மராத்தி மொழிபெயர்ப்புக் கவிதை: நாம் தேவ் தஸாலின் “காமத்தீபுரா” கவிதை | தமிழில்: வசந்ததீபன் | Namdeo Dhasal’s Kamathipura Poem in Tamil Translation | www.bookday.in

மராத்தி மொழிபெயர்ப்புக் கவிதை: நாம் தேவ் தஸாலின் “காமத்தீபுரா” கவிதை | தமிழில்: வசந்ததீபன்

நாம் தேவ் தஸாலின் “காமத்தீபுரா” கவிதை

***************************************************************

இரவில் நடமாடும் முள்ளம்பன்றி இங்கே படுத்து இருக்கிறது
ஒரு மோகமூட்டும் பழுப்பு வண்ணத்தின் பூச்செண்டாக இருக்கிறது ,
நூற்றாண்டுகளின் சிபிலிஸ் பால்வினை நோயின் காயங்களை மூடி,
காலண்டரை தூரமாக தள்ளிவிட்டு ,
தனது கனவுகளில் தான் என்றென்றுமாக தொலைந்து போனது.
மனிதன் தனது பேச்சை இழந்து போய் இருக்கிறான் ,
அவனுடைய கடவுள் ஒரு மலம் கழிக்கும் எலும்புக்கூடு.
என்ன இந்த சூன்யம் எப்போதும் ஒலியைப் பெறுமா,
ஒலியாக உருவாகுமா ?
நீங்கள் விரும்பினால்
இதன்மீது உன்னிப்பாக பார்வையை வையுங்கள் ,
இதில் ஏதாவது விரிசல் இருந்தால்
அதை உறைய வைத்து பாதுகாப்பு செய்யுங்கள்.

இதனுடைய மோகமூட்டும் தோற்றதத்தைப் பார்த்துத் தான் யாராவது பைத்தியமாக ஆகிப்போவார்கள்
முள்ளம்பன்றி திடீரென்று விழித்து எழுகிறது ,
தனது கூர்மையான கிளர்ந்தெழுந்த கூந்தலால் உங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது ,
உங்களை முழுவதுமாகக் காயப்படுத்துகிறது போலத்தான்
இரவு தனது மணமகனுக்காக தயாராகிறது ,
காயங்கள் மலரத் தொடங்குகின்றன.
பூக்களின் முடிவில்லாக் கடல்
பரவிப் போகின்றன,
மயில் தொடர்ச்சியாக நாட்டியமாடியபடி புணர்கின்றன.
இது நரகம்,
இது ஒரு சுற்றும் நீர்ச்சுழி,
இது ஒரு பயங்கரமான வேதனை ,
இது ஒரு நர்த்தகியின் சிலம்பணிந்த வலி.

உனது தோலை உரித்திடு ,
உனது தோலை வேரோடு உரித்திடு,
உனது தோலை உரித்திடு.
இந்த விஷ நித்தியமான கர்ப்பத்தை உருவமற்றதாக்கு.
இந்த உணர்ச்சியற்ற மாமிச கோளங்களுக்கு உடல் உறுப்புகளை வளர விடாதே ,
இந்த பொட்டாசியம் சயனைடை ருசித்து சுவை.

நொடியில் இறக்கும் ,
என்றென்றும் கீழே போகும் அந்த சிறிய ”ஸ’ வை எழுது.

விஷத்தின் இனிப்பு அல்லது உப்புச் சுவை சுவைக்க விரும்புவோர் வரிசையை இங்கே ஏற்படுத்து ,
மரணம் இங்கே கூடுகிறது,
வார்த்தை போல, இன்னும் ஒரு நிமிடத்தில் ,
இது இங்கே பொழியும்.

ஹே… காமத்தீபுரா
எல்லாப் பருவங்களை தனது அக்குளில் இடுக்கி வைத்திருக்கும்,
நீ இங்கே சகதியில் அமர்ந்திருக்கிறாய் ,
நான் விபச்சாரத்தின் எல்லா இன்ப துன்பங்களையும் தாண்டி
உனது தாமரை மலரும் வரை காத்திருக்கிறேன்.
_சேற்றில் ஒரு தாமரை.

**********************************************

நாம் தேவ் தஸால் (Namdeo Dhasal)

பிறப்பு : 15 பிப்ரவரி 1949
இறப்பு : 15 ஜனவரி 2014
பிறந்த இடம் : பூனாவுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் , மஹாராஷ்டிரா மாநிலம்.

படைப்புகள் :

(1) கோல் பீட்டா (1972)
(2) மூர்க்கம் ஹாதாத் யானே டோங்கர் ஹல்வலே (1975)
(3) ஆமச்யா இதிஹாஸாதீல் ஐக் அபரிஹார்ய பாத்ர: பிரியதர்ஷிணி (1976)
(4) துஹீ யத்தா காஞ்சீபுரம் (1981)
(5) க்கேல் 1983)
(6) காண்டூர் பஹீச்சா (1986)
(7) யா ஸத்தேத் ஜீவ் ரமத் நாஹீ (1995)
(8) மீ மார்லே சூர்யாச்யா ரத்தா சே
க்கோடே ஸாத் , துஜே போட் த்தருன்
சால்லோ ஆஹே.
ஆக மொத்தம் 11 கவிதைத் தொகுப்புகள்.

மற்றவை :

(1) தலித் பைந்த்தர் ஆந்தோலன் கே ஸம்ஸ்த்தாபக் (1972)
(2) புத்த் ரோஹிதாஸ் விசார்ட்ஸ் கெளரவ் புரஸ்கார் (2009)
(3) ஸாஹித்ய ஜீவன் கெளரவ் புரஸ்கார் (2004) மற்றும் பத்மஸ்ரீ புரஸ்கார்.
இவர் கவிதையைக் தவிர நாடகமும் , நாவலும் எழுதியுள்ளார்.

**********************************************

📚 எழுதியவர் : 

✍🏻 கன்னடத்தில் : நாம் தேவ் தஸால் (Namdeo Dhasal)
ஹிந்தியில் : திலீப் சித்தரே
தமிழில் : வசந்ததீபன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *