இருளின் சுவையறிந்த விடியல்பொழுதில்
ஓய்ந்திடும் பனிபுகையின்
குளுமையில்
ஆள் நடமாட்டம்
தொடங்கிடும்முன்
அழுக்கு மூட்டையோடு வீதியோரம் படுத்துறங்கும்
யாசகன்
பின்னால் தொடர்ந்து துரத்தி
ஓயாமல் குறைத்திடும் தெருநாய்கள்
கருப்புச்சாலையின்
இருபக்கமும்
மஞ்சள் நிறப்பூக்களைத் தூவி வழியனுப்பும் சரக்கொன்றை
இன்னும் அணையாது வெளிச்சத்தில் கண்காணித்திடும் மின்விளக்குகளென
ஒவ்வொன்றையும் கடந்து ஒற்றை மனிதனாய்
நமக்கான தேடலை பூக்களின் ஒவ்வொரு துளி நறுமணத்தோடு அதே வீதியில் சேகரிக்கும் குப்பைகளோடு தேடுகிறேன்