நத்தையின் வழித்தடத்தில் மின்னல் | Nathayin Vazhithadathil Minnal

நத்தையின் வழித்தடத்தில் மின்னல் தொகுப்பு நூல், எட்டு நாடுகளைச் சேர்ந்த, நூறு பாவலர்களின் இயைபுத் துளிப்பாக்களை தாங்கி பெருமையுடன்
மிளிர்கிறது.

நூலினைச் சிறப்பாக வடிவமைத்து , இரண்டு அட்டைப் படங்களுடன் தந்திருப்பது கூடுதல் சிறப்பு லிமரைக்கூ எழுத ஆர்வமுள்ள கவிஞர்களை ஒன்றிணைத்து சிறப்பாக செயலாற்றிய, ஆசிரியர்களுக்கு நன்றிகள்… வாழ்த்துக்கள்..
தொடரட்டும் உங்கள் பணிகள்..

கலந்து கொண்ட அத்தனை கவிஞர்களுக்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் "இயைபுச்
சுடர் விருது வழங்கியிருப்பது கூடுதல் சிறப்பு..

கவிஞர்கள் அனைவரும் மிக சிறந்த இயைபுத் துளிப்பாவை தந்திருக்கிறார்கள்..

அவற்றில் இருந்து எனக்குப் பிடித்த ஒன்று இரண்டு லிமரைக்கூ ..
இங்கே பகிர்கிறேன்..

ஔவை நிர்மலா பாண்டிச்சேரி

இரவில் ஊடகம் விடு
புலனத் துள்ளே புகுந்து மாயாதே
நேரத் தோடு படு

இன்றைய இளையோருக்கு தேவையானச் செய்தியை சொல்லி செல்கிறது இந்த லிமரைக்கு

வகிதா லண்டன்

நிறைந்து கிடக்கிறது தனம்
வாசல் நின்று இறைஞ்சும் ஏழைக்கு
கொடுக்கத்தான் இல்லை மனம்

கருணை உள்ளத்தோடு வாழச் சொல்கிறது இந்த லிமரைக்கு..

சாந்தி சரவணன் சென்னை

அயோத்தியில் ராமர் பவனி
ஆட்சியாளரின் அரசியல் நாடக அரங்கேற்றம்
கோமாளி மக்களே கவனி
இன்றைய அரசியல் தளத்திற்கு ஏற்றார் போல் சிந்திக்க வைக்கும் லிமரைக்கூ இது…
இப்படி நிறைய நம்மை சிந்திக்கவும், சிரிக்கவும், கருத்துகளை திறம்பட, சொல்லக் கூடிய நிறைய
லிமரைக்கூ இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த சிறப்புமிகு தொகுப்பு உங்கள் புத்தக அலமாரியில், (நத்தையின் வழித்தடத்தில் மின்னல்) இடம் பெற வேண்டிய
நூல்களில் ஒன்று.

நன்றி.

நூலின் தகவல்கள் 

நூல் : நத்தையின் வழித்தடத்தில் மின்னல்
நூல் வகை: பன்னாட்டு இயைபுத் துளிப்பா தொகுப்பு (லிமரைக்கு )
தொகுப்பு ஆசிரியர்கள்: புதுவை தமிழ் நெஞ்சன், கன்னி கோவில் இராஜா
பக்கங்கள்: 216
பதிப்பகம்: நூலேணிப் பதிப்பகம்
விலை: 250

 

எழுதியவர்

கவிதா பிருத்வி
தஞ்சை

 

கரிகாலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *