டெஸ்ட் (Test) என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு நல்ல கதை சரியாக எடுக்கப்படவில்லை. முதல் படம் என்பதால் இயக்குனர் சசிகாந்த் அடுத்தடுத்த படங்களில் கவனமாக செய்தால் வெற்றி பெறுவார்.
தன்னுடைய கண்டுபிடிப்புக்கு அரசின் அங்கீகாரம் பெற போராடும் ஒரு விஞ்ஞானி. தாய்மைக்காக ஏங்கும் அவரது மனைவி.
திறமை குறைந்து வரும் ஒரு பிரபல கிரிக்கெட் வீரர். இந்த மூன்று பேரின் பிரச்சினைகளே கதை. அதோடு மேட்ச் பிக்சிங் எனப்படும் கிரிக்கெட் சூதாட்டம், அரசியல் வாதிகளின் இலஞ்ச வேட்டை ஆகியவையும் கலந்து வருகின்றன.
பல இடங்களில் லாஜிக் இல்லாமல் உள்ளது. ஒரு விஞ்ஞானி உணவு விடுதிக்கு என்று சொல்லி கடன் வாங்கி தன் புராஜ்க்ட்டிற்காக செலவழிப்பாரா? அதுவும் கந்துவட்டி சுறாக்களிடமிருந்து? குடும்ப நண்பர் மற்றும் தான் ரசிக்கும் வீரரின் குழந்தையை அதுவும் தான் பெரிதும் விரும்பும் மாணவனை தன் கணவனே கடத்தி வைத்திருப்பதை ஒரு பெண் பேசாமல் பொறுத்துக் கொண்டிருப்பாளா ?
இவையெல்லாம் மனித மனங்களின் இருண்ட பக்கங்கள் என்று சொன்னால் அதை அழுத்தமாக காட்டியிருக்க வேண்டும்.
சில இடங்களில் வசனம் சிறப்பாக இருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்திற்காக நான் செய்யும் கண்டுபிடிப்புக்கு விலை கேட்கும் இந்த நாடு கிரிக்கெட்டுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்கிறது போன்றவை குறிப்பிட்டு சொல்லலாம்.
50களிலோ 60களிலோ ‘அந்த நாள் ‘ என்ற படம் வந்தது. தன்னுடைய திறமையை மதிக்காத நாட்டை பழிவாங்குவதற்காக ஜப்பானுடன் சேர்ந்து இந்தியா மீது குண்டு வீசுவதற்கு உதவி செய்யும் ஒரு விஞ்ஞானி, அதனால் அவனை கொலை செய்யும் மனைவி என்கிற கதை. டெஸ்ட் திரைப்படம் அதை நினைவூட்டுகிறது.
நாட்டின் அற மதிப்பீடுகள் சீர் கெட்டுப்போனால், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள் எல்லோருமே தங்கள் செயல்பாடுகள் மக்கள் நலனுக்கு ஆதரவானதா எதிரானதா என்கிற சோதனைகளில் தவறவே செய்வார்கள். இந்தப் படம் அதை உணர்த்துவதற்கு உதவி செய்திருக்கிறது.
Movie Name: Test
Release Date: 2025-04-04
Cast: Nayanatara, Madhavan, Siddharth, Meera Jasmine, Kaali Venkat
Director: Sashikanth
Music: Shakthisree Gopalan
Banner: Ynot Studios
எழுதியவர்:-
இரா.இரமணன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.