கார்த்திக் பாலசுப்பிரமணியன் எழுதிய நட்சத்திரவாசிகள் (Natchathiravaasikal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

நட்சத்திரவாசிகள் (Natchathiravaasikal) – நூல் அறிமுகம்

நட்சத்திரவாசிகள் (Natchathiravaasikal) – நூல் அறிமுகம்

1987 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பிறந்தார். கல்லூரி படிப்பைக் கோவையில் முடித்து, பணியின் நிமித்தம் நொய்டா, ஜோகனஸ்பர்க், சிட்னி போன்ற நகரங்களில் வசித்திருக்கிறார். முதல் சிறுகதைத் தொகுப்பு ‘டொரினா’ 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. முதல் நாவலான ‘நட்சத்திரவாசிகள்’ நூலுக்கு 2021 ஆம் ஆண்டின் யுவ புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார்.

இந்தியாவில், அதீத வளர்ச்சியடைந்த ஒரு துறையான, மாதம் இலட்சங்களில் சம்பளம், வெளிநாட்டு பயணம் என 90களில் வேலைத் தேடுவோருக்கு, கனவாகயிருந்த, ஐ. டி. என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப துறையே இக்கதைக்கான களம். நாயகன் என்று அதீத புனைவுகளால், ஒருவரை மட்டும் மையப்படுத்தாமல், உள்ளது உள்ளபடியே, ஐ. டி தொழிலாளர்களை அவரவர் இயல்பிலே காட்சிப்படுத்திக் கதை நகர்வது சிறப்பு. வளர்ச்சியடையாத, நகரம் போல் தோற்றமளிக்கும் பகுதியில் வசிக்கும் நித்திலன், பெருநகரத்தில் முழு சுதந்திரத்தோடு வளரும் மீராவோடு வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும்போது ஏற்படும் சிக்கல்கள் மிக யதார்த்தம். மீராவின் அன்பையும், அறிவையும் நித்திலனால் எதிர்கொள்ள முடியாததற்கு வளர்ந்த சூழல், ஒரு காரணியாக இருந்தாலும், பணி சூழலும், அங்கே உருவாக்கப்படும் அழுத்தங்களும், தீர்வை நோக்கி அவர்களைக் கவனம் செலுத்தவிடவில்லை என்பதுதான் நிதர்சனம். வேலை, வீடு என பிரித்தறிர முடியா மனநிலையும் மற்றொரு காரணியாகும்.

பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, உயர் மதிப்பெண்களைப் பெற்று பள்ளி இறுதி வகுப்பை முடிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, வார இறுதியில் வகுப்புகளை நடத்துவது, வார நாட்களில் சொற்ப ஊதியம் அல்லது உதவி பணம் வழங்கி, தங்கள் நிறுவனப் பணிகளைப் பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் அனுபவம், தகுதி என எது குறித்தும் கருதாமல், யாரையும், எப்போதும் வெளியேற்றலாம் என ஆதிக்கம் செலுத்தும் நிறுவனப் போக்கையும் பதிவு செய்கிறது இந்நாவல்.

பணியில் சேர்ந்த உடனேயே ஒரு சிலரைத் திரட்டி கொண்டு கேள்வி கேட்ட கமலக்கண்ணனை முளையிலேயே கிள்ளி எறிந்தது; பதவி உயர்வு அளிக்காததற்காகத் தனது கோபத்தை வெளிப்படுத்திய சாஜூவை அணுகிய விதம்; சொந்த ஊருக்குப் பணிமாற்றம் கேட்ட பார்கவிக்கு நிகழ்த்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்; காஃபேயில் தனியாக அழுது கொண்டிருக்கும் ஓர் இளம் பெண் என மனவலி மிகுந்த நிகழ்வுகள் வெளியுலகில், தகவல் துறையின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் மாய பிம்பத்தைத் தகர்த்தெறிகிறது. விவேக், சாஜூ போன்ற பலரும், பல அனுபவங்களை வாசகனுக்கு கை மாற்றுகிறார்கள்.

‘நியூ சொல்யூஷன்’ நிறுவனத்தின் செக்யூரிட்டி ராமசுப்புவின் பார்வையில் தொடங்குகிற கதை, அவ்விடத்திலேயே, உச்சகட்ட களமான Pink Handshake மீட்டிங்கில் இணைத்து இறுதிபடுத்தியிருப்பது வெகு நேர்த்தி.

தினசரி சலிப்புகள், போதாமைகள் இருந்தாலும், இந்த ஐ. டி வாழ்வும், வேலையும் பலருடைய வாழ்நிலையைக் குறிப்பாக கிராம இளைஞர், இளைஞிகளின் பொருளாதார படிநிவையை உயர்த்தியிருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.
நன்றி!

நூலின் தகவல்கள் : 

நூல் : நட்சத்திரவாசிகள்
ஆசிரியர் : கார்த்திக் பாலசுப்பிரமணியன்
நாவல்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
ஆண்டு : டிசம்பர் 2019
பக்கங்கள் : 264 பக்கங்கள்
விலை : ரூ 290/-

நூல் அறிமுகம் எழுதியவர் :

 

பா. கெஜலட்சுமி
சென்னை – 19

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *