செவ்வந்தி பூப்போல்
செவ்விய பாதங்கள்!
செந்தளிர் விரல்கள்
சத்தமின்றி தூளியில்!
சுத்தமான இதயமுடன்!!
சத்தான தாய்ப்பால்
நித்தம் நித்தம் உண்டு!
நித்திரை நிறை கொண்டு!
எத்தனை நாளைக்கு….
இத்தனை சுகமுண்டு?!!
மூன்றாவது அகவையிலே
மூக்கொழுக பள்ளிசென்று!
மூட்டை சுமக்கும் கூலி போல
மும்முரமாய் கல்விகற்று
முழுப்பரிட்சை பல எழுதி!!
கல்லூரி கலாச்சாலை
கட்டுகட்டாய் புத்தகங்கள்!
கடைசியில் ‘பட்ட’மொன்றை
கையில் ஏந்தி,
கவலையுடன் வேலைதேடி!!
கிடைத்த வேலையில்
கிடந்து உழன்று!
கல்ஃப் நாடு, யுஸ் என
கண்ட கண்ட நாட்டுக்கு
கடல்தாண்டி சென்று!
கல்யாணம் செய்துகொண்டு
கட்டியவளி(னி)டம் சண்டையிட்டு காது கருக வசவு கேட்டு!
கடமைக்கு பிள்ளை பெற்று
கல்விகொடுத்து கரைசேர்த்து!
அப்பாடா! போதுமென
அறுபதுகளில் அலைக்கழிந்து!
ஆலையிட்ட கரும்புபோல்
அடிப்பாதங்கள் கசங்கிதுவண்டு,
ஆடிப்போய் கோலூன்றி!
ஆண்டவன் அடிசேர!
ஆசையுடன் காத்திருந்து,…
அடிகள் “நாலிரண்டு” சுமந்துசென்று
அடக்கம் செய்யும் அந்த நாள்வரை!
அடிகளே.. உமக்கேது ஓய்வு?
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.