Nayakkum Naagareegam நயத்தகு நாகரிகம்

 

எது நாகரிகம்?

காட்டு மிராண்டிகளாக திரிந்த ஆதி மனிதன் ஆற்றங்கரையில் வாழ்வியலை துவங்கி நாகரிகம் என்ற அணிகலன்களை அணிய துவங்கினான்.
ஒருவரது வெளித்தோற்றத்தில் நாகரிகம் இல்லை. அது உள் மையத்தின் மென்மையை உள்ளடக்கியது. ஆடை, அணிகலன்கள் போன்ற வெளிப்புற விடயங்களில் நாகரிகம் இல்லை. பலர் பல முகங்களை அணிந்து கொண்டு மற்றவர்களுடன் பழகுவதை நாகரிகமாக கருதுகிறார்கள். பொய் முகம் தரித்து பகட்டான வார்தை பேசி நடிக்கும் மனப்பான்மை எல்லாம் நாகரிகம் என்ற வகைப்பாட்டில் வராது. நம் நாட்டை பொருத்தவரை மேற்கத்திய வாழ்வியல் முறையை பின்பற்றுவதும் அவர்களின் உணவு முறை, வாழ்வியல் கலாச்சாரத்தை பின்பற்றுவதையும் நாகரிகமாக கருதுகிறோம். இது நம்மில் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. அழுக்கான உடலை அழகான சட்டை போட்டு காண்பிப்பது போல. மலத்தின் மீது வாசனை திரவியங்கள் தெளிப்பது போன்றது. ஆதிவாசிகள் வேளாண்மையைச் செய்ய தேர்ந்தெடுத்த இடங்கள் தான் ஆற்றங்கரைகள். தாய் வழிச் சமூகம் குடும்பங்களாகத் தன் வாழ்வை வகுத்துக் கொண்டது அப்போது தான். பயிரிட ஆரம்பித்த போது தான் பண்பாடும் வளர்ந்தது. நிலத்தை பண்படுத்தும் போது தான் மனத்தையும் பண்படுத்திக் கொண்டது மனித குலம்.

சுயநலம் மறையத் துவங்கியது. நாகரிகக் கூறுகள் பிறப்பு எடுத்தனர். பொய் சொல்லாமல் இருப்பது மட்டுமே நாகரிகம் அல்ல. சிலநேரங்களில் தெரிந்த உண்மை எல்லாவற்றையும் சொல்லாமல் இருப்பதும் பண்படாகத்தான் கருத வேண்டும்.

வெ.இறையன்பு: தமிழ் உணர்வாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் - தலைமைச் செயலர் கடந்து வந்த பாதை!| Irai Anbu ias cheif secretary life and works - Vikatan
ஆசிரியர்  : திரு. வெ. இறையன்பு I. A. S

நமது உடலின் மொழியால் எதிரே இருப்பவரின் செயல் பிடிக்கவில்லை என்பதை வெளி காட்டும் தன்மையை தவிர்பதும் நாகரிகம். அதாவது ஒருவர் பேசும் போது நேரம் பார்ப்பது, கொட்டாவி விடுவது, அடுத்தவரை குறை கூறுவது , etc., உணவு உண்ணும் போது என்ன நாகரிகங்கள் கடைப்பிடிக்க வேண்டும், சாலை நாகரிகம் என்றால் என்ன? மேடை நாகரிகம் என்றால் என்ன? விழா நாகரிகம் என்றால் என்ன? பயண நாகரிகம் என்றால் என்ன? பொது இடங்களில் எப்படி நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும்? விருந்தினராக வருபவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய பண்பு நெறிமுறைகள் என்ன? வகுப்பறையில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன? சுற்றுலா தளத்தில், உணவு விடுதிகளில், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதை அழகான எடுத்துக் காட்டு சொல்லி தெரியப்படுத்தி உள்ளார் ஆசிரியர். கழிவறையை பயன்படுத்துவதில் கூட நாகரிகம் புதைந்த உள்ளது.

பொதுவாக எல்லா ஒப்பந்தங்களும் எழுதி கையொப்பமிட வேண்டிய அவசியம் இல்லை. கொடுத்த வாக்கை உயிர் போனாலும் காக்கும் குணம் பலரிடம் உண்டு. அன்புடனும் நன்றியுடன் நடப்பது, தூய்மையும் நேர்மையும் உடலிலும் மனத்திலும் துவங்க வாழ்வது என்கிற வழிமுறைகளைத் தன்னுடைய வாழ்வாக வடிவமைத்துக் கொண்டவர்கள் நயத்தகு நாகரிகம் மிக்கவர்களாக வாழ்நாள் முழுவதும் வாழ்த்தப்படுவார்கள் என தீர்வையும் அளித்துள்ளார் ஆசிரியர். ஆசிரியர் வெ.இறையன்பு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நன்றி

                           நூலின் தகவல்

நூல்                     : “நயத்தகு நாகரிகம்”

ஆசிரியர்        : திரு. வெ. இறையன்பு I. A. S

பக்கங்கள்      : 32

விலை              : ரூ.20/-

வெளியீடு      : கற்பகம் புத்தகாலயம்

அச்சிட்டோர்: நாவின் ஆப்செட்

                          எழுதியவர் 

       திருமதி சாந்தி சரவணன்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *