மொழிபெயர்ப்புக் கவிதை: *எனக்குப் பிடித்த கவிதை* – மாராத்தியில் : நாம் தேவ் தஸால் | தமிழில் : வசந்ததீபன்எனக்குப் பிடித்த கவிதை
____________________________________

எனக்குக் குடியேற
தனியாக
சுதந்திரத் தீவு இல்லை
புராணங்களின் தெய்வீகப் பெண்களை விடவும் அதிக அழகுள்ள வீனஸ்
அல்லது ஜூனோவாக இருக்கிறாய்
டயானாவாக இருக்கிறாய் அல்லது மடோனாவாக…
நான் அவளின் தேகத்தின் மேலிருக்கும் பளபளக்கும் ஆடையை குறைத்திருக்கிறேன்.

எனது பிரிய கவிதையே ,
நான் ‘ஏகோல்-தி-போர்ஜாட்’ மாணவர் அல்ல
அனுபவப் பள்ளியில் படித்து
நான் வாழக் கற்றுக் கொண்டேன், கவிதை செய்வது : சி வெளியேற்ற

இது தவிர மற்றும்
மனிதர்களைப் போலவும்
சிற்சில
பூஜ்ஜிய உணர்வால் வானத்தின் கீழ் அலைவது
எனக்கு நல்லதாக இல்லை.

மேகங்களின் அழகான வடிவங்கள்
வானத்தில் நகர்ந்து
முன்னே வந்து _ போவதைப்
பார்க்கையில் நிறைவாகிறது
என் அந்தரங்கம்

நான் புத்துணர்ச்சி பெறுகிறேன்,
கவனித்துக் கொள்கிறேன்
சமகால வாழ்க்கையை
சமூகமயமாக்க.

தமனிகள் வழியாக பாயும் இரத்தத்தின் பெரும் எழுச்சி,
படபடக்கும் தமனி மீது
விரல் வைப்பது எனக்கு
நல்லதாகிறது.

எந்த ரொட்டி என்னை நிரந்தரமாக துன்புறுத்தியது
அந்த ரொட்டி என்னை தோற்கடிக்க முடியவில்லை,
நான் விளைவித்து இருக்கிறேன்
வாழ்வின் சிரத்தையை மற்றும் எழுதி இருக்கிறேன் நான்
வாழ்வின் சுத்த _ தோல்வியற்ற
மனித கண நிறைவை
என்னுடைய துக்கம் தவறுகள் _ மறந்திட
கவிதையின் அப்படிப்பட்ட வரிகளை
எழுதிடும் முயற்சிகள் செய்தேன்
நான் எப்பொழுதும் .

உலகியலின் விரலைப் பிடித்துக் கொண்டு,
நான் சைதன்யாவிடம் சென்றேன்,
ஆனால்
அங்கு மன ஈடுபாடு ஏற்படவில்லை எனக்கு ,
அதன் விரலைப் பிடித்து
நான் மீண்டும் உலகியலின் பக்கமே வந்தேன்,
நிலையான _ நிலையற்றதிற்கு நடுவில்
நிலைத்த வெளியே உள்ள கோடுகளின் அனுபவம்
நான்
உருவாக்கிட இருக்கிறது,
நான் அனுபவித்திருக்கிற
எதிரே பிரமாண்ட
என்னுடைய கவிதை ,
சொல்
இதை விட அதிகமாக
என்ன ஆக முடியும்
ஒரு கவிஞனின் நடத்தை ?

ஏய் எனது பிரிய கவிதையே
எங்கே இருந்து நான் யாத்திரை ஆரம்பித்து இருந்தேன்
மீண்டும் அங்கேயே வந்து நிற்பதை விரும்பவில்லை ,
நான் தவிர்க்க விரும்புகிறேன்
எனது புராதான அடிவானத்தை.

 

மராத்தியில் : நாம் தேவ் தஸால்

ஹிந்தியில் : சூர்ய நாரயண ரண சூபே

தமிழில் : வசந்ததீபன்