கவிதை: நடுப்பக்கத்தில் - ஜெயஸ்ரீ பாலாஜி

கவிதை: நடுப்பக்கத்தில் – ஜெயஸ்ரீ பாலாஜி

 

 

 

காலம் தின்றுவிட்டு
மிச்சம் வைத்ததை
கடமைகள் தின்றுவிட
தினமும் என்னைத் தேடி
அலைந்து திரிகிறேன்

யாரோ என் தோளைத் தொட்டு

“ஹேப்பி நியூ இயர்… ”
என்கிறார்கள்…
தேடுதலை நிறுத்தி விட்டு
நானும் பரஸ்பரம் கை கொடுத்து
“விஷ் யூ த ஸேம்… ” என்றேன்

இரவு கழிந்தது விடிந்தது
மீண்டும் தொலைதலும் தேடலும்
தொடர்ந்தது
ஒரு புத்தகத்தின் நடுப்பக்கத்தில்
என்னை நான் ஒளித்து வைத்தது மறந்து போனது

என்னை நான் கண்டெடுத்த
பக்கங்களில் நீங்களும் இருக்கிறீர்கள்
ஒரு புத்தனும் இருக்கிறான்…

– ஜெயஸ்ரீ பாலாஜி 

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,  கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *