நீ என்னை நிராகரிக்கலாம்
ஆனால் நான் நிரப்பிக்கொண்டே இருக்கிறேன்
எனது வரிகளால்
என் இதயம் எப்பொழுதும்
பார்ப்பதையெல்லாம்
கவிதையாக்கிக் கொண்டிருக்கிறது
அது எனக்குள்ளே பாடிக்கொள்கிறது
நான் ஒரு உழவன்
என் பாட்டனும் அப்படியே வாழ்ந்தவன்
உழவனை நீ நிராகரிக்கலாம்
என் கண்கள் மண்களால் ஆனவை
அதில் விளையும் அமுதங்கள்
எத்தனையோ இந்தியனின்
பசியைத் தீர்த்திருக்கின்றன.
கழனியில் களையெடுத்தவன் நான்
அதிகார வேர்களின் ஆழங்களை
என்னால் வெட்டமுடியவில்லை என்று
வருந்தியது உண்டு
வயலில் பறக்கும் என் வசந்தம்
தளர்ந்துவிடவில்லை இதுவரை
புதுவை நகரப் பறவைகளின்
வசந்தம் மாறிப்போய்விட்டது
எங்களால் இயலாமல் போனாலும்
சமைத்துக் கொண்டிருக்கிறோம்
பாதி சமையல் எங்களுடையதாகிறது
இதோ நாங்கள் காப்பாற்றி வருவதெல்லாம்
இந்த மாறிப்போகாமல் இருக்கும்
விதைகளை மட்டும்தான்
அதற்காகத்தான் இவ்வளவு துயரங்களும்
நாங்கள் நேசிக்கிறோம்
உங்களையும் உழவையும்
இந்த உலகத்தைக் கட்டி எழுப்புகிறோம்
பெரும் உணவுக் குவியலால்
அதனால் தான்
நீங்கள் நடமாடுகிறீர்கள் ஒரு நிராகரிப்போடு.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

