நாங்கள் வாயாடிகளே : நூல் அறிமுகம் -இரா.சண்முகசாமி 

நாங்கள் வாயாடிகளே : நூல் அறிமுகம் -இரா.சண்முகசாமி 



‘நாங்கள் வாயாடிகளே’

ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில்  மார்ச் 2023ல் ஆசிரியர் சாந்த சீலா அவர்கள் எழுதி வெளியான சிறப்பான புத்தகம் தான் ‘நாங்கள் வாயாடிகளே’.

04.04.2023 பாரதி புத்தகாலயம் ஓங்கில் கூட்ட புத்தக வெளியீட்டில் அவரை சந்தித்தபோது இப்புத்தகத்தை அளித்தார்கள். இந்நூலை ஏற்கனவே அவர் முகநூலில் பதிவிட்ட போதே “வாயாடிகளை வாசித்து அடங்கி விடுகிறேன்” என்றுதான் பதிவிட்டிருந்தேன். தற்போது அக்கட்டுரை உட்பட ஏழு கட்டுரைகள் வாசித்துவிட்டேன். இன்னும் 17 கட்டுரைகள் வாசிக்க வேண்டும். வாசித்த வரை அனைத்து கட்டுரைகளும் சமூகத்தில் நிறைய பீடித்துள்ள கட்டுகளை உடைத்துத் தள்ளியுள்ளது. அதுவும் ‘வாயாடிகளே’ கட்டுரையில் பெண்கள் ஏன் அதிகம் பேசினர் அதற்கான வரலாறு என்ன என்பனவற்றிற்கு மிகச்சிறப்பாக அறிவியல் விளக்கம் கொடுத்திருப்பார்கள். வேட்டைச் சமூகத்தில் தான் மொழி தோன்றியது. அப்போது முதல் குழந்தைக்கு பேசக் கற்றுகொடுத்தவள் தாய். விலங்குகள் வாழும் உலகில் பேசுவதற்கான மொழி ஏன் தேவைப்பட்டது என்பது இப்போது நமக்கு புரிகிறது.

பொதுப்புத்தியாய் கட்டமைக்கும் பலவற்றிற்கு உடைப்பு வேலை கொடுத்திருப்பார். வாயாடிகளை வாசித்தால், வாயாடாமல் விட்டிருந்தால் ஒருவேளை நாமெல்லாம் இந்தக் காலத்திலும் பேசமுடியாமல் தான் இருந்திருப்போமோ என்கிற சந்தேகம் இயல்பாக எழுந்தது.

அதேபோல் பெண்களின் ஆடையில் பாக்கெட் வைக்காதது, உணவில் சமத்துவம், ‘பொட்டை’ என்கிற வார்த்தையின் பின் உள்ள உளவியல் சிக்கல் குறித்த கட்டுரை, சிறுநீர் கழிக்காததன் விளைவு, பொண்ணு கறுப்பா இருந்தா எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கும் இந்த சமூகத்தில் பொதுப்புத்தியாய், கல்வியில் சமமான வகுப்பறை இருக்கா என்கிற கேள்வி’ இப்படி படித்த வரைக்குமான கட்டுரைகளே நிறைய உள்ளத்தைக் கிளறுகிறது. தோழரின் ஆசிரிய வாழ்க்கை அவருக்கு நிறைய கிடைத்த அனுபவமாக இந்நூலை நான் கருதுகிறேன். எழுத்து நடையும் மிக இயல்பாக இருக்கு. அவர் தொடர்ந்து மென்மேலும் கல்வி குறித்த சிக்கல்களை எழுதவேண்டும் என்று அவரை அன்புடன் வாழ்த்துகிறேன். வெகுசிறப்பு!
மனமார்ந்த நல்வாழ்த்துகள் தோழர்!

வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!

தோழமையுடன்

இரா.சண்முகசாமி

புதுச்சேரி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *