களை எடுப்பான் விவசாயி!

சட்டம் போட்டுட்டாரு -மந்திரி
சட்டாம்பிள்ளை கணக்கா!
கார்ப்பரேட் விவசாயம்- பாரு
உழவனை கவுக்கு தக்கா
     ‌  அம்பானி சொல்லுற ரேட்டில
       அவரையும் துவரையும் விக்கவா?
       சம்சாரி எல்லோரும் ரோட்டில
       புளிய மரத்தில தொங்கவா?
                                                               (சட்டம்)
அரிசியும் கோதுமையும் அவசியப் பண்டம் இல்ல!
திருநிறை சோறாக்கித் தின்னவா?
அதானிக்கு வெல்லக்கட்டி உழவனுக்கு நாமக்கட்டி
பரிசளிக்கும் மோடி மன்னவா!
       கார்ப்பரேட் தொந்தியே தானியக் குடோனா
       பதுக்கிவைப் பான்அவன் பயங்கரக் கொரோனா!
வாய்க்கரிசி போடவுமே
வக்கு இல்லாம போகுமே போகுமே போகுமே!
                                                               (சட்டம்)
முதலாளி இடத்தில் ஒப்பந்தம் போடச் சொல்லி
விவசாயி வர்க்கத்தை கொல்லுறான்.
ஓநாய்க‌ ளிடத்தில் ஒப்பந்தம் போடச்சொல்லி
ஆட்டுக்கு அறிவுரை சொல்லுறான்!
      கோடீஸ்வரன் கோட்டு கோமணம் ஆகுமாம்!
      கோல்மாலு பண்ணுறான் டாட்டாநம் நண்பனாம்!
காவிகள் பாவிகள் உழவா!
வந்தாண்டா நமக்கிவன் இழவா இழவா இழவா!
                                                               (சட்டம்)
இந்திய விவசாயம் இடிவிழுந்து உழவன்
கட்டவா கட்டவா காஷாயம்?
அரசின் கொள்முதல் அரோகரா! அட
வெளுக்குது வெளுக்குது காவிசாயம்!
       கொழுமுனை மேன்மலும் கூராகட்டும்!
       கொடுமையின் நெஞ்சினில் போய்ஏறட்டும்!
களையாய் முளைத்தது காவி!
களை எடுப்பான் விவசாயி பார்நீ பார் நீ!
                                                               (சட்டம்)
                                              செப்டம்பர் 2020



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *