நன்றி நன்றி நாயகனே
நாதி யற்றோர் நாயகனே
நிதியாய் வந்த நாயகனே
நீதியே எங்கள் நாயகனே!
சதியை வென்ற நாயகனே
சகதிகள் சாதி என்றவனே
சமத்துவம் வேண்டிய நாயகனே
சாமிகள் பொய்யென்ற போதகனே!
மனிதம் உங்கள் மனசாட்சி
மதமே உங்கள் எதிர்க்கட்சி
மானுடம் காக்க வந்தவனே
மாபெரும் தலைமகன் நீர்தானே!
அறியா சனங்களின் ஆசானே
அவர்களை உயர்த்திட உழைத்தவனே
தெருவில் நின்றோர்க்கு திசைகாட்டி
தேம்பிய கண்ணீர் துடைத்தவனே!
கருஞ்சட்டைக் காட்டிய வெளிச்சத்திலே
கைத்தடி கொடுத்த ஊக்கத்திலே
கருத்துகள் சொன்ன முறைகளிலே
கடையரும் காலத்தை வென்றனரே!
அய்யா தந்தை பெரியாரே
அநாதை ரட்சகன் நீர்தானே
அகிலத்தில் உன்போல் தலைவனுண்டோ?
அறியா சனங்களின் அய்யாவே!