ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் நான் இந்துவல்ல நீங்கள்?? எனும் சிறு நூல் குறித்து…
இது வெறும் 20 பக்கத்தில் கேள்விபதில் வடிவில் வந்துள்ள சிறு நூல்…
ஆனால் சிறுபொறி காட்டை எரிக்கும் என்பது போல விமர்சன கண்ணோட்டத்தோடு இந்து மதம் குறித்த நீண்ட தேடலுக்கு இந்த நூல் நம்மை இட்டுச் செல்லும் வாய்ப்பிருக்கிறது…
இந்து என்ற சொல்லின் பொருள் என்ன?
இந்து என்ற சொல் யாரையெல்லாம் குறிக்கும்?
சைவ வைணவர்கள் இந்துக்களா ?
சங்கராச்சாரியார் கோவிலுக்கு போவாரா?
ஸ்மார்த்த பார்ப்பனர்களுக்கும் ,கோயிலுக்கும் சம்பந்தம் உள்ளதா?
ஆகம வழிபாடு என்றால் என்ன?
தலித்துகள் இந்து மதத்திலிருந்து வெளியேறினார்களா அல்லது வெளியேற்றப் பட்டார்களா இப்படி பல கேள்விகளுக்கு சுருக்கமாக விடையளித்து இருக்கிறார் தொ.பரமசிவன் அவர்கள்…