ச.தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan) எழுதிய நமக்கான குடும்பம் (namakkana kudumbam) - நூல் அறிமுகம். பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

நமக்கான குடும்பம் (namakkana kudumbam) – நூல் அறிமுகம்

நமக்கான குடும்பம் (namakkana kudumbam) – நூல் அறிமுகம்

பெண் பிறப்பதில்லை.. உருவாக்கப்படுகிறாள்!! என்பது நிதர்சனமான வார்த்தைதான். பல சமூக சிக்கல்களிடையே தம்மை மெருகேற்றிக் கொண்டு பெண்கள் மிளிரும் போது தான் நமக்கான குடும்பம் (namakkana kudumbam) வளமாக அமைகிறது.

ஏன் ஆண்களிடம் அந்த பொறுப்பில்லையா என்று கேட்கலாம். உண்மையில் சொல்லப் போனால் நம் சமூக கட்டமைப்பில் பெண்கள் அச்சாணியாய் நிலை கொண்டுள்ளனர்.

ஆனால் மதங்களும் குடும்பமும், அரசியல் கலாச்சார நிறுவனங்களும் வரலாற்று ரீதியாகப் பெண்ணை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தயாரிக்கிறது. *அதற்குத் தக ஆண்களையும் தான்*.

ஆண் குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்தான உணவு *பெண் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை* “உண்டி சுருக்குதல் பெண்டிற்கழகு” என்று நம் அம்மாக்களின் மண்டையில் ஏற்கனவே ஏற்றி வைக்கப்பட்டுள்ளது போலும்.

பெண் குழந்தை வயதுக்கு வந்து விட்டால்,வீடு இருக்கிற இருப்புல நீ வேற உக்காந்துட்டியா?* என்று அதை அவளுடைய குற்றம் போல் பேசும் பழக்கம் நம் ஊர்களில் இருக்கிறது.

ஆரோக்கியமான பெண் குழந்தைகள் 14 முதல் 15 வயதில் பருவம் அடைவர். மகள் வயதுக்கு வந்து விட்டால் தகப்பனாரை பார்த்து ‘என்ன தாத்தா ஆயிட்டீங்களாமே’ என்று விசாரிக்கும் பழக்கம் உண்டு.

ஒரு பெண் குழந்தை உடல் ரீதியாக ஒரு மாற்றம் அடைகிறாள். ஆனால் நம் சமூகம் அதை குழந்தை பெற தயாராகி விட்டது போல நினைக்கிறது.* இது ஆபத்தான போக்கு…

குடும்ப உறவில் தம்மை இணைத்துக் கொள்ள உடல் வளமும் மனவளமும் தேவை உடலைப் பற்றிய போதிய விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னரே இருபாலருக்கும் திருமணம் முடித்து வைக்க வேண்டும். ஆனால் மாற்றாக பெண் குழந்தைகள் வயது பாராமல் திருமணம் முடித்து வைக்கப்படுகின்றனர்.

இந்த நினைப்புதான் 15 முதல் 16 வயது பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கத்துக்கு காரணமாக இருந்திருக்கிறது. பெண்ணைப் பற்றி நெகிழ்ந்து பேசியிருக்கும் நூலாசிரியர் *நமக்கான குடும்பத்தை* பற்றி அருமையாக எழுதியிருக்கிறார் .

சோறு பொங்கி சாப்பிட்டு டிவி பார்த்து தூங்கும் இடங்களாக மட்டும் குடும்பம் இல்லாமல், அறிவு வளரும் இடங்களாகவும் மாற வேண்டும். புத்தகங்களும் வாசிப்பும் குடும்ப வாழ்வின் அன்றாடமாக வேண்டும். சமூகம் தான் குடும்பத்தின் குணத்தை, கடமைகளை தீர்மானிக்கிறது. எனவே நமது குடும்பங்கள் சமூக மாற்றத்திற்கான போராளிகளை தயாரிக்கும் பயிற்சி பட்டறைகளாக மாற வேண்டும் .

அப்படியான குடும்பத்தை உருவாக்குவதில் பெண்களை முன்னிற்க வேண்டும். ஆண்கள் மனமாற்றம் பெற பெண்களின் முயற்சியும் போராட்டமும் அடிப்படையாக அமைய வேண்டும். பெண் விடுதலைக்கு தமிழ்ப்பெண்கள் செய்யத்தக்கது என்ற கட்டுரையில் மகாகவி பாரதியார்* எழுதிய வரிகளையும் பதித்துள்ளார்.

” சகோதரிகளே ! நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனர்களாகவும், தந்தை பாட்டனாகவும், கணவன் காதலராகவும், வாய்த்திருக்கின்றனர். இவர்களே நமக்குப் பகைவர்களாய் மூண்டிருக்கையிலே இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டும் என்பதை நினைக்கும் போது என்னுடைய மனம் குருச்சேத்திரத்தில் போர் தொடங்கிய போது அர்ஜுனனுடைய மனது திகைத்தது போல திகைக்கிறது.

ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்காத காரியம். அது பற்றிய சாத்வீக எதிர்ப்பினால் அவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன் .அந்த சாத்வீக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்க தொடங்க வேண்டும் எனில் இந்த காலமே சரியான காலம். இந்த வருஷமே சரியான வருஷம் இந்த மாசமே சரியான மாசம். இன்றே நல்ல நாள். இந்த முகூர்த்தமே நல்ல முகூர்த்தம்.
என் மீசைக் கவி.

2019 ஆம் ஆண்டில் என் தந்தையின் மணிவிழாவில் அனைவருக்கும் அன்பளிப்பாய் வழங்கிய நூல்.

நூலின் தகவல்கள் : 

நூல் : நமக்கான குடும்பம் (namakkana kudumbam)
ஆசிரியர்: ச. தமிழ்ச்செல்வன் அவர்கள்
பதிப்பகம்: பாரதி புத்தகா‌லயம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/namakkana-kudumbam/

 

நூல் அறிமுகம் எழுதியவர் : 

யாழ்.மாரியப்பன்
கும்பகோணம்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *