நல்லாசிரியராக திகழ்வது எப்படி – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர்: நல்லாசிரியராக திகழ்வது எப்படி
ஆசிரியர்: கமலா கந்தசாமி
வெளியீடு: அறிவு பதிப்பகம்,2019
பக்கங்கள்:100
விலை:120
நண்பன் என்றாலே நல்ல நண்பன் தான்.அதிலென்ன நல்ல நண்பன் கெட்ட நண்பன் என்ற சினிமா வசனத்தை போல,ஆசிரியர்கள் அனைவரும் நல்லாசிரியர்கள் தான் என்ற கருத்தை இப்புத்தகத்தில் காணலாம்.
காலம் காலமாக சமூகத்தில் பொதுவாக பெரும்பாலும் கல்வி புகுட்டும் ஆசிரியர்கள் தான் மக்களுக்கும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சுயமாக முன்னேறுவது எப்படி என்று ஊக்கம் தரும் வகையில் ஆக்கமாக சில புத்தகங்களை எழுதுவார்கள்.
அதற்கு மாற்றாக இந்த புத்தகம் ஆசிரியர்களுக்கே அறிவுரை வழங்கப்பட்ட அளவில் சுயமாக முன்னேற்றமடைவது எப்படி என்கிற வகையில் அறிவுரை அல்ல சில விவரங்களை அள்ளித் தந்திருக்கிறார் ஆசிரியர்.
ஆசிரியர் கமலாகந்தசாமி “நல்லாசிரியராகத் திகழ்வது எப்படி?” என்ற நூலை எழுதிய அவர்கள் 1968-இல் எனது 18-ஆம் வயதில் ஆசிரியராகப் பணியேற்று 2006-இல் 40 ஆண்டுகள் கல்வித்துறையில் தலைமை ஆசிரியர், உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் எனப் பலபணிகளில் உழைத்தவர். ஓர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து பணியாற்றுகின்றார்.
கல்வித்துறையில் அவர் கற்றது, பெற்றது, உணர்ந்தது, தெளிந்தது, யோசித்தது எனப் பல்வித உணர்வின் உந்துதலால் நல்லாசிரியனாகத் திகழ்வது எப்படி? என்கிற இந்த நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
17.12.1972-இல் ஆனந்தவிகடன் வாரஇதழில் வாழ்க்கை சுமை என்கிற கவிதைமூலம் எழுத்துலகிற்கு ஒரு அறிமுகமாகி, திருத்துறைப்பூண்டி, எஸ். கந்தசாமி என்கிற பல்வேறு பெயர்களில் 300 சிறுகதைகள், 5 நாவல்கள், 2 தொடர்கதைகள், 100 கவிதைகள், 1000-க்கும் மேற்பட்ட துணுக்குகள், பலகட்டுரைகள், வானொலி சிறுகதை, டி.வி, தொடர் கதைவசனம் என இலக்கியத்தின் எல்லாப்பக்கத்தையும் தொட்டுப் பார்த்தவர்.
பல்வேறு மிகப்பெரிய பதிப்பகங்கள் வாயிலாக ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்துறைப் பயன்மிக்க நூல்களைப் படைத்தவர்.
ஓர் ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் Dr. ராதா கிருஷ்ணன் தான். இவருக்குக் காணிக்கை செய்வதால் இந்நூலுக்கும் சிறப்பு சேரும்.”என்று கூறி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார் கமலாகந்தசாமி அவர்கள்.
உலகத்தில் மக்கள் மேற்கொள்ளும் பணிகளில் ஆசிரியர் பணி உயர்வானது. புனிதமானது, நினைவுகளில் அகக்கண்ணை ஞானக்கண்ணைத் திறப்பவர் ஆசிரியர். மாணவர்களின் அறியாமையை நோக்கி நல்வழிப்படுத்துபவர் ஆசிரியர்.
பிள்ளைகளை முதன்முதலில் பள்ளியில் சேர்க்குங்காலை ‘உபநயனம்’ என்ற நிகழ்ச்சி சில சமூகத்தாரிடம் தொன்றுதொட்டு நடத்தப்படுகின்றன.
கல்வியால் சிறப்புற்று, ஆசிரியர் பணியை மேற்கொண்டு உலகம் போற்றும் புகழ்பெற்ற மேதைகளான முன்னாள் குடியரசுத் தலைவர்கள் டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்களையும், அணுவிஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களையும் நினைவு கூர்வோம்.
ஒருவர் வாழ்க்கையில் எந்தநிலையில் வாழ்ந்த போதும் இளமையில் தன் ஆசிரியர் கூறிய அறிவுரையும் வழிகாட்டுதலும் அவ்வப்போது ஒவ்வொருவராலும் நினைக்கப்படும் பெருமைக்குரியன.
நல்லாசிரியராகத் திகழ்பவர். பொன்மலர் நாற்றம் பெறுவதுபோல். எஞ்ஞான்றும் போற்றப்பெறுவர்.
1. கல்வியின் பெருமை
2. ஆசிரியர் பெருமை
3.பெருமைப்படுங்கள்
4. தகுதியை உயர்த்திக்கொள்ளுங்கள்
5.எப்போதும் படித்துக்கொண்டே இருங்கள் .
6.எதிலும் முன்மாதிரியாக இருங்கள்
7.வீட்டைமறந்து பள்ளிக்குச் செல்லுங்கள்
8. நீங்கள் ஒரு சகலகலாவல்லவர்
9. பாலர்சபை மாணவர் மன்றம்
10.விளையாட்டு விழா போட்டிகள்
11. பள்ளி விழாக்கள்
12.ஆண்டுவிழா
13. கலை நிகழ்ச்சிகள்
14. பள்ளியில் அமைச்சரவை
15. பாடக்குறிப்பு
16. கற்றல் – கற்பித்தல் உபகரணம்
17. நகைச்சுவை உணர்வு.
18. குட்டிக்கதைகள்
19.காலை பிரார்த்தனை
20. மாலைநேர நாட்டு வாழ்த்து
21.நீங்கள் ஒரு புதிய சமுதாய சிற்பி
22.புதியபாடல்கள்
23.எளிய பரிசோதனைகள்
24.களப்பயணம்
25. பள்ளி ஒரு குடும்பம்
26.ஆங்கில போதன
27. பொது அறிவு
சொல்வது
28.எழுதுதல்
29 . கட்டுரைப்பயிற்சி
30.வாய்மொழிப்பயிற்சி
31.நல்ல வாசிப்பு
32. கையெழுத்துப்பயிற்சி
33.தேர்வுகள்34. தேர்ச்சி அட்டை
35. பெற்றோர் சங்கம், கல்விக்குழு
36. மன நலம்
37. பள்ளியில் உடல்நலம் நூலகம்
38. உங்கள்வகுப்பறை
39.மாணவர்ஆய்வுகுறிப்பு.
40. நீதிபோதனை
41. நல்ல உதவி ஆசிரியர்
42. நல்லதொரு தலைமை
43. பள்ளி வசதிகள்
44. பணியிடைப்பயிற்சிகள்
45. பள்ளியில்தோட்டம்
46. குடிநீர் கழிவறைவசதிகள்
47. சத்து உணவில் கவனம்
48.புரவலர் திட்டம்
49மாணவர்களிடம்சேமிப்புப் பழக்கம்
50. பள்ளி நிர்வாகம்பதிவேடுகள்
51. சாரணர் இயக்கம் இளைஞர் செஞ்சிலுவைச்சங்கம் சமூகசேவை
52.இறுதியாய் இன்னும் சில
உலகில் வாழும் மக்கள் வெவ்வேறு வகையான தொழில்களைச் செய்துகொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அவற்றுள் உழுவுதொழிலே உயர்வானது என்பதை நாம் அறிவோம். ஆசிரியத்தொழிலோ மேலான, புனிதமான, சிறந்ததொழிலாகத் தொன்றுதொட்டு உலகத்தோரால் போற்றப்பட்டு வருகின்றது; பசிப்பிணிக்கு மருந்து உணவு; அறியாமைப்பிணிக்கு மருந்து கல்வியே.
பெற்றோருக்கு அடுத்த நிலையில் போற்றப்படுபவர் ஆசிரியர் எல்லாத்துறையிலும் தேர்ந்து அறிவும் ஆற்றலும் பெற்று மாணவர்களின் ஆற்றலை வளர்ப்பதில் அக்கறை கொண்டவரே நல்லாசிரியர்.
ஒருவர் நல்லாசிரியராக விளங்க, மேலும் மேலும் கற்றல், கற்பிக்கும் பொருளில் தெளிவு, திறமையான கற்பித்தல், பல்துறை அறிவு, கதை, கவிதை, நகைச்சுவை – வெளிப்படுத்தும் திறன் போன்ற ஆற்றல்கள் இன்றியமையாதன என்றும் இந்நூலால் அறியமுடிகின்றது.
கல்வியின் இன்றியமையாமை குறித்தும் புத்தகங்களின் மேன்மை பற்றியும் பன்னாட்டு அறிஞர்கள் கூறியுள்ள கருத்துக்களை மிகுதியாக ஆசிரியர் மேற்கோள்களாகக் குறிப்பிட்டுள்ளமை ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்குச் சிறந்த சான்றாக அமைகின்றது.
உதாரணத்திற்குச் சில; “பெற்றபிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது. கல்வி ஆபரணமல்ல, ஆடை”
கல்வி முக்கியமானது மட்டுமல்ல; வியத்தகு மாற்றங்களையும் உண்டுபண்ணவல்லது.”
“புத்தகங்கள் காலமென்னும் ஆழ்கடலில் கட்டப்பட்டுள்ள கலங்கரை விளக்கங்கள்.”
“நல்ல புத்தகம் படிப்பது சென்ற நூற்றாண்டின்சிறந்த அறிவாளிகளுடன் பேசுவதற்கு ஒப்பாகும்.”
இந்நூல், ஆசிரியர்களுக்குச் சிறந்த ஒரு வழிகாட்டி நூலாக அமையும், ஆசிரியர்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை ஏற்றுக் கடைப்பிடித்தால் நிச்சயமாக நல்லாசிரியர் என்ற தகுதியைப்பெறுவர். அத்தகையோர் கல்வித்துறையால் அடையாளங்காணப்பட்டுத் தமிழக அரசின் டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதையும் பெறக்கூடிய வாய்ப்பும் அவர்களுக்குக்கிட்டும் என்பது உறுதி.
பணிபுரியும் ஆசிரியர்களும் பணியேற்கவிருக்கும் ஆசிரியர்களும்,பெற்றோர்களும், சான்றோரும். கல்வித்துறையினரும் இந்த புத்தகத்தை வாசித்து பயன்பெரும் வகையில் அடங்கும்.
பல அத்தியாயங்களில் பலவிதசெய்திகள் பேசும் பயன்மிக்க நூலாகும். ஓர் ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும். எவ்வாறு இருத்தல் கூடாது? என்பதை இதில் சொல்லப்பட்டுள்ளது. பணியில்,பள்ளியில், சமூகத்தில் எப்படித் திகழ்வது என்பதைச் சுட்டிக்காட்ட பட்டுள்ளது.தம்மையும் உயர்த்தித் தம்மாணவனையும் உயர்த்தி, தமது
தாய்நாட்டையும் உயர்த்தும் அற்புதப்பணி ஆசிரியர் பணி என்பதை உணர முடியும்.
தி. தாஜ்தீன்
தி கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி
ஆவணியாபுரம்,
ஆடுதுறை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.