Na Ve Arul Tamil Poetry Is to English Translation By Srivatsa - Book day is Branch of Bharathi Puthakalayam



Words are akin to double edged swords. Both have to be handled with extreme care and caution. While those in politics may know all the tricks, poets have to be prepared to face not tomatoes or eggs but even batons and bricks. Reproduced here alongside an English translation by moi with prior permission from the poet is a word of caution in Tamil penned by Na Ve Arul:

வரம் வாங்கிவிட்டு கடவுளைக் கொன்றுவிடுகிறார்கள்

இந்தத் தலைப்பில்
ஒரு கவிதையை எழுத வேண்டாமென்று
எத்தனை தடவை சொல்லுவது
உனக்கு?
சந்தேகப்படும்படியான
எந்த வார்த்தையையும்
உனது கவிதையிலிருந்து
விலக்கிவிடுவது நல்லது.
நாக்குழறுகிற ஒரு குழந்தையிடமிருந்து
பிடுங்கிவந்த இந்தக் கவிதை
உன்னைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடியது
மேலும்
இது உன்னைக் கைது செய்வதற்கான
சந்தர்ப்பத்தை
ஒரு தவளை
பாம்பை அழைப்பதைப் போல
அழைக்கிறதே தெரியவில்லையா?
நீ வருகிற சாலையின் இருபுறமும்
தண்டிக்கப்பட்ட எழுத்தாளர்களின் கல்லறைகளைக்
காணவில்லையா?
அவற்றையெல்லாம் கண்டபிறகும்
உனது நடுமுதுகு சில்லிட்டுப் போகவில்லையா?
வரம் வாங்கியது யார் என்ற கேள்வியை
முன்வைத்துத்தான் வழக்கு தொடுப்பார்கள்.
அடுத்ததாக
எந்தக் கடவுளை என்று ஒரு கேள்வி
பிறகு கொன்றதாக எப்படித் தீர்மானிக்க முடியுமென்று
மூன்றாவதாக.
வரம் வாக்காகவும்
கடவுள்
வாக்காளரைக் குறிப்பதாகவும்
புதிய சந்தேகத்தை
வழக்கில்
வாதியின் மனுவாக முன்வைப்பார்கள்.
இன்னும் ஏதேதோ கேட்டுவிட்டு
கைது செய்துதான்
நாட்டின்
பிரிவினையைத் தடுக்கமுடியுமென்று
பிராது கொடுப்பார்கள்.
கவிஞனே
இதைவிட நீ
உயிர்ப்பிச்சை வாங்கிக் கொண்டு
கவிதையைக் கொன்றுவிடுவது நல்லது.

நா. வே. அருள் 



THEY GET A BOON AND KILL THE GOD

How many times
do you have to be told
not to write a poem
with this title?
It is better to
delete any word
from your poem
that can
create a doubt.
This poem
snatched from
a child that babbles
can betray you.
Further,
can’t you see it
invite the opportunity
to arrest you
like a frog
invites a snake?
Didn’t you notice
the graves
on both sides
of the road you take
of writers
who were punished?
Didn’t your spine chill
after seeing them all?
They will file a case
with the question
who got a boon.
The next question
will be
which God.
Then,
thirdly,
how can it be determined
that he was killed.
They will put forth
boon as vote
and God denotes
the voter
as a new doubt
of the prosecution.
After asking some more,
they will file a request
that arrest alone
can prevent
partition of the land.
Dear poet,
for you to seek
the gift of life
and killing the poem
is better than this.

~Sri Noida



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *