நவரத்தின மலை | சோவியத் மக்களது நாட்டுக்கதைகள் | த.ரா. கிருஷ்ணையா | விலை ரூ. 350

ஒன்பதாம் வகுப்பு விடுமுறையில் இதே புத்தகம் என் கையில் இருந்தது. சோவியத்தின் ராதுகா பதிப்பகம். வெளியிட்ட கதைத் தொகுதி. கதைகளின் காதலனாக.. குழந்தைகளின் கதை சொல்லியாக என்னை செதுக்கிய நூல்களில் இது பிரதானமானது. இப்போது படித்தாலும் வேறு பாண்டசி உலகிற்குள் நம்மை கடத்தும் அழகு சிலிர்க்க வைக்கிறது. இதெல்லாம் காலத்தின் பொக்கிஷம்.

இந்த தொகுப்பில் ரஷ்யா, உக்ரேனியா, பேலோருஷ்யா, லித்துவேனியா, லத்வியா கரேலியா, மல்தாவியா, அஸ்பெய்ஜான், ஆர்மினியா, ஜார்ஜியா உஸ்பெக் உட்பட 38 நாடுகள் மக்கள் சார்ந்த அற்புத கதைகள் உள்ளன. முதல் கதை தவளை ஜரேவ்னா படிக்க ஆரம்பித்தால் நீங்கள் எந்த வயதினராக இருப்பினும் சரி, புத்தகத்தை கீழே வைக்கவே மாட்டீர்கள்.

அத்தனை அழகு கவர்ச்சி கம்பீரம் இந்த கதைகள். கர்வம் பிடித்த பிரபுவுடன் அமர்ந்து உணவு அருந்திய ஏழைக்குடியானவன் எனும் உக்ரேனிய நாட்டுக்கதையில் நீங்கள் உங்கள் கர்வத்தையே இழப்பீர்கள்