நான்சி கோமகன் எழுதிய “சமம்” சிறுவர் நாவல்
25.10.25 அன்று, தமுஎகச 16 வது மாநில மாநாட்டில் முதல்முறையாக நேரில் சந்தித்து கொண்டோம்
நானும் நான்சியும்.
பேரன்புடன் தோழர் தோழரென விளித்து *#சமம்* நூலினை பரிசாக அளித்தார்.
பெரிய செய்தியை தாங்கிய சின்னஞ்சிறு நூல். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு எடுத்துக்காட்டான நூல்.
தலைப்பு
*#சமம்* என்று தலைப்பிட்டதற்காக முதலில் நூலாசிரியரை பாராட்ட வேண்டும்.
*#பிறப்பொக்கும்_எல்லா_உயிர்க்கும் என்ற அய்யன் திருவள்ளுவர் பிறந்த பூமியல்லவா.
பொருண்மை
சிறுவர்களுக்கான நூல் எனினும் பெரியவர்களுக்கும் தேவையான புரிதலை தரவல்ல நூல்.
செந்தில், எனும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் மனப்போராட்டம் நம்மை கலங்க செய்கிறது.
பொறுப்பான பையன், நன்றாக படிக்கும் மாணவன், நல்ல ஓவியன், மரியாதையும், அன்பும் கொண்ட அறிவு முதிர்ச்சியுடன் புன்னகை மாறாது யாரையும் நோகடிக்காத நல்ல பையன்.
வீட்டில் அக்கா தங்கையுடன் மட்டுமே விளையாடும் செந்தில், ஆண் குழந்தைகளிடமிருந்து விலகி இருக்கிறார். உடலில் பெண்ணிற்குரிய நளினம்.
தந்தையோ ஆண்பிள்ளைகளோடு விளையாட சொல்கிறார்.
பள்ளியில் சக மாணவ மாணவிகளின் கேலிக்கு ஆளாகிறார். வெளியில் சொல்ல முடியாது மனதிற்குள் அழுது கலங்கி நிற்கும் மாணவனாய் நம்மையும் கலங்கடிக்கிறார்.
பள்ளியில் நடக்கும் ஒரு நிகழ்வால், கோபத்தையே அறியாத செந்திலின் முகம் மாறுகிறது, செயல்பட புறப்படும்போது அறிவியல் வாத்தியார் பரமேஷ்வரன் மீது மோதி நிற்க.
பரமேஷ்வரன் சார் செய்தி அறிந்து.
திருநங்கை, திருநம்பி என்பதை விளக்குகிறார்.
அறிவியல் அடிப்படையில் XX குரோமோசோம்கள், XY குரோமோசோம்கள் குறித்து விளக்குவதோடு
குரோமோசோம்களின் குறைபாடுகளால்தான் திருநங்கை, திருநம்பி குழந்தைகள் பிறக்க காரணம் என்பதை விளக்குகிறார் ஆசிரியர்.
நூலின் சிறப்பு
16 பக்கமே கொண்ட *#சமம்* நூலில் குரோமோசோம்கள் குறைபாடுகள் குறித்து ஒரு விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்துகிறார் ஆசிரியர் பரமேஷ்வரன்.
செந்திலின் பெற்றோரிடமும் பேசி புரிய வைக்கிறார்.
தன் சுயமுன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதும், படிப்பதும், சாதனைகள் நிகழ்த்துவதற்கும் பாலினம் ஒரு தடையில்லை என ஊக்கமளிக்கிறார் ஆசிரியர் பரமேஷ்வரன்.
மாணவர்கள் புரிந்து கொண்டு செந்திலிடம் மன்னிப்பு கேட்பதோடு அன்பு பாராட்டுகின்றனர்.
செந்திலின் பெற்றோரோ, தன் மகனுக்கு உள்ளுக்குள் நிகழ்ந்த மாற்றத்தை அறியாவே இல்லை. அறிந்ததும் பதறி, எங்களுக்கு எங்கள் குழந்தைதான் முக்கியம் என சொல்கிறார்கள். செந்திலோ தனக்கு பிடித்த பெயரான சித்ரா என்ற பெயரை சூட்டிக்கொள்ளவா என்கிறான்(ள்) ஆசிரியரிடம்.
நல்ல கோட்டவோவியங்களுடன் கூடிய நூலாக இருக்கிறது சுருக்கமாக *#சுருக்* என தைக்கும் சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வை சொல்கிற சிறந்த நூல்.
இந்நூலில் அழகாக வாசிப்போருக்கு குரோமோசோம் குறைப்பாட்டினை விளக்குவதோடு, உடன் பயிலும் மாணவர்களும், அவர்கள் மூலம் பள்ளி குழந்தைகளும்,ஆசிரியர்களும்,உணர்வதாகவும் பெற்றோரும் உணர்ந்து ஒரு மாற்று பாலின குழந்தையை ஏற்றுக்கொள்வதாக இருப்பது ஒரு நேர்மறையான எண்ணத்தை விதைத்திருக்கும் இந்நூல் சற்று ஆசுவாசமளிக்கிறது.
இந்த சிந்தனைக்காக நூலாசிரியர் தோழர் *#நான்சி_கோமகன்* அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், பாராட்டுகளும்.
என் உணர்வுகள்
திருநங்கை, திருநம்பி குறித்து பல நூல்களை வாசித்தும் உடனுக்குடன் விமர்சன உரையும் அளித்துள்ளேன். பல நூல்களிலும், அவர்களை பெற்றோரே அடித்து உதைத்து துன்புறுத்தி அருவெறுத்து வீட்டை விட்டு துரத்துவதாக, அந்த திருநங்கை, திருநம்பிகள், அவர்களுக்கான குழுவில் இணைந்து, உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு, கல்வியையும், சமூக தகுதி நிலையும் இழந்து படும் துயர்களை வாசிக்கும்போது நெஞ்சம் பதறி கண்ணீர் வடித்து உறங்காமல் கழிந்த இரவுகள் உண்டு.
பெற்றோரும், உடனிருக்கும் சமூகமும் இக்குறைப்பாடு குழந்தையினுடையது இல்லை என்பதை புரிந்து கொண்டால் மாற்று பாலினத்தவர்களும் உரிய உரிமைகளை துய்த்து வாழ்வார்கள்.
அனைத்து உயிரினங்களும் மகிழ்ந்து வாழ, சம உரிமையுடன் வாழ இப்பூவுலகில் உரிமை உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.
ஒரு நிலையில், திருநங்கைகள், திருநம்பிகள் குறித்த நூல்களை வாசிப்பதை நிறுத்தி விட்டேன். ஏனெனில் வாசித்தப்பின் அதிலிருந்து சட்டென மீள இயலாது உறக்கம் கெட்டு மனம் கனத்த நாட்களை கடப்பது பெரும் வலியாக இருந்தது.
ஆனால், இந்நூல் சற்று ஆசுவாசமளிக்கிறது.
ஒவ்வொரு முறையும் பொள்ளாச்சியில் இருந்து கோவையை நோக்கிய பயணத்தில் கற்பகம் கல்லூரி போக்குவரத்து இயக்கு சுட்டுக்குறி நிறுத்ததில் (Traffic signal) திருநம்பிகளை, திருநங்கைகளை காணும்போது கண்ணீர் கசியும், என்ன செய்துவிட முடியும், இயலாமையின் வெளிப்பாடாக ஒரு அய்ம்பது ரூபாயை வழங்க இயலும், என் மகளிடம் அவர்களை மதிக்க வேண்டும், ஏற்கனவே உறவுகளற்று, தவித்து கிடக்கும் உள்ளங்களை கேலி செய்து நோகடிக்க கூடாது என சொல்லி கொடுத்து இருக்கிறேன்.
அறிவியல் அறிவோம்
மனித உடலில் ஒவ்வொரு செல்களிலும் 46 குரோமோசோம்கள் இருக்கும்.
குரோமோசோம் என்பது மனித உடலை பற்றிய தகவல் அடங்கிய மூலக்கூறு. இந்த 46 குரோமோசோம்களும் 23 ஜோடிகளாவே இருக்கின்றன. இதில் முதலில் இருக்கும் 22 ஜோடி குரோமோசோம்களை ஆட்டோ சோம் என்று குறிப்பிடுகின்றனர். இது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். 23வது ஜோடி குரோமோசோமானது பாலியலை முடிவு செய்யும் குரோமோசோமாகும். 23வது குரோமோசோம் ஆணாக இருந்தால் XY என்றும், பெண்ணாக இருந்தால் XX என்றும் இடம்பெறுகிறது.
பெண்ணின் கருமுட்டையில் XX குரோமோசோம் மட்டும் இடம்பெற்றிருக்கும். அதுவே ஆணின் விந்தணுவில் XY குரோமோசோம்கள் இருக்கும். அதில் எந்த குரோமோசோம் கருமுட்டையுடன் இணையுமோ, அதுவே குழந்தையின் பாலினமாக அமைகிறது.
ஒரு கரு உருவாகி 7வது வாரத்திலிருந்து, 12-வது வாரத்துக்குள் அது ஆணா இல்லை பெண்ணா என்பது முடிவாகிறது. உடலில் இருக்கும் proto gonads என்ற சதை அமைப்பு, பெண்ணுறுப்பாக வளர்ச்சியடையும். XY குரோமோசோம் கொண்ட சில குழந்தைகளில் Y குரோமோசோம் 7 வாரங்கள் கடந்தும் பாலின உறுப்பு வளர்ச்சியடையாமல் அப்படியே இருக்கும். அப்படி இருந்தால், அது பெண்ணுறுப்பு வளரத்தொடங்கும். அந்த குழந்தை பிறக்கும் போது நமக்கும், பெண் குழந்தையாகவே தெரியும். அந்த குழந்தைகள் வளர வளர ஆண்களின் குணம் வெளிப்படும். அவர்களே திருநம்பியாக மாறுகின்றனர்.
ஒரு பெண்ணின் x குரோமோசோம் ஆணின் x குரோமோசோமை சந்திக்கும் போது, பெண் கரு உருவாகிறது. அதேசமயம் ஒரு பெண்ணின் x குரோமோசோமும் ஆணின் y குரோமோசோமும் சந்திக்கும் போது ஆண் கரு உருவாகிறது. அதேசமயம் குரோமோசோம்களில் கோளாறு ஏற்படும் போது, மூன்றாம் பாலின கரு உருவாகிறது.
இதில் மாற்றுபாலினமாக பிறப்பது குழஎதையின் தவறா? குற்றமா?
கற்றறிந்தவர்களும் சிந்திக்க தவறும் விடயங்களை இந்நூல் தாங்கியுள்ளது சிறப்பு.
வாழ்த்துக்கள் தோழர் நான்சி… இணைந்து பயணிப்பதில் மகிழ்ச்சி தோழர்
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “சமம்” (2025) சிறுவர் நாவல் |
| ஆசிரியர்: | நான்சி கோமகன் |
| வெளியீடு: | |
| விலை: | ₹.20 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 பொறிஞர்.கோ.லீலா |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
