நூல் அறிமுகம்: முனைவர் என். மாதவன் எழுதிய *நீதி உயர்ந்தமதி கல்வி (கல்விக் கட்டுரைகள்)* – லதா அண்ணாதுரை

நூல் அறிமுகம்: முனைவர் என். மாதவன் எழுதிய *நீதி உயர்ந்தமதி கல்வி (கல்விக் கட்டுரைகள்)* – லதா அண்ணாதுரைபுத்தகம் : நீதி உயர்ந்த மதி கல்வி
ஆசிரியர்: முனைவர்.என்.மாதவன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
Books for children
பக்கங்கள்: 182
விலை: ரூ. 170
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/needhi-uyarndha-madhi-kalvi-katturaikal/

நீதி உயர்ந்தமதி கல்வி நூலாசிரியர்பற்றி….

முனைவர் என். மாதவன், தலைமை ஆசிரியர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 31 ஆண்டுகால செயல்பாட்டாளர். துளிர் மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை பெற்றவர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும் அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாட்டிலும் கருத்தாளர்.

நூல் பற்றி……

33 கட்டுரைகளை தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2008 தொடங்கி பிப்ரவரி 2021 வரையிலான கட்டுரைகளின் தொகுப்புகளை உள்ளடக்கியுள்ளது .

முண்டாசு கவிஞனின் பாடல் வரிகளை கொண்ட நூலின் தலைப்பு என்னைக் கவர்ந்தது.

2008 செயல்வழி கற்றல் திட்டம் பற்றி தொடங்கும் கட்டுரை 2021 கொரோனா காலம் வரையிலான கல்வியின் நிலை குறித்த நிதர்சனங்களைப் பேசுகின்றது.
நம் கல்விமுறை தேர்வை மையப்படுத்தியதாகவே உள்ளது.மாணவர்களை அச்சுருத்தும் மதிப்பெண்கள், கல்விக்கும் ,வாழ்வாதத்திற்கும் உள்ள தொடர்பு பல இடங்களில் விவாதிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியளித்து பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற ஆசிரியர் எடுக்கும் முயற்சிகளை மறந்து, மேல்நிலை கல்விக்கு தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லும் மாணவர்களின் செயல் வருந்தத்தக்க தாக ஒருபுறம் இருந்தாலும், இவர்களைப் போல வெற்றியாளர்களை அனைவரும் கொண்டாடுவார்கள். ஆனால் நம்மில் சிலராவது யாராவது ஒரே மாணவனோ, மாணவியோ குறைவான மதிப்பெண் ணுக்காக வருந்துவதைக் காண நேரிட்டால், உரிய விதத்தில் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க உதவுவோம் எனும் நூலாசிரியரின் கருத்து, போற்றுதலுக்குரியது.

கல்வி உரிமைச் சட்டம் – 25 சதவிகிதம் பற்றிய கட்டுரை யதார்த்தத்தின் வெளிப்பாடாகவே இருந்தது. கல்வித் துறை மட்டும் பணியாற்றி ஆரோக்கியமான மாற்றத்தை கொண்டு வர இயலாது. சமூகத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்க உதவும் சக்தியாக கல்வி பரிணமிக்க வேண்டும். நாகரீக சமூகத்திலும் ஏற்றத்தாழ்வுகள் நீடிப்பது அநீதி என்ற புரிதல் மேம்பட வேண்டும். கல்வி கற்றோரெல்லாம் நீதியை கடைபிடிப்போராய் பாரதியின் கூற்றுப்படி நீதி உயர்ந்த மதி கல்வி உடையோராய் மாற வேண்டும்.

இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது, புத்தகம் கையிலிருந்ததைப் போல் ஒரு உணர்வே இல்லாமல், கல்வியாளர்கள் இணைந்து நடத்திய கூட்டத்தில் பங்கேற்றதைப் போலொரு எண்ணமே மேலோங்கி இருந்தது. மகிழ்வும் பெருமையும் Madhavan Narasimhachari N சார்…💐Show 2 Comments

2 Comments

 1. லதா அண்ணாதுரை

  நன்றி சார் 🙏
  அருமையான புத்தகம்💐
  அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் இயல்பாக
  எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.👍🎈

 2. லதா அண்ணாதுரை

  சிறப்பு
  அருமை
  அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்…🎈

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *