வலங்கைமானின் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர் பிரின்சி கஜேந்திர பாபு பேச்சு :

திருவாரூர் ஜீன் 29:

புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வலங்கைமானில் நடைப்பெற்றது.இக்கருத்தரங்கிற்க்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஸ்டீபன்நாதன் முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் பிரபாகரன் வரவேற்புரையாற்றினர்.
குருக்கத்தி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார்.

இந்த கருத்தரங்கில் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாம் அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மொழிபெயர்த்து மத்திய அரசே அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும்.புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.தமிழக அரசு சட்டப்பேரவையைக் கூட்டி புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு குறித்து விவாதிக்க வேண்டும்.தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி என பலதுறைகளிலும் உள்ள கல்வியாளர்களை அழைத்து, இந்த வரைவு அறிக்கை பற்றிய மிக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மாநில உரிமையைப் பறிக்கக்கூடிய, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதிக்கு எதிரான, கல்வியை முழுமையாக வணிகமயமாக்குகின்ற இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கை திரும்பப் பெறப்பட வேண்டும்.இந்தியப் பன்முகப் பண்பாட்டிற்கு எதிரான இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, ஒற்றைக் கல்விமுறை, ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு முழுமையாக திரும்பப் பெறப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை மத்திய அரசு வெளியிட்டுள்ள 484 பக்க வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பேசினார். இக்கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் , பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். நிகழ்வின் இறுதியாக மாவட்ட இணை செயலாளர் நன்றியுரை யாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *