நா.முத்துக்குமார்
—————————–
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர். நான்கு வயதில் தாயை இழந்தவர்.சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டவர். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தவர். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதி, பின் தேசிய விருது இவரை அலங்கரித்தது.
இந்த நூல் நா. முத்துக்குமார் பற்றி அவருடைய நண்பர்கள், திரைப்பட ஆளுமைகள், அவரைப் பற்றி பதிவு செய்த கட்டுரைகளின் தொகுப்பு இது.
ஆனந்த யாழ்
———————–
மனதை நனைக்கிறது கண்ணீர் மழை!
நினைவுகளைப் பேசுகிறது!
கண்ணெதிரே சிறகடித்துப்பறந்த இலக்கிய வானம்பாடியை பாடுகிறது.
பத்து ஆண்டுகளாய் அதிகமான பாடல் எழுதியவரை விருதுகளோடு தகுதிப்படுத்துகிறது. இந்தப் புத்தகம் கவிஞனுக்கு செலுத்தும் கண்ணீர் பேழையாக…!
நெசவாளர் குடும்பத்து பாட்டு சாம்ராஜ்யம். புழுதி ஆடையை வெயிலோடு பூக்க வைத்தவனுக்கு கண்ணீர் தாலாட்டு நினைவுகளால்…! ஆயிரத்துக்கு மேலே பாடல் எழுதி குறைந்த காலத்திலே காலத்திற்குள் காலமானவர். நிறைய பேர்களுக்கு நிறைய வாய்ப்புகளை திரைக்கதவை திறந்துவிட்டவர். கவிதையின் பேரேட்டில் வரவு வைத்துக் கொண்டவர்.பாடல் எழுதும் வாய்ப்பை உருவாக்கியவர். கை நிறைய விருதுகள் பெற்றாலும் அடக்கமானவர். தன் பெரும் கவிதைகளால் நிமிர்ந்தவர். நிலவுக்குப் பாட்டெழுதியவர்.
வீரநடையில் விளைந்த நெற்கவி. அனல் மேலே பனித்துளியென பூக்கள் பூக்கும் தருணங்களை கொண்டாடி அழகில்லை அவள் அப்படியொன்றும் கோயிலினுள் நுழையும்போது வருகிற வாசனை உனதல்லவா என கொண்டாடி தீர்த்தவர்.
தெய்வங்கள் தோற்ற கதையை வரிசைப்படுத்தியவர். தந்தையின் அன்பையும் அம்மாவின் தாலாட்டையும் தைமகளாய் கொண்டாடியவர். வனம் எனும் நட்பு வட்டத்தை உருவாக்கிய வானம். கவிதை மாயமான். தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ என தென்றலையே தென்றலாக்கியவர்.
கடவுளிடம் கருவறை கேட்டு உன்னை சுமக்கவா என்று இறையாக எழுதியவர். மின்னலின் ஔியைப் பிடிக்க மின் மினிப் பூச்சிக்கு தெரியவில்லை என இவரால்தான் ஏங்கமுடியும். சாதிக்கும் வயதில் சாகும் வயது என காலத்தோடு ஐக்கியமானவர்.
இப்படி எல்லாமும் ஆகிப்போன காற்றில் கலந்து இந்த புத்தகம் மூலம் வருடுகிறார் கண்களின் இமை இறகுகளை கண்ணீர் சொட்டு சொட்டுக்களாக உதிர்கிறது…
இப்படி அருமையான தொகுப்பை உருவாக்கி அற்புதமான புத்தகமாக ஆக்கி நா.முத்துக்குமார் எனும் “பாட்டு ஆழியை” மற்றோர்கள் கையில் கொண்டு சேர்த்து இருக்கிறார் ஆசிரியர் ஐயா திரு. ஆரூர் தமிழ்நாடன் அவர்கள்.
“ஆனந்த யாழ்” கண்ணீர் மழை மனதை நனைக்கிறது.
வீரசோழன். க.சாே.திருமாவளவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *