நூல்: என் காலடித்தடங்கள்
ஆசிரியர்: நாமக்கல் நாதன்
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.150
காலடித்தடங்கள் என்ற தலைப்பில் நாமக்கல் நாதன் அவர்கள் தன் வாழ்க்கையின் சில பகுதிகளை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தன்னைப் புகழ்தலும் தகும் புலவோர்க்கே என்பது இந்த மண்ணின் மரபு ..அதனால் எழுத்தாளர்கள் தங்களை அறிமுகப் படுத்தும் விதமாய் பதிவுகளை நூல்களில் கொண்டிருக்கலாம் என்பது தேவையாகத்தான் இருக்கிறது .அந்த வகையில்தான் நாமக்கல் நாதன் அவர்களும் தன் வாழ்க்கையில் சின்ன வயதில் ஏற்பட்ட அனுபவம் தழும்புகளை, படிப்பினைகளை ,வாழ்க்கையின் சிரமங்களை சுருக்கமாக இந்த நூலில் கொண்டு வந்திருக்கிறார் ,
கடுகளவு கவலை என்றால் கண்ணீர் குணமாகிறது கண்கள் ,அதுவே மழை அளவு வந்தால் மனம் கூட மறந்து விடுகிறது என்ற கண்ணதாசன் வரிகளை ஓரிடத்தில் சுட்டிக்காட்டுகிறார் ,அப்படித்தான் மழையளவு சிரமங்கள் என்னுடைய வாழ்க்கையில் வந்து இருக்கிறது, அதனால் மனம் மரத்துப் போய்விட்டது என்கிறார் ,அந்த அனுபவங்களை எல்லாம் மிகவும் வெளிப்படையாக சொல்கிறார் .இவ்வகை அனுபவங்கள் இன்றைய தலைமுறையில் உள்ள எழுத்தாளனுக்கு வாய்க்காது ஆனால் நாமக்கல் நாதன் வாழ்க்கையில் அந்த கால சூழல் அப்படி அமைந்துவிட்டன அதை தவிர்க்க முடியாது .தன் தந்தை பற்றியும் தன் திருமணம் பற்றியும் தன்னுடைய உறவுகள் பற்றியும் பலவற்றை இதில் பதிவு செய்துகொண்டிருக்கிறார் பெரும்பாலும் இலக்கிய நண்பர்கள் பற்றியெல்லாம் அதிகமாகவே சொல்லியிருக்கிறார் என்று கூட சொல்லலாம்.
இந்த நூலில் இவ்வகை அனுபவங்கள் மட்டுமில்லாமல் நாமக்கல் நாதனுடைய பல நூல்களைப் பற்றி பல எழுத்தாளர்கள் எழுதியக் கட்டுரைகள் ,அவர்கள் எழுதிய கடிதங்கள் இணைத்திருக்கிறார் .அது இவரைப்பற்றி புது வாசகன் சரியாக அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. அதே போல இந்த நூலில் இடம் பெற்ற நேர்காணல்கள் அவனுடைய இன்னொரு முகத்தை சரியாகக் காட்டுகின்றன. திராவிட சார்பாக இருந்தது இலக்கியத் துறைச் சார்ந்தவர்கள் அவரோடு நட்பு கொண்டிருந்தது போன்றவைதான் இவருடைய இலக்கிய வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கிறது. ஒரு சிறந்த படைப்பாளி நல்ல வாசிப்பவனாக இருத்தல் வேண்டும் என்பதை தொடர்ந்து நேர்காணல்களில் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
மரபுக் கவிஞர் என்ற வகையில் தொடர்ந்து அவ்வகையிலேயே பயணித்திருக்கிறார் நம் முன்னோர்கள் விட்டுச் சென்றிருக்கிறர் தொல் மரபுகளை பொன்னேபோல் போற்றி வருபவன் அதற்காக மரபுக்கு மனம் வைத்தான் அது ஏதுவாக இருந்தது அது மூச்சுக்காற்று .புதுக்கவிதை மோகம் வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது .அது முதுகை தடவிச் செல்லும் சாதாரண காற்று என்கிறார் .
சமூகத்தில் இவருடைய என் ஆசான் சுரதா என்ற நூலில் கூட இலக்கிய நண்பர்கள் பற்றி விரிவான அனுபவங்களை அளித்திருக்கிறார் பூமிக்குள்ளே வேறு ஒன்றாமல் எந்த தாவரமும் புதுவசந்தம் பரப்பியது இல்லை. தமிழன் மட்டும்தான் அற்ப சந்தோஷம் மட்டும் அடிமையாகி போனான் .உணவு உடை உணர்வுகள் யாவும் ஆங்கில கலாச்சாரத்தின் கூறுகளாகிவிட்டன. மொழிதான் ஒரு இனத்தின் முதல் அடையாளம் .அந்த இனத்தின் கலாச்சார மரபுகளை அடுத்து அடையாளங்கள் இவை இரண்டும் இழந்த பிறகு அந்த இனம் தனது நாட்டை கூட தக்கவைத்துக் கொள்ள இயலாது .இதில் எச்சரிக்கை இல்லாத தமிழகம் ஒரு நாளும் மேம்பட போவதில்லை அறிவு சார்ந்த உறவுகள், உணர்வுகள் வளர்ந்தால் மட்டும் போதா, பண்பு சார்ந்த கல்விதான் மிக அவசியமாகத் தேவை என்று அவர் குறிப்பிட்டார் ஒரு நேர்காணலில் .
அதுதான் அவருடைய இன்றைய செய்தியாக இருக்கிறது .தன் வாழ்க்கையின் செய்திகளை ஒரு நூலில் திறம்பட எழுதி இருக்கிறார் நாமக்கல் நாதன் ஒவ்வொரு படைப்பாளியும் தன் அனுபவங்களை இந்த வகையில் எழுதி பதிவு செய்ய வேண்டும் என்பதுகூட அவசியம் .
( Rs 160 ., 150 பக்கங்கள் . காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு )

