இது நான்கு பகுதிகளை உள்ளடக்கியது

முதல் பகுதி -இறப்பும்,பிறப்பும்

“எந்த உயிரும் பயனற்று அழியக்கூடாது “என்ற காரல் மார்க்சின் வாக்கியத்துக்கு இவரது வாழ்க்கை ஒரு உதாரணம். கனடாவில் பிறந்து,மருத்துவத்தில் பட்டம் முடித்தும் இவரது ஆழ்மனத்தேடல் நிறைவடையவில்லை. ஏனென்றால் மருத்துவப்படிப்பை முழுமையாக படித்தால் நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என படிக்கிறார். மருத்துவம் படிக்கும் போது பிரான்ஸிஸ் என்ற பெண்ணை காதலிக்கிறார். அவளையே மணமும் முடிக்கிறார். மருத்துவபடிப்பை படித்து முடித்துவிட்டு மக்களுக்கு மருத்துவம் பார்க்கிறார் ஆனால் நோயினால் ஏற்படும் உயிரிழப்பு குறையவேயில்லை.

Norman Bethune 1905.jpg – Wikimedia Commons

அங்கு அவருக்கு ஒரு உண்மை புலப்படுகிறது பணக்காரர்கள் சிறு தும்மல்,இருமலுக்குக்கூட காத்திருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுகிறார்கள். ஆனால் ஏழைகளோ காசநோய் முற்றினாலும் மருத்துவம் பார்க்க பணமில்லாததால் உயிரை விடுகின்றனர் என்ற உண்மை புலப்படுகிறது. இதனை சரிசெய்ய இலவச மருத்துவம் பார்க்க ஒரு மருத்துவக்குழுவை அமைக்கிறார். அப்போதுதான் அவருக்கு புரிகிறது இது தனிமனித சாகசத்தால் சரிசெய்ய முடியாது,மக்களை பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளவர்களாக வைத்திருக்கும் அரசுக்கு பதில் ஏற்றத்தாழ்வுகளற்ற பொதுவுடமை சமுகம் அமைந்தால் மட்டுமே சாத்தியம் என தனது ஆழ்மனத்தேடலுக்கு விடைக்கிடத்தாக எண்ணுகிறார்.

இரண்டாம் பகுதி-எதிரி காசநோய்

அயராது ஏழை மக்களுக்கு மருத்துவ பணி பார்க்க இவர் சேரிப்பகுதிகளுக்கு செல்லவேண்டி வருகிறது. அங்கு இருக்கும் சுகாதாரமற்ற நிலையினால் தான் அவர்களுக்கு நோய் பரவுகிறது என்கிற முடிவுக்கு வருகிறார். அடிக்கடி அங்கு சென்றதால் இவருக்கும் காசநோய் முற்றுகிறது. பிரான்ஸிஸ்-பெத்யூன் மணவாழ்க்கையில் முறிவு எற்படுகிறது. பிரான்ஸிஸ் மணமுறிவு வேண்டாம் என்ற போதும் பெத்யூன் அவருக்கு தனது காசநோயால் தான் இறக்கபோவதாக கூறி மணவிலக்கு கொடுக்கிறார். காசநோய் முற்றியவர்கள் தனித்திருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்,அங்கு இவரைபோல பல படித்த,மருத்துவர்கள் கூட அனுமதிக்க பட்டு தங்களது இறுதி நாளை எண்ணிக்கொண்டிருக்க இவரும் தன்னுடை மரணத்தின் விளிம்பில் உள்ளதாக உணர்கிறார்.

Henry Norman Bethune – Say something famous

அப்போது அங்குள்ள நூலகத்தில் அலெக்ஸண்டர் என்பவரின் காசநோய் பற்றிய ஆய்வுக்கட்டுரையை படிக்கிறார். அந்த ஆய்வுக்கட்டுரை காசநோயால் பலவினமடைந்த நுரையீரலை செயலிழக்கு செய்து மனித உயிர்களின் வாழ்நாளை நீட்டிக்க செய்வது என்று விளக்கியிருந்தது. உடனே பெத்யூன் தனக்கு இந்த வகையான அறுவை சிகிச்சையை செய்ய அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை பணிக்கிறார். மருத்துவமனையும் இவர் மருத்துவர் எனபதால் அதனை ஏற்றுக்கொண்டு அவரது காசநோய் பாதிக்கப்பட்ட நுரையீரலை செயலிழக்க செய்கின்றனர். அவர் மீண்டும் புத்துணர்வுடன் மருத்துவபணியை தொடர்கிறார். மேலும் நெஞ்சக அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெறுகிறார்.

மூன்றாம் பகுதி -எதிரி -பாஸிசம்

ஸ்பெயினில் லாயலிஸ்டுகளுக்கு உதவி செய்யும் பொருட்டு கனடிய மருத்துவக்குழுவுடன் புறபடுகிறார் பெத்யூன். ஆனால் அங்கு நிலைமை படுமோசமாக உள்ளது. ஏனென்றால் அங்கு பிரான்சிஸ்கோ புரான்கோ என்ற ஜனநாயக விரோதி அவனது நண்பர்களான ஹட்லர் மற்றும் உதவியுடன் குடியரசு ஆட்சியை கவிழ்க்க மக்களையும் கூட்டமாக கொன்று குவித்துக் கொண்டிருந்தான். இங்குதான் அவர் போர்களத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு ராணுவ வீரர்களும்,மக்களும் இறப்பதை கண்டறிகிறார். இதனை தடுக்க ரத்தமாற்று முறையை அங்குள்ள குடியரசு அரசிடம் விளக்குகிறார். அந்த அரசும் அதனை ஏற்று கொண்டு அவருக்கு ஒரு அலுவலகத்தை ஏற்பாடு செய்து கொடுக்கிறது.

அங்கு அவர் தனக்கு பல யூனிட்கள் ரத்தம் தேவை என்று அந்த நாட்டுமக்களுக்கு விளம்பரப்படுத்துகிறார். மக்கள் தங்கள் நாட்டின் குடியரசு ஆட்சியை பாதுகாக்க பல யூனிட் ரத்தங்களை தருகின்றனர். அதனை பயன்படுத்த யுத்தமுனைக்கு விரைகிறார் ஆனால் அங்கு யுத்தம் படுமோசமாய் மாறிவிட அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். இதனை சரிசெய்ய வேண்டிய ஆயுத,பண,மருத்துவ உதவி தேவையேன கருதி வெளிநாடுகளுக்கு சென்று அனைத்து வகை உதவிகளையும் ஸ்பெயினுக்கு அனுப்பவிட்டு தன் நாட்டுக்கு திரும்புகிறார்.

நான்காம் பகுதி-எதிரி -காயப்படுத்துவர்கள்

The CPC’s foreign friends- China.org.cn

நாடு திரும்பி அவருக்கு உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டது. தனது ஸ்பெயின பயணத்தைபற்றி நாடு முழு இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் உரைநிகழ்த்துகிறார். அப்போதுதான் ஜப்பான் சீனாவின் மீது போர் தொடுப்பது தெரியவருகிறது. உடனே சீனாவுக்கு புறப்படுகிறார். அங்குள்ள நில அமைப்பும்,மக்களுடைய வாழ்க்கையும் அவருக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. சீனமக்கள் அவருக்கு அளித்த பெயர் பாய் சூ என். அங்கு நிலவும் பல்வேறு விதமான அரசியல் சூழ்நிலைகளை புரிந்து கொள்கிறார். ஜப்பானிய படைகள் பல்வேறு இடங்களில் தாக்குதலை நடத்துகின்றன. ஆனால் அதனை சமாளிக்கூடிய ஆயுத பலமோ,மருத்துவ பலமோ சீனப்படைகளிடம் இல்லை என்பதை புரிந்துகொள்கிறார். அங்கு அவர்பல போர் வீரர்களுக்கு உதவி புரிகிறார்.

இவரது பெயர் சீன யுத்தக்களங்களிலும்,மக்களிடமும் பிரபலமடைகிறது. சீனாவின் போர்படைக்கு உதவும் பொருட்டு நடமாடும் மருத்தவமனையை அமைக்கும் தனது எண்ணத்தை தோழர். மாவோ -விடம் தெரிவித்து ஒப்புதல் வாங்குகிறார். நடமாடும் மருத்துவமனையை உருவாக்கி செயல்படுத்தி வெற்றியும் பெறுகிறார். இதன் மூலம் பல விரர்களின் உயிரழப்பை தடுத்து காப்பற்றுகிறார். இது போன்ற யுத்தக்களத்தின் அருகிலுள்ள நடமாடும் மருத்துவமனையில் தொடர்ந்து அறுபத்தி மூன்று மணி நேர அறுவை சிகிச்சையின் போது அறுவை சிகிச்சை கத்தி கை விரலில் வெட்டிவிடுகிறது. இதனால் கையில் நோய் தொற்று முற்றி இறந்துவிடுகிறார்.
சீனப்புரட்சி வென்ற பிறகு இவரது பெயரில் நாட்டுக்கே தலைமை மருத்துவமனைக்கு இவரது பெயரை பெயரை சூட்டி பொருமைபடுத்தியுள்ளது மக்கள் சீன அரசு.

தலைப்பு:டாக்டர் நர்மன் பெத்யூன் கதை

ஆசிரியர்:சிட்னி கார்டன்,டெட் ஆலென்

தமிழ் மொழிபெயர்ப்பு:சொ.பிரபாகரன் 

பக்கங்களின் எண்ணிக்கை:415

வெளியீடு:சவுத் விஷன்

Image may contain: Arun Balaji Chellakkannu

அருண்பாலாஜி செல்லக்கண்ணு,
இந்திய மாணவர் சங்கம்,
மதுரை காமராசர் பல்கலைகழகக் கிளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *