நூல் அறிமுகம்: ஆயிஷா இரா.நடராசனின் ‘நாகா’ நாவல் – கி.ரமேஷ்நூல்: ‘நாகா’ நாவல்
ஆசிரியர்: திரு.ஆயிஷா நடராசன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 60.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/naga-ayisha-era-natrasan/

நாகா

அன்பு நண்பர்களே,

இந்த வருடம் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று என்னை ஒரு ஆளாக்கிய எனது என்.சி.சி. ஆசிரியர் திரு.எஸ்.சுப்ரமணியம் குறித்தும், எனது சாரண ஆசிரியர் திரு.பிச்சை ஐயா குறித்தும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன். அதாவது, என்னை ஒரு நல்ல, ஒழுக்கமான மனிதனாக்கியதில் சாரண இயக்கத்துக்கும், என்.சி.சி.க்கும் பெரிய பங்கு உண்டு.

குறிப்பாக நான் இன்றளவும் கடைப்பிடிக்கும் கொள்கைகளான பிறருக்கு முடிந்த வரை உதவுதல், சிக்கனமாக இருத்தல், இயற்கையுடன் முடிந்த வரை ஒன்றி இருத்தல் போன்ற பல ஒழுக்கங்கள் நான் சாரண இயக்கத்தில் கற்றவையாகும். அவைதான் இன்றளவும் என்னை மனதளவில் சாரணனாக வைத்துள்ளன. என்னால் இப்போது நேரடியாக இயக்க வேலைகளில் ஈடுபட முடியவில்லை என்றாலும், நான் என்னை ஒரு சாரணனாகவே கருதுகிறேன். நிச்சயமாக மீண்டும் ஒருநாள் நான் சாரண சீருடையை அணிந்து மீண்டும் சேவையில் ஈடுபடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.இது ஒருபுறம். நான் இன்று இந்தப் பதிவை ஏன் இடுகிறேன்? காரணம் இருக்கிறது. சாரண இயக்கம் என்றால் பலருக்கும் தெரியாத ஒரு நிலையே இருக்கிறது. அப்படியே தெரிந்திருந்தாலும், அதில் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன, அது எந்த அளவுக்கு வாழ்க்கையுடன் ஒன்றி இருக்கின்றன என்பதெல்லாம் தெரியாமல்தான் இருக்கிறது. இவை அனைத்தையும் ஒரு நாவலாக, அழகாக எழுதினால் எப்படி இருக்கும்? நன்றாக இருக்கும் இல்லையா? அதைத்தான் குழந்தைகளுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற திரு.ஆயிஷா நடராசன் செய்துள்ளார். அவர் எழுதியிருக்கும் ‘நாகா’ என்ற நாவல் ஒரு சாரண வாழ்வில் இருக்கும் அனைத்து ஈர்ப்புகளையும் நம்மிடம் கதை வடிவில் கொண்டு வந்திருக்கிறது. எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை சாரண இயக்கம் குறித்து வேறு ஒரு முழுமையான நாவல் வந்ததாகத் தெரியவில்லை. இது ஒரு சிறந்த முயற்சியாக இருக்கிறது.

இந்த நாவலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இது தவிர பாரதி புத்தகாலயம் ஏராளமான குழந்தைகள் கதைகள், அறிவியல் என ஏராளமான புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. வரும் 3ஆம் தேதி வரை அனைத்து புத்தகங்களுக்கும் பாரதி புத்தகாலயம் 50% கழிவு அறிவித்துள்ளது. எனவே ரூ.150 விலையுள்ள நாகா நாவல் ரூ.75க்கே கிடைக்கும். இந்த அரிய வாய்ப்பை சாரண இயக்க சகோதரர்கள், சகோதரிகள் தவற விடக் கூடாது என்பது எனது அவா. எனவே அனைவரும் பாரதி புத்தகாலயத்துக்கு 3ஆம் தேதிக்குள் ஒரு விசிட் அடித்து நாகா நாவலையும் உங்களைக் கவரும் பிற புத்தகங்களும் வாங்கிக் கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இத்துடன் நாகா நாவலின் அட்டைப் படத்தையும், பாரதி புத்தகாலயம் கேட்டலாகையும் அனுப்புகிறேன். பயன்படுத்திக் கொள்ளவும்.

பாரதி புத்தகாலயம் கடை இருக்கும் இடம்: இளங்கோ சாலை, தேனாம்பேட்டை. இது திமுக தலைமையகமான அறிவாலயத்துக்குப் பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கை ஒட்டிய சாலை. அனைவரும் வருக.

கி.ரமேஷ்

நூல்: ‘நாகா’ நாவல்
ஆசிரியர்: திரு.ஆயிஷா நடராசன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 60.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/naga-ayisha-era-natrasan/