நாராயணி சுப்ரமணியன் எழுதிய “ஆழ்கடல் அதிசயங்கள்” புத்தகம் | Narayani Subramanian's Aazhkadal Athisayankal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நாராயணி சுப்ரமணியன் எழுதிய “ஆழ்கடல் அதிசயங்கள்” – நூல் அறிமுகம்

“ஆழ்கடல் அதிசயங்கள்” – நூல் அறிமுகம்

ஆழ்கடல் அதிசயங்கள் நூலின் ஆசிரியரைப் பற்றி….

ஆழ்கடல் அதிசயங்கள் நூலின் ஆசிரியர் நாராயணி சுப்பிரமணியன். அறிவியல், சூழலியல் சார்ந்த படைப்புகளை பல்வேறு நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இந்நூல் இவரின் ஆறாவது நூலாகும். இவரின் முதல் 5 நூல்கள் நிறைய பாராட்டுகளும் விருதுகளும் பெற்றுள்ளன.

ஆழ்கடல் அதிசயங்கள்…. இந்து தமிழ் திசை வெளியிட்ட இயற்கை சார்ந்த சூழலியல் சார்ந்த நூல். பெயருக்கேற்ப ஆழ்கடலில் நிறைந்துள்ள அதிசயங்களை நம் கண்முன்னே காட்டுகிறது…

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ரோசி, ரக்ஷா, செந்தில் மூன்று நண்பர்களுக்கும் கடல் ஆராய்ச்சியாளர் அருணா வழிகாட்டுதலின் பேரில் ‘நாட்டிலஸ் ‘ கப்பலில் பயணப்பட்டு ஆழ்கடல் அதிசயங்களை காணச் செல்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நாமும் பயணம் செய்து ஆழ்கடல் அதிசயங்களை கண்டு மகிழ்வோம்….

நாட்டிலஸ் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்து முதலில் நாம் பார்த்தது மத்தி மீன்களின் கூட்டம்…
பசிபிக் மத்தி இனங்கள் வருடா வருடம் மே முதல் ஜூன் மாதம் வரை தென்னாப்பிரிக்காவின் மேற்குக் கடற்பகுதியில் இருந்து கிழக்குக் கடற் பகுதிக்கு வலசை போகும். இந்த மத்தி கூட்டம் அளவு பெரியது கோடிக்கணக்கான மத்தி மீன்கள் உடையது.

இந்த மத்தி மீன்களை வேட்டையாடுவதற்கு சராசரியாக 18,000 ஓங்கில்கள் அந்த பகுதிக்கு வரும்.

மத்தி மீன்களுக்கு 21 டிகிரி செல்சியஸ் கீழ் வெப்ப நிலை இருப்பது அவசியம். கடலில் வெப்பம் அதிகமாக இருந்தால் மத்தி மீன்கள் வலசை பாதிக்கப்படும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.

மீன்பிடி வருமானம், சுற்றுலா வருமானம் என்று மனிதர்களின் வாழ்வாதாரங்கள் மத்தி மீன்கள் வலசை பயணத்தை சார்ந்திருக்கின்றன. காலநிலை மாற்றத்தால் மத்தி மீன்களின் வலசை தடைபட்டால் இவையும் பாதிப்படையும்.

அடுத்ததாக பார்த்த அதிசயம் உலகிலேயே மிகப்பெரிய விலங்கு என்று நாம் கேள்விப்பட்டிருந்த படித்திருந்த நீலத் திமிங்கிலம்.
நீலத் திமிங்கிலம் 98 அடி நீளம் வரை வளரும். இவற்றின் எடை 199 மெட்ரிக் டன் . அதன் குட்டி பிறக்கும் போது 23 அடி நீளமும் 3000 கிலோ எடையும் இருக்கும் உலகிலேயே பிறக்கும் உயிரினங்களில் மிகப் பெரியது இதுதான். குட்டி நீலத்திமிங்கலம் ஒரு நாளைக்கு 200 லிட்டர் வரை பால் குடிக்குமாம். அதனால் அது ஒரு நாளைக்கு 90 கிலோ எடை அதிகரிக்கும் என்று வாசிக்கும் பொழுது ஆச்சரியமாக இருந்தது.

அடுத்ததாக பார்த்து பயந்த அதிசயம் பெரும் சுறா இனம் ( Great White Shark) 🦈 இவை 15 அடி நீளமும் 1800 கிலோ எடையும் கொண்டவை அவை . அங்கே வந்த சீல் இனங்களை ( cape fur Seal )🦭 வேட்டையாடி உணவாய் உண்டன.
இந்தச் சுறா இனங்கள் அதிக பார்வைத்திறன் உடையவை , சுவை உணர்வுடையவை ,மோப்ப சக்தி,சுற்றியுள்ள சூழலை உணரும் தொடுபுலன் சக்தி, துல்லியமான கேட்கும் சக்தி இன்னும் நிறைய இருக்கு…
சுறாக்களுக்கு மின்சாரத்தை உணரும் திறன் கூட இருக்கு என்பது ஆச்சரியமான தகவல்….

தேங்காய் ஓட்டினை மேல் பகுதியை சுத்தம் செய்து தேங்காய் ஓட்டினை எட்டுக் கைகளாலும் பிடித்து தரையில் குழந்தை போல தட்டுத்தடுமாறி நடக்கும் தேங்காய் கணவாய் ( coconut octopus ) 🐙

ஆழ்கடலில் இறந்து விழும் திமிங்கலம் ஆழ் கடலில் வாழும் உயிரினங்களுக்கு உணவாய் மாறுது. அந்த இடமே சத்து நிறைந்த வாழிடமாக மாறுது.

கிளிமீன்கள் இரவில் தூங்கும் பொழுது தங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்குகின்றன. இதனால் இரவாடிகளின் வேட்டையிலிருந்து தப்பிக்கின்றன…

கடல் மட்டத்திலிருந்து மேலே காற்றில் சறுக்கி விளையாடும் பறவைக்கோலா ( flying fish ) மீன் இனங்கள் . இவை 45 வினாடிகள் வரை காற்றில் இருக்குமாம் 20 அடி உயரம் கூட இந்த மீன்கள் எழும்பும் 400 மீட்டர் தொலைவு வரை சறுக்கியே கடக்கும் என்பதெல்லாம் ஆச்சரியமாக இருந்தது . இந்த மீன்கள் தண்ணீரை விட்டு வெளியே வரும் பொழுது காற்றில் மூச்சு அடைக்கி தாக்கு பிடித்துக் கொள்ளுமாம்…

முள் கிரீட நட்சத்திரம் மீன் இனங்கள் கையை இழந்தாலும் திரும்ப கை முளைச்சிடுமாம் இவற்றிற்கு மொத்தம் 21 கைகள் இருக்கு…

ஒளியை உறிஞ்சும் அடர் கருப்பு நிற மீன்கள்…
குட்டித் தூக்கம் போடும் திமிங்கிலங்கள்…
இன்னும் இன்னும் நிறைய ஆழ்கடல் அதிசயங்களை கண்முன்னே காட்டுகிறது இந்நூல்….

ஒவ்வொரு தலைப்பிற்கும் புகைப்படங்களையும் இனைத்து கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடத்தை உயிரினங்களின் செயல்பாடுகளை நம் கண் முன்னே காட்டுகிறது ஆழ்கடல் அதிசயங்கள் நூல்…

📚 நூலின் விவரங்கள்:
தலைப்புவிவரம்
நூலின் பெயர்:ஆழ்கடல் அதிசயங்கள்
ஆசிரியர்:
வெளியீடு:இந்து தமிழ் திசை
விலை:₹.100
அறிமுகம் எழுதியவர்:   
ஜனனி குமார்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *