நூல் அறிமுகம்: நா.முத்துக்குமாரின் *பால காண்டம்* – கிருஷ்ணன் முத்துக்குமார்நூலின் பெயர்: பால காண்டம்
ஆசிரியர் பெயர்: நா.முத்துக்குமார்.
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்.
பக்கங்கள்: 71
விலை: ரூ.90

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதில் நமது சிறுவயது ஞாபகங்கள் நெஞ்சில் நிறைகிறது.

தார் உருண்டையை சட்டைப் பையில் வைத்து அப்படியே அம்மாவுடன் சினிமாவுக்குப் போய், குளிர் காலம் ஆதலால் மேலே ஸ்வெட்டர் அணிந்து இரவுக் காட்சிக்குப் போய் அந்த இருட்டில் சட்டையில் இருந்த தார் உடம்பு சூட்டிற்கு உருகி பிசுபிசுவென ஆகி அம்மா பயந்து வெளிச்சத்தில் வந்து பார்த்தபிறகு நமக்கு விழுந்த அடி நினைவுக்கு வருகிறது.

சைக்கிள் டயரில் வண்டி ஓட்டியது.

ஆசிரியரிடம் வாங்கிய பாராட்டுகள், திட்டுகள் அனைத்தும் ஞாபகத்துக்கு வரவைத்தது.

குழந்தை பருவத்தின் குதூகலம் இனி எப்போதும் திரும்பி வராது.

ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் ” பால காண்டம்” தண்ணீர் வற்றிவிட்டாலும் மணலுக்கு அடியில் ஓடிக் கொண்டிருக்கும் நீரைப்போல் ஓடிக் கொண்டே இருக்கும்.

மீண்டும் பள்ளிக்குப் போகலாம். மீசை வைத்த குழந்தையாய்.