இனி வரும் காலங்களில் நாம் தினசரி சாப்பிடுவதைப் போல, உறங்குவதைப் போல, தினசரி நடை பயிற்சி செய்தால் மட்டுமே நாம் உயிர் வாழ முடியும்.
கொரோனா தொற்று நோய் காலத்தில் நாம் அனைவரும் முககவசம் அணிவது அத்தியாவசியமாக இருந்தது.
அதுபோல நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால் நடைபயிற்சி அவசியம்.
உடலில் நோய் ஏற்பட்டு மருத்துவரிடம் சென்றவுடன் அவருடைய ஆலோசியின்படி
நடைபயிற்சி மேற்கொள்ளுவர்கள் தான் இன்றைக்கு அதிகம் உள்ளார்கள்.
உடல் உழைப்பு வெகுவாக குறைந்துவிட்ட நம் வாழ்க்கையில் உடலுக்கு அசைவு கொடுக்க நம்மிடம் உள்ள இலவச கருவி தான் நடைபயிற்சி என்கிறார் மருத்துவர்.
நமது உடலுக்கு தேவையான அசைவுகள் கொடுக்காததன் காரணமாக நமக்கு ஏற்படும் நோய்கள் ஏராளம்.
அவைகளில் பிரதானமானது, ரத்த குழாய்களில் தடிமனாக படிந்துள்ள கொழுப்பு, குவிந்த பானையைப் போல உள்ள தொந்தி, சூரிய ஒளி பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள வைட்டமின் டி குறைபாடு, மூட்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடிதத்தன்மை, உறக்கமின்மை, இதனால் ஏற்படும் உடல் சோர்வு இது போன்ற பிரச்சனைகளை நாம் பெரும்பாலானோர் சந்தித்துக் கொண்டுள்ளோம்.
இதோடு மட்டுமின்றி குழந்தை பருவத்திலேயே நீரிழிவு நோய், இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு, குழந்தையின்மை போன்றவற்றையும் இந்த தலைமுறை சந்தித்து வருகிறது.
நாம் இப்போது விழித்துக் கொள்ளவில்லை என்றால் அடுத்த தலைமுறை, கருப்பைக்குள் இருக்கும் கருவுக்கு கூட பல நோய்கள் வரும் என்ற சூழலுக்குத் தள்ளப்படுவோம்.
நடைபயிற்சி என்பது நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டத்தையும் பிராண வாயுவை ஏற்படுத்தி நம் உடல் சிறப்பாக செயல்பட வைக்கிறது.
தொடர்ந்து நடை பயிற்சி மேற் கொள்ளுவர்களுக்கு ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
சிறு வயது முதலே விளையாட்டுக்களுடன் கூடிய நடை பயிற்சி இருந்தால் நம் முதுமையை தள்ளிப் போகும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது என்கிறார் மருத்துவர்.
எனவே அதிகாலை எழும் சூரிய கதிர்களுடன் அதுபோன்று மாலையில் மறையும் சூரிய கதிர்களுடன் உற்சாகமாக நடந்து நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
நடை பயிற்சி என்றுமே நம் ஆரோக்கியத்தை படம் பிடித்து காட்டும் நலக் கண்ணாடியாகும்.
நூல் எண் :”நடை பயிற்சி”
நூலாசிரியர் : மருத்துவர் வி. விக்ரம்குமார்
விலை : ரூபாய் 20/-
வெளியீடு : நன்செய் பிரசுரம்
திருத்துறைப்பூண்டி – 614711
தொடர்பு எண் : 9566331195
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.