Nambikkai ShortStory By Shanthi Saravanan. நம்பிக்கை குறுங்கதை - சாந்தி சரவணன்




அண்ணாநகர் கோல்டன் ஜூப்ளி, பால்கனியில் மாஸ்க்கோடு ஒரு கையில் காபி மற்றோரு கையில் ‌அன்றைய நாளிதழ் பார்த்துக்கொண்டு இருந்தாள் நித்யா.

நாளிதழின் எந்த பக்கம் திருப்பினாலும் கொரானா செய்திகள் தான் நிரம்பியிருந்தது. நாளிதழ் ஒரு கண்ணும், வெறிச்சோடி போயிருந்த அடுக்கங்களின் வழித்தடத்தை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள். அந்த மயான அமைதியை இனிய ‌மழலையரின் உரையாடல் அவளின் கவனத்தை ஈர்த்தது.

“டேய் சாய் என்னடா செய்ற”, என்று யாழிசை W பிளாக் இரண்டாம் மாடி பால்கனி கம்பிகளின் மேல் நின்றுக்கொண்டு மாம்பழத்தை சுவைத்துக் கொண்டே கேட்க.

“நானும் ‌தம்பியும் கார் விளையாட்டு விளையாடுகிறோம்” என்றான் சாய், ‌ Y பிளாக் பால்கனி கம்பிகளின் மேல் நின்றபடி.

“என்ன காருட?”

“ஹாட்வில்ஸ்” -.

“காட்டு”, என‌ ஆர்வமாக ஜன்னலின் வழியாக கண்களை விரித்து பார்த்தாள் யாழிசை.

சாய் ஒரு கையில் பால்கனி கம்பியை பிடித்துக்கொண்டு ஒரு கையால் ரெட் கலர் காரை கம்பியின் வழியே வெளியே நீட்டி. “தெரியுதா… ரெட் கலர்” என்றான்

பக்கத்தில் அவன் தம்பி ராமுவும் என்னது “ஆரஞ்சுகலர் கார்” என‌ கத்தினான்.

நல்லாயிருக்கு டா

ஸ்கூலுக்கு காரில் போலாமா

ஓ போகலாமே!

ஆனால் இப்போதான் ஸ்கூலே இல்லையே!

சரி கொரோனா லாக் டவுன் போயிடும். அப்போ நம்ம போலாம்

கொரோனா எப்போ போகும்

“சிக்கிரமா போயிடும். காய்ச்சல் வந்த ஒன் வீக்ல போதுயில்ல அது மாதிரி”

“அப்படியா!”

“ஆமாம். அப்போ போலாம், . சரியா.”

“சரிடா”

“ஜன்னல்களில் மழலைகளை சிறை வைத்துவிட்ட இந்த சமூகத்தை என்னவென்று சொல்வது.

ஒய்யாமல் கொரோனா அச்சத்தை விதைத்து கொண்டேயிருக்கும் ஊடகங்கள், நாளிதழ்களை விட நம்பிக்கையுட்டும் இந்த மழலையரின் உரையாடல் ‌கேட்பதே நலம் ‌என நாளிதழை மடித்து வைத்துவிட்டு மழலையின் மொழியை ரசிக்க துவங்கினாள் நித்யா.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *