நவகவி 1000 பாடல்கள் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : நவகவி 1000 பாடல்கள்
தொகுப்பாசிரியர் : கவிஞர் ஏகாதசி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 1020
விலை : 700
நூலைப் பெற : thamizhbooks.com
நூலைப் பெற : thamizhbooks.com
1980களின் கடைசியிலும், 1990களிலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய கலை இரவுகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவையாக இருக்கும். விடிய விடிய நாடத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு விடிய விடிய கலை இலக்கியங்களை பல்வேறு வடிவங்களில் கொண்டு சேர்த்த பெருமை கலை இரவுகளுக்கு உண்டு. அதே காலங்களில் பட்டிமன்றங்களும் விடிய விடிய நடந்தன. இரண்டிலுமே அறிவார்ந்த வாத விவாதங்களும் நடைபெற்றன.
இந்த சூழலில் கரிசல் குயில் கிருஷ்ண சாமியின் குரல்களில் நவகவியின் பாடல்கள் மக்களின் மனதினை கொள்ளை கொண்டன. நிறையப் பாடல்களை சொல்லலாம். ஆனால் மொந்தன் பழம் நடச் சொல்லி வெள்ளைக்காரன் காகிதம் போட்ட பாடல் விவசாயிகளின் துயரங்களை கண்முன் காட்டும் பாடல்.
அன்றைய அரசியல் சூழலில் அவர் இயற்றிய பாடல்கள் மக்களை வெகுவாக கவர்ந்தன. நான் 1990களின் மத்தில் நவகவியின் சிறிய பாடல் புத்தகத்தை வாங்கினேன். வாங்கும் போதே தனித்தனித்தாளாக இருந்தது. எங்க வீடு கூறை வீடு என்பதால் பொதுவாகப் புத்தகங்களைப் பாதுகாக்க முடியவில்லை. என்னுடைய எழுத்துகள் உட்பட. புத்தகம் தொலைந்து போனது.
அதன் பிறகு பச்சை அட்டையில் கரிசல் குயில் பாடல்கள் என்று புத்தகம் வெளிவந்தது. அதில் கிருஷ்ணசாமி பாடிய பாடல்களின் தொகுப்பாக வந்தது. அதில் நவகவியின் பாடல்கள் இருந்தன. எனக்கு அவருடைய பாடல்கள் படிக்க வேண்டிய ஆசை இருந்தது.
அந்த ஆசை மதுரை புத்தகத் திருவிழா 2024ல் நிறைவேறியது. ஆம் நவகவியின் 1000 பாடல்கள் திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர் ஏகாதசி தொகுத்த புத்தகம். தமிழ்ச் செல்வனின் முன்னுரையுடன் வெளிந்திருந்தது. இந்த நூலில் படலுக்கு மெட்டு போடத் தெரிந்தவர்கள் அவர் அவர் மெட்டில் பாடல்களைப் பாடி பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும். பாடல் பாடப் பயிற்சி பெறுகிறவர்களுக்கு இந்த புத்தகம் பெரிதும் உதவும்.
இந்த நூல் ஒரு பாடலை எவ்வாறு எழுத வேண்டும் என்று பாடலாசிரியராக முயற்சிக்கும் எழுத்தாளர்களுக்கு அதற்கான வழிகாட்டும்.
பொதுவாக பாடல்கள் குறித்து ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் இந்த புத்தகத்தை வாங்கி படிக்கலாம். மிக அற்புதமான தொகுப்பு. அந்த அந்த கால சூழ்நிலையின் அரசியலைப் புரிந்து கொள்ளவும் உதவும்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
மொ. பாண்டியராஜன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

