நாமும் நாடும் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள்:
நூல் : “நாமும் நாடும்”
நூலாசிரியர் : வழக்கறிஞர் கா. கணேசன்
விலை : ரூபாய் 150/-
வெளியீடு : மண் மக்கள் மனிதன் வெளியீடு
மதுரை -625016
தொடர்பு எண்: 9994368503
“உரிமைக் கல்வியை வகுப்பறைகளிலும், களத்திலும் பரவச் செய்வோம்”
மனித உரிமைகள், குழந்தைகள் உரிமைகளும் பாதுகாப்பும், நலிவடந்தோர் உரிமைகள், கல்வி உரிமை போன்ற நான்கு அத்தியாயங்களில் இந்நூல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக மௌனம் காக்கும் மனித உரிமை ஆணையங்கள், குழந்தைகளை அடித்தால் தான் படிப்பு வருமா? அதிகரிக்கும் குழந்தைகள் மீதான வன்முறை, மைக்கேல் பட்டி மாணவி விவகாரம், கொரோனா கேடும் வறுமைக்கோடும், ஊரடங்கால் உருக்குலைந்த புலம்பெயர் தொழிலாளர்கள், கட்டாய கல்வி ஓர் அடிப்படை உரிமையே, நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு அவசியமா? பள்ளி மேலாண்மை குழுக்களின் செயல்பாடுகள் போன்ற பல தலைப்புகளில் பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக்காட்டி அலசி ஆராய்ந்துள்ளது இந்த நூல்.
ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கங்களும் மனித உரிமைகள் என்ற வார்த்தையைக் கூட தடை விதிக்கின்றனர்.
மனித உரிமைகளுக்காகவும் சமூகப் பிரச்சினைகளுக்காகவும் போராடும் மனித உரிமை காப்பாளர்கள் சட்டத்திற்குப் புறம்பாக தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் ஊ. பா சட்டம் போன்ற கொடும் சட்டங்கள் மூலம் அடக்க முயற்சிக்கும் சூழல்கள் தற்போது உள்ளதை இந்நூலாசிரியர் சுட்டிக்காட்டி உள்ளார்.
பெண்கள் உரிமைகள், நலிவடைந்தோர் உரிமைகள், குழந்தைகள் உரிமைகள் மற்றும் கல்வி உரிமைகள் குறித்தும் விரிவாக அறிந்து கொள்ள இயலும்.
கல்வி உரிமைகள் குறித்தும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டமும் அதற்கான தமிழக அரசின் விதிமுறைகளும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைப்பு ஜனநாயகப் படுத்தப்பட வேண்டும். குறிப்பாக அதிகாரிகள் கையிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்பதோடு கல்வி உள்ளூர் நிர்வாகம் மற்றும் பெற்றோர் அமைப்புகள் மூலம் நடத்தப்பட வேண்டும் என நூலாசிரியர் உரிமைக் குரலாய் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் அளிக்கும் புகார்களுக்கு நீதி வழங்க வேண்டிய தேசிய மனித உரிமை ஆணையங்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதையும் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார் நூல் ஆசிரியர்.
மனித உரிமை செயல்பாட்டாளர்கள், குடிமைச் சமூக அமைப்புக்கள், உரிமைக்காக போராடும் மக்கள் இயக்கங்கள், பெண்ணுரிமை மற்றும் குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர்கள் அனைவரும் அவசியம் வாசித்து அவர்களுக்கான களத்தில் ஊக்கத்துடன் செயல்பட உதவும் நூல் இது.
பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கையில் எப்போதும் என் நூல் தவழ வேண்டும்.
இந்நூலுக்குக் கல்வி உரிமைச் செயல்பாட்டாளர் முன்னாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி அணிந்துரை அளித்திருப்பது பொருத்தமானதாகும்.
தமிழக அரசு இந்நூலினை அனைத்து பள்ளிகளிலும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பாட நூலாக வைக்க வேண்டிய அருமையான நூல் இது.
நூல் அறிமுகம் எழுதியவர்:

MJ. பிரபாகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

