நா.முத்துக்குமார் (Na.Muthukumar) எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள குழந்தைகள் நிறைந்த வீடு (Kuzhanthaigal Niraintha Veedu) புத்தகம்

நா.முத்துக்குமார் எழுதிய குழந்தைகள் நிறைந்த வீடு – நூல் அறிமுகம்

குழந்தைகள் நிறைந்த வீடு (Kuzhanthaigal Niraintha Veedu) – நூலில் இருந்து

ரோஜா ரோஜா தான் என்பது போல ஹைக்கூ ஹைக்கூ தான் .
அதை வேறு வாசனை வரும் என்று நினைத்து முகரக் கூடாது என்பது உண்மைதான் .

வயிற்றுப் பசிக்கு தனக்கு இல்லாவிட்டாலும் குழந்தைக்கு ஊட்டும் மரபுள்ள வீட்டில் கூட

*இன்று வேண்டாம்*
நாளை வா நிலா
ஊட்டுவதற்கு
சோறு இல்லை!
என்று எழுதி இருப்பது ஏழ்மையின் எலும்புகளை எண்ணியது போலாகிறது.

எந்த விருந்தாளிக்கும்
கத்தாதே காக்கையே
எங்களுக்கே
உணவில்லை ….
🌹🌹🌹🌹🌹🌹🌹

தோட்டத்தையும்
பின் ஒரு
பெண்ணையும்
சேர்த்து
ஞாபகப்படுத்துகிறது
நூலக புத்தகத்தில்
*உலர்ந்த செம்பருத்தி…*

அய்யயோ இக்கவிதையை வாசித்தவுடன்…
சிறுவயது
*டைரி மில்க் பேப்பரும்*
*சருகான ரோஜா பூவும்*
சிரித்துக் கொண்டது …

கவச குண்டலமும் கலை உத்திகளும் என்ற
புது உரையில் :
_குழந்தை அழகாய் இருக்கிறது. ஆனால் அதை கொஞ்சிக் கொஞ்சியே கொன்றுவிடுவார்கள் போலிருக்கிறது_ என்ற கவிஞர் சுரதாவின் பேச்சினை நினைவுபடுத்தி, ஹைக்கூவின் நிலைப்பாட்டை ஜீரணமாக்கி இருக்கிறார் *நிர்மலா சுரேஷ்* அவர்கள்.

நா.முத்துக்குமார் (Na.Muthukumar) எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள குழந்தைகள் நிறைந்த வீடு (Kuzhanthaigal Niraintha Veedu) புத்தகம்

ஹைக்கூவினை அப்படி ஆக்கிவிடக்கூடாதென நெறி கொண்டு கொஞ்சுவதோடு நிறுத்தாமல் காது, மூக்கு, நாக்கு என்று எல்லா இடங்களிலும் துளையிட்டு நகை போட்டால் தாங்குமா?

பச்சைக் குழந்தைக்கு பச்சை குத்துவதா?

விதைக்கே ரசாயன உரமா?

என்று இலக்கணத்தை இலகுவாக சொல்லி உள்ளார்.

*சாமியின் முகத்தில்*
*சந்தன காப்பு*

பல்லுக்கு
தூக்கிகளிடம்
*சாராயநெடி*
என்ற ஹைக்கூவில் நல்ல புரிதல் கிடைக்கும்.
பக்தி *மனதிற்கு* என்றாலும்
*பாரம்* உடலுக்குதானே !?!?!
என சாராயநெடி சொல்கிறது போலும்.

பிம்பங்கள் அற்ற
தனிமையில்
ஒன்றிலொன்று
முகம் பார்த்தன
_சலூன் கண்ணாடிகள்_

என்ற வரிகளில்…..
*எதிரொளிப்பு* விதிகளை *கவிதெளித்து* சற்று கண்மூடி யோசிக்க வைத்துள்ளார்.

இயற்பியல் ஆய்வுக்கூடம்
மாணவர்கள்
விட்டுச் சென்றது
ஸ்பெக்ட்ரோமீட்டருக்குள்
*வானவில்*
என்ற பதத்தில்……
மழைக்கால வானவில்லை நான் பார்த்ததை விட
கீற்றணியில்
வெள்ளொளி பாய்ந்து VIBGYOR உருவாகுவதை கண்டது தான் நினைவு வருகிறது.

ஜன்னல் கம்பியை வளைத்தது திருடனல்ல…
*நிழல்*
📌📌📌📌📌
வயதான மலைக்கு
தாடி
நரைத்திருக்கிறது
அருவி

நதிக்கரை நாணலுக்கு
கொலுசுகள் போட்டன
*நுரைகள்*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
புறாக்கள் வளர்க்கும்
எதிர் வீட்டுக்காரன்
எங்களிடமிருந்து
பறிக்கிறான்
பூனை வளர்க்கும்
சுதந்திரம்!
இந்த வரிகளில் பல அர்த்தங்கள் உள்ளதை
புறாவும் பூனையும் உணர்ந்திருக்கும்.

கிராப் வெட்டிய
பனை மரங்கள்
ஹெல்மெட்
மாட்டுகின்றன
*கள்ளுப் பானைகள்*…

குழந்தைகளின் வீடு நம்மை குழந்தைகளாக தவழச் செய்யும்.
இளைப்பாற வாசிக்க வேண்டிய நூல்.

நூலின் விவரம்:

நூல் : குழந்தைகள் நிறைந்த வீடு (Kuzhanthaigal Niraintha Veedu)
ஆசிரியர்: நா.முத்துக்குமார்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ரூ 100
பக்கம்: 78

நூல் அறிமுகம் எழுதியவர்:

யாழ்.மாரி
கும்பகோணம்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *