கு.மணி எழுதிய "நதியின் பிழையன்று" சிறுகதை | Nathiyin Pilaiyandru Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு.மணி எழுதிய “நதியின் பிழையன்று” சிறுகதை

“நதியின் பிழையன்று” சிறுகதை

சேது மெட்ரிக்பள்ளி வளாகம் கலவர பூமி போல காணப்பட்டது. ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து பள்ளியை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர்.பள்ளிப் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. அந்த வாத்தியானை வெளியே வரச் சொல்லுங்க ஆவேசமாக சில இளைஞர்கள் கூச்சலிட்டனர் என்னவென்றேவிவரம் அறியாது சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இவர்களையெல்லாம் கேட்பதற்கு ஆள் இல்லையா படுபாவிப்பய புள்ளைய அடிச்சு கொன்னுட்டானே. டேய்வாத்தி வெளியே வாடா!

விபரம் அறிந்த பத்திரிக்கையாளர்கள் வட்டாட்சியர்: சி இ ஓ :ஆர் டி ஓ :டிஎஸ்பி காவலர்கள் என அனைவரும் பள்ளியில் குவிந்தனர்.

கலவரத்தை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு சிலர் பள்ளியில் உள்ள லேப்டாப்: கம்ப்யூட்டர் பெஞ்சு என தூக்கிக்கொண்டு சென்றனர்.

என்ன சார் என்ன நடந்தது பள்ளியின் அலுவலர் ஒருவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்வி.

சார் அதான் விசாரணைக்கு அலுவலர்கள் எல்லாம் வந்திருக்காங்கள்ளே அவங்களைக் கேட்டு தெரிஞ்சுக்கோங்க.

இந்த ஆளும்பள்ளிக்கூடத்துல தானே வேலை பார்க்கிறான்.அவர் எப்படி உண்மையைச் சொல்லுவாரு அது ஒன்றும் இல்லை சார். வகுப்புலே வாத்தியாரு கேள்வி கேட்டு இருக்காரு பதில் சொல்லலே ஓங்கி அறைந்திருக்காரு பையன் சுருண்டு விழுந்து செத்து போயிட்டான்.

என்ன சொல்றீங்க ஒரு அறை அறைஞ்சதுனாலே பையன் செத்துப் போயிட்டானா.

ஆமா சார்!பிள்ளைகளை அடிக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு.
அதை எல்லாம் இந்த வாத்தியாங்க எங்க கடைப்பிடிக்கிறாங்க.அடிச்ச வாத்தியார் பேரு என்ன சார்?

ஏதோ மதிவாணனாம் கணக்கு வாத்தியார்.ரொம்ப ஸ்ட்ரிட்டா இருப்பாராம்.பிள்ளைகளை அடிச்சு பயமுறுத்தியா படிக்க வைக்கிறது இப்ப என்ன ஆச்சு பார்த்தீங்களா? மாணவர்களை அடிப்பதே சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.இதில் அடித்துக் கொன்றிருக்கிறார். இப்படிப்பட்டவர்களை எல்லாம் கைதுசெய்து வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளனும். இல்லையினா தூக்குலே போடணும் சார்.

காவல்துறை பட்டாளம் வந்தது கலவரம் செய்தவர்களை தடியடி நடத்தி கலைத்தது.

” போலீஸ அராஜகம் ஒழிக “என்று சிலர் கோஷமிட்டனர்.

பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இறந்த மாணவனின் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் மட்டும் விசாரணைக்காக ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டனர் ஆசிரியர்கள் அலுவலர்கள் என யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை பள்ளி முதல்வர் தாளாளர் உட்பட அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.

வட்டாட்சியர் தலைமையில் விசாரணை தொடங்கியது. முதலில் இறந்த மாணவனின் வகுப்பறையில் உள்ள மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது

அதில் ஒரு மாணவன். பாக்யராஜ் நல்லா படிப்பான் சார். கிளாஸ்லேயே அவன் தான் சார் பஸ்ட். மதிவாணன் சார் பாக்யராஜிடம் கேள்வி கேட்டார் சார். கணக்குலேவேற மார்க் இந்த தடவை குறைந்துவிட்டான் சார். கேட்ட கேள்விக்கும் அவன் பதில் சொல்லல சார்.இந்த சின்ன கேள்விக்குக் கூட உனக்கு பதில் தெரியலையா என்ன அசால்ட்டு உனக்கு? கோவம் வந்து பாக்யராஜ் கன்னத்தில் ஒரு அறை விட்டார் சார். அப்படியே அவன் பெஞ்சு மேல முட்டி மோதிகீழேவிழுந்துட்டான் சார். மதிவாணன் சாரும் அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி பார்த்தார் சார் ஆனா அவன் எந்திரிக்கவே இல்லை.

ஒவ்வொரு மாணவரும் இதேயே பதிலாக் கூறினார். மாணவர்கள் விசாரணை முடிவுற்று அவர்கள் வகுப்பிற்கு திரும்பினர்.

ஆசிரியர்கள் விசாரணையில் மதிவாணன் சார் கொஞ்சம் கோபக்காரர் தான் சார்.ஆனா நல்லவர் பசங்களை நல்லா படிக்க வைப்பாரு என்ற கருத்தே முழுவதுமாக வந்தது.

எந்த வாத்தியார் எந்த வாத்தியாரை காட்டிக் கொடுப்பீங்க அதிகாரி ஒருவரின் ஏளனம்.

பையன் இறந்துட்டான்னு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?

பையன் மயக்கம் போட்டு இருப்பான்னு நெனச்சு பக்கத்துல இருக்குற டாக்டரை கூட்டிட்டு வந்துகாண்பித்தோம். டாக்டர் வந்து செக் அப் செய்துவிட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு போங்கன்னு சொல்லிட்டு அவரு கிளம்பிட்டார் சார்.

உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனோம். அங்க இருக்குற டாக்டர்கள் செக்கப் செய்துவிட்டு அவன் இறந்து ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகுதுன்னு சொல்லிட்டாங்க ஆசிரியர் ஒருவரின் வாக்குமூலம்.

உடனடியாக தாளாளர் காவல்துறை
பையனோட பெற்றோருக்கு தகவல் கொடுத்தோம்.

சார் நீங்க எல்லோரும் போங்க சம்பந்தப்பட்ட ஆசிரியரை விசாரிக்கணும் அவரை வரச் சொல்லுங்க.

மதிவாணன் கண்ணீர் வெள்ளத்தில் நடுக்கத்துடன் வந்தார். அவர் வரும்போது இறந்த பையனின் உறவினர்கள் ஓடி வந்து அவரை செருப்பை கழற்றி அடித்தனர். போலீசாரின் தடுப்பையும மீறி சிலரிடம் அடி வாங்கிய மதிவாணன் காவலர்கள் பாதுகாப்புடன் விசாரணைஅறைக்குள் வந்தார்.

சொல்லுங்க மதிவாணன் என்ன நடந்தது என்று? அவரால் நிற்க முடியவில்லை பேசவும் முடியவில்லை. உட்காருங்க சார். உட்கார்ந்து பதில் சொல்லுங்க.

தழுதழுத்த குரலில் ஐயா! பாக்யராஜ் நல்லா படிக்கிற ஸ்டூடண்ட் வகுப்புலே எப்பவுமே முதல் மதிப்பெண் அவன் தான் வாங்குவான் இந்த முறை மதிப்ப்பெண் குறைந்துவிட்டான். சின்ன சின்னச் தவறால் மதிப்பெண் குறைந்துள்ளது. அவனிடம் சில கேள்விகள் கேட்டேன் தவறாக பதில் கூறியதால் கன்னத்தில் கோபத்தில் ஒரு அறை அறைந்தேன். அவன் நிலை தடுமாறி பெஞ்சில் மோதி கீழே விழுந்தான் எந்திரிக்கவே இல்லை.கண்ணீர் விட்டு அழுதவாறு வாக்குமூலம் கூறினார் மதிவாணன்.

என் சார் பையன்களை அடிக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு.அதுவும் நல்லா படிக்கிற மாணவன்னு சொல்றீங்க. உங்கள் கோபம் எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தி இருக்கு பார்த்தீங்களா?

பெற்றோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது பையனுக்கு ஏதாவது நோய் ஏதாவது இருந்ததா?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லைங்க ஐயா!நல்ல திடகாத்திரமாத்தான் இருந்தான். பள்ளிக்கு வரும் போதும் நன்றாக தான் வந்தான். ஏன் சார் என் பையன் மேல என்னசார் உங்களுக்கு வெறுப்பு அவனை இப்படி அடிச்சு கொன்னுட்டிங்களே!

பெற்றோரின் வாக்குமூலம் அழுகை மதிவாணன் சாரை நிலைகுலையச் செய்தது.

சார் இவரை கைது பண்றதைத் தவிர வேற வழியில்லை. மாணவர்களின் வாக்குமூலத்திலே இவரு அடிச்சு தான் அந்த பையன் இறந்திருக்கிறான்கிறது நல்லாத் தெரியுது. காவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார் டிஎஸ்பி. மதிவாணன் கைது செய்யப்பட்டு வெளியில் கொண்டுவரப்பட்டார்.

வெளியே காத்திருந்த கும்பல் அவர் மீது பாய்ந்து அடிக்க ஓடியது. காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனையும் மீறி அவரை சிலர் அடித்தனர். அவர் சட்டை கிழிக்கப்பட்டு ரத்த காயங்களுடன் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிகழ்வு அனைத்து தொலைக்காட்சிகளிலும் பிரேக்கிங் நியூஸாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது

மறுநாள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அலுவலகத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.அந்த அறிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவன் அடிக்கப்பட்டு சாகவில்லை என்றும் மாறாக அவன் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது. அதனால்தான் மாணவன் இறந்துள்ளான் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அறிக்கையை படித்த டிஎஸ்பி உடனடியாக விசாரணையைத் தொடங்கினார். இறந்த மாணவனின் பெற்றோரிடம் அவனுக்கு குளிர்பானம் ஏதாவது கொடுத்தீர்களா இல்லை வேறு எங்காவது குடித்தானா என்று விசாரணை மேற்கொண்டார். விசாரணை வளையத்துக்குள் சிலர் கொண்டுவரப்பட்டனர். இறந்த மாணவனின் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில் வாசு என்ற மாணவன் சார் ஸ்கூலுக்கு நாங்க இருவரும் தான் சேர்ந்து வருவோம்.நேற்று எங்க வீட்டுக்கு வந்தபோது எங்க அம்மா பாக்கியராஜுக்கு கூல்ட்ரிங்ஸ் கொடுத்தாங்க சார்.

போலீசாருக்கு சரியான தடயம் கிடைத்தது.இப்போ உங்க அம்மா எங்க இருப்பாங்க?அதிகாரி ஒருவரின் விசாரணை.

சார் வீட்லதான் சார் இருப்பாங்க .

காவலர் இருவருக்கு உத்தரவிட்டார் டிஜிபி இந்த பையனை கூட்டிகிட்டு போய் அவங்க அம்மாவை உடனடியாக அழைத்து வாங்க. எஸ்சார்.

அரை மணி நேரத்தில் வாசுவின் அம்மா சுகந்தி விசாரணை அறைக்கு அழைத்து வரப்பட்டார். வாசுவின் அம்மாவிடம் அடுக்கடுக்காக பல கேள்விகள் கேட்கப்பட்டது.

முதலில் பாக்கியராஜ் என் பையன் மாதிரி சார்.அவன் எங்க வீட்டுக்கு எப்போதும் வருவான்.என் பையனும் அவங்க வீட்டுக்கு போவான். வழக்கம் போல தான் நான் நேற்று அவனுக்கு கூல்டிரிங்ஸ் கொடுத்தேன். வேற எதுவும் எனக்கு தெரியாது சார்.

பாக்கியராஜ் இறந்துட்டான் அதாவது உங்களுக்கு தெரியுமா?

ஏதோ வாத்தியார் அடிச்சு இறந்துட்டதா ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க சார் .

போலீசார் கிடுக்குப்பிடி விசாரணைத் தொடங்கினர். அந்தப் பையன் வாத்தியார் அடித்துசாகலே. அவன் குடிச்ச கூல்ட்ரிங்ஸ்லே விஷம் கலந்திருக்கு. அதனால தான் அந்தப் பையன் செத்திருக்கான். இதுக்கு மேலையும் உண்மையை நீங்க மறைச்சீங்கன்னா நாங்க எடுக்கிற நடவடிக்கை ரொம்ப மோசமாக இருக்கும்.

பயந்து போன சுகந்தி சார் நான் தான் சார் கூல்ட்ரிங்க்ஸ்லே விஷத்தை கலந்து பாக்கியராஜூக்கு கொடுத்தேன். பாக்கியராஜ் தான் சார் வகுப்பில் எப்பவுமே முதல் மார்க் எடுக்கிறான். என் பையன் ஒரு முறை கூட முதல் மார்க் எடுக்கலே. ஒன்று இந்த பள்ளியை விட்டு அவன்போகணும்னும். இல்லே இந்த உலகத்தை விட்டு அவன் போகணும்னு முடிவு எடுத்தேன். ஆத்திரத்தில் அறிவிழந்து இந்தத் தவறு செய்து விட்டேன் சார்.

ஏம்மா! நீயும் ஒரு தாய் தானே. நீ பெத்த புள்ளையா இருந்தா இப்படிச் செய்வாயா ?

மிகப் தவறு செய்து விட்டேன் சார். நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறேன்.என் மகன் முதல் மதிப்பெண் பெற முடியவில்லை என்ற ஆதங்கத்தில் தவறிழைத்து விட்டேன். குலுங்கி குலுங்கி அழுதார் சுகந்தி .

ஏம்மா? மதிப்பெண்கள் தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறதா? எஜுகேஷன் சிஸ்டத்தில் மிகப்பெரிய அவல நிலை. மதிப்பெண்களை வைத்து ஆசிரியரும் பெற்றோரும் ஒரு மாணவனை எடை போடுகின்றனர் பல மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் ஏன் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர். இதற்கெல்லாம் யார் பொறுப்பு பள்ளி: பெற்றோர் : சமூகம் இவைகள் தான். ஒரு கொலை செய்யும் அளவிற்குஇந்தப்பெண்ணை தூண்டியிருக்கிறது இந்த மதிப்பெண் விவகாரம். நான் பெற்றோர்களையும் பள்ளிகளையும் கேட்டுக் கொள்வது மாணவர்களை அவர்களின் மனநிலையில் படிக்க விடுங்கள் துன்புறுத்தாதீர்கள். படி படி என்று. அதுபோல ஆசிரியர்கள் மீதும் அழுத்தத்தை தராதீர்கள். 100 சதவீதம் தேர்ச்சி :உயர்ந்த மதிப்பெண் இந்த அழுத்தம் மாணவர்கள் மீது கோப உணர்ச்சியாக வெளிப்படுகிறது. பள்ளிகள் பெயர் வாங்க வேண்டும் தன் பிள்ளைகள் பெயர் வாங்க வேண்டும் என்று கல்வி திணிக்கப்படுகிறது.இந்த அவல நிலை முதலில் மாற வேண்டும் டி ஜி பி அவர்களின் அன்பான வேண்டுகோள்.

சுகந்தி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாள் காவலில் வைக்கப்பட்டார். ஆசிரியர் மதிவாணன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார் தன் தவறை உணர்ந்தார். இனிமேல் கோபம் கொள்ளக் கூடாது எந்த மாணவனையும் அன்பால் திருத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். . அந்தப்பெண் குற்றம் செய்ததற்கு மதிப்பெண்கள் ஒருகாரணகர்த்தாவாக மாணவரின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்ற புரிதல் இல்லாமைதான்.

என்னவென்று விசாரணை செய்யாமல் மக்கள் திரண்டு வந்து பள்ளியை: ஆசிரியரை அடித்து நொறுக்குவது தவறான செயல். மதிவாணன் ஆசிரியரிடம் பலரும் மன்னிப்புக்கோரினர்.எந்தப் பிழையும் செய்யாத ஆசிரியரைஅடித்து விட்டோம் என்று வருந்தினர்.

சிலநாட்களுக்குப்பின் கோபப்பெருக்கெடுத்த வெள்ளம்போல்இருந்த மதிவாணன் உள்ளம் இப்போது அமைதியானது. கையில் பிரம்பை எடுக்காமல் புத்தகத்துடன் நுழைந்தார் வகுப்பறைக்குள் மதிவாணன். வகுப்பறையில் வாசு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தான். சார் என்னை எல்லாரும் கொலைகாரி பெத்தபுள்ளன்னு மனதை நோகடிக்கிறாங்கசார்..நான் என்னசார் தவறு செய்தேன்.மதிவாணன்
ஆசிரியர் அவனுக்கு ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினார். நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று… மற்ற மாணவர்களுக்கும் இதில் அவனுடைய தவறு எதுவுமே இல்லை. அவனுக்கு நீங்கள்தான் ஆறுதல் சொல்லவேண்டும்.

இது நதியின் பிழையன்று. நதியானது வெள்ளப்பெருக்கெடுத்து வரும்பொழுது எல்லாவற்றையும் அடித்து செல்கிறது. அது நபியின் குற்றமல்ல.யார் செய்த குற்றம். நாம் செய்த குற்றம் தான். தவறு என்பது தவறிச் செய்வது . தப்பு என்பது தெரிந்து செய்வது. அந்தத் அந்தத் தப்பிற்கு அவன் தாய் தண்டனை அனுபவிப்பார்கள். இதை இவனின் தவறு என்ன இருக்கிறது என்று விளக்கமளித்துவிட்டு பாடத்தைத் தொடங்கினார் மதிவாணன் ஆசிரியர். மாணவர்கள் அனைவரும் அமைதியாக பாடத்தை கவனிக்க தொடங்கினர். வாசு கண்ணீர் விட்டு அழுதபடியே பாடத்தை கவனிக்கத் தொடங்கினான்.

📚 எழுதியவர்:

கு.மணி

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *