நூலாசிரியரால் அன்போடு வழங்கப்பட்ட புத்தகம்.
கல்வியோடு தொடர்புடைய அரசு, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூகம் என அனைவரின் பார்வையில் இருந்தும் கல்வி தொடர்பான கட்டுரைகளை தொகுத்திருக்கிறார் இந்நூலில்.
நூலிலிருந்து கற்றல் என்பது அனைத்து புலன்களில் இருந்தும், ஊடகங்களில் இருந்தும் கிடைக்கும் அனுபவங்களை அறிவாக மாற்றுவது.
கற்றல் என்பது பள்ளிக்கூடங்களில் மட்டும் நடைபெறுவதில்லை.
மட்டம் தட்டுவதே மதிப்பீடு செய்வதன் நோக்கம் என்றால் விளைவு விபரீதம் தான்.
ஆசிரியர்கள் சமூகத்தை படைப்பவர்கள். கள்ளம் கபடம் இல்லா பிள்ளை நாட்டின் முதலீடு என்ற அறிவியல் இயக்க பாடல் வரிகளுக்கு என்றும் உயிர் உள்ளது.
மனித வளம் சீராகும் போதே எல்லா வளங்களும் சரியான முறையில் பயன்படுத்தப்படும். நாடும் நல்லரசாகி வலிவும் பொலிவும் பெறும்.
உலகில் எத்தனை கல்வியாளர்கள் கரடியாய் கத்தியும் கூட கல்விக்கும் வேலைக்கும் ஆன தொடர்பு என்பது நாளுக்கு நாள் கூடி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
நமது வெற்றிக்கு அடுத்தவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டுவதற்கு மிகப்பெரிய தயாரிப்பு தேவை. கல்வி நிலையங்கள் வளர்க்க வேண்டிய திறன்களில் முக்கியமானது இது.
கற்பித்தல் சுவையானதாகி கற்றல் சுகமானதாக மாற வேண்டும். இதில் குழந்தைகள் ஆசிரியர் இருவர் மட்டுமே நேரடி தொடர்பாளர்கள். ஆனால் இவர்களும் மனிதர்கள் தான். இவர்களுக்கும் குறிப்பிட்ட அளவு சகிப்புத்தன்மையும் பொறுமையும் இருக்கும். இந்த குணங்கள் அதிகரிக்க வேண்டுமானால் இரண்டு பிரிவினருக்கும் அனுசரணையானவர்களாக சமூகமும் அரசு மாற வேண்டும்.
யாரையும் அவருடைய மனப்பான்மைக்கு மேலாக வளர்த்தெடுக்க முடியாது.
கல்வியானது மனித நடத்தையில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
மனிதர்கள் சமூகத்தில் நடந்து கொள்ளும் முறைகளில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த வல்லது, பல்வேறு சூழல்களில் தகவமைத்துக் கொள்ள தேவையான தகுதிகளை உருவாக்க உதவுவது, என்பதே கல்வியின் வரைவிலக்கணம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அறிவுப்பூர்வமாக வாழ்வதற்கு வழிகாட்டும் இடமாக பள்ளியும், அவ்வாறு வாழ்வதற்கு வழி காட்டுபவராக ஆசிரியரும் அமைய வேண்டும்.
சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைக்க உதவும் சக்தியாக கல்வி பரிணமிக்க வேண்டும்.
கல்வி கற்றோர் எல்லாம் நீதியை கடைபிடிப்பவர்களாக, பாரதியின் கூற்றுப் படி நீதி உயர்ந்த மதி கல்வி உடையவராய் மாற வேண்டும்.
வாசிப்பு என்பது உற்சாகமூட்ட கூடியதாக, தெரிந்ததிலிருந்து தெரியாத விஷயத்தை நோக்கி செல்வதாக அமைவதாகவும், ஒரு தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய செயல்பாடாக அமைய வேண்டும்.
விவாதங்கள் வெளிப்படை தன்மையுடனும் நடுநிலைமையுடன் நடைபெற வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேல் ஆசிரியர்களை குற்றவாளிகளாக சித்தரித்து பல்வேறு கண்காணிப்புகள் மூலம் பழிவாங்கும் போக்கு கைவிடப்பட வேண்டும்.
உண்மையில் தவறு செய்யும் ஆசிரியர்களை தயவு தாட்சண்யம் என்று தண்டிப்பதை நடுநிலைமையான யாரும் தடை சொல்லப்போவதில்லை.
எங்கோ யாரோ தவறு செய்கிறார்கள் என்பதற்காக அனைவரையும் தர்ம சங்கடப் படுத்துவது செயல் திறனை கூட்ட உதவாது.
உலகில் நம்மை புரிந்து கொண்ட ஒருவர் உள்ளார் என்ற நம்பிக்கை மட்டும் ஒவ்வொருவருக்கும் கிடைத்தால் போதும், பல தற்கொலை எண்ணங்கள் தற்கொலை செய்து கொள்ளும்.
மாணவர்கள் கத்தியை தீட்டுகிறவராய் மாற்றாமல் புத்தியை தீட்டுகிறாய் மாற்றுவோம்.
சவால்கள் தானே சரித்திரத்தின் பக்கங்களை அலங்கரிக்கின்றன.
கல்வி
அது பள்ளியில்
வழங்கப்படும் பரிசு பொருள்
அல்ல
உழைத்து
சேர்க்க வேண்டிய
உன்னத பொக்கிஷம்
என்பதையும்,
கல்வியின் மேன்மைகளையும், கல்வித்துறை சார்ந்த ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளையும், அலசுகிறது இந்நூல்.
நூலின் தகவல்கள்
நூல் : நீதி உயர்ந்த மதி கல்வி
ஆசிரியர் : முனைவர் என். மாதவன்
விலை : ரூ.170
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலறிமுகம் எழுதியவர்
சீனி.சந்திரசேகரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.