சிலர் மட்டும் பார்த்து புன்னகை செய்கிறார்கள்
ஆசையாக அதன் அருகில் சென்று தொட்டுணர்ந்தேன்
என்னை மிக உணர்ந்த பூக்கள் கொஞ்சம் நேரம்
விலகாமல் இருக்க அனுமதித்தது
அனுபவிக்கச் சொல்லி…

நீ வரும் போது
காற்று உன்னை வரவேற்றது
மரம் அசைந்து
இலைகள் டாட்டா சொன்னது
அந்த குருவி
அழகான காதல் பாடல் பாடியது
நீ கேட்டாயா?
அந்த பாடலை நான் கேட்டேன்
உனக்கும் எனக்குமானது
அந்த பாடல்
‘ முத்தம் ஒன்று தா ‘ என்ற
வரிகள்
நாம் இருவரும் முத்தமிட்டு
கொண்டதாகவே இருக்கிறது
சரி, இருக்கட்டும்
வா அங்கே உட்கர்ந்து
மனம் திறந்து
ஏதேனும் பேசுவோம்.

நீலம் என் மனதின் நிறம்
பூக்கள் என் எண்ணத்தின் நிறம்
பசுமை என் ஆகாரம் நிறம்
நிறங்களாலானவன் நான்
நிறங்கள் என் உடலை
வலுவாக்கும் பிரபஞ்ச சக்தி.

அந்தப் பாதையில்
ஜல்லிக்கற்கள் போட்டு
ஆறுமாதமாகிறது
இன்னும்
சிமெண்ட் சாலைப் போடவில்லை
மக்கள் அதில்தான்
நடந்து போகிறார்கள் வருகிறார்கள்
ஜல்லிக்கல்லும் காலுக்கு மெத்தை
நடந்து போனாலோ மிகவும் அவஸ்தை.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *