குழந்தைகள் உலகம் விசாலமானது. அங்கே பொய் கிடையாது. வன்மம் என்றால் என்னவென்று அறியாது‌. அன்பும் நட்பும் அளவின்றி கிடைக்கும். ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டு இந்த உலகையே மறந்து நடக்கும் அழகே தனித்துவமானது.

அத்தகைய பிள்ளைகளின் திறமையை நல்ல முறையில் வெளிக்கொணரும் முயற்சியில் நம்மிடையே கதைசொல்லிகள் என்னும் தாத்தாக்களும் மாமாக்களும் அத்தைகளும் அண்ணன்கங்களும் அக்காள்களும் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வரிசையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அக்கா சரிதா ஜோ அவர்கள். கதை சொல்லி மட்டுமல்ல. குழந்தைகளுக்கான சிறார் கதைகளும் புனைந்து பிள்ளைகள் படிக்கும் விதமாக எளிய நடையில் எழுதியுள்ள நீலமறமும் தங்க இறக்கைகளும் என்ற நூலைப் பற்றி இங்கே காண்போம்.

பூமிக்கு வந்த நிலா என்ற கதையில் நட்பாக இருக்கும் ஐந்து நட்சத்திரங்கள் விளையாடிக்கொண்டே பால் வெளியில் ஒரு பாட்டி வடை சுடுவதைப் பார்த்து
தங்களுக்கு வடை கேட்கிறார்கள். சுடும் வடை அனைத்தும் நிலாவுக்கு மட்டும்தான். உங்களுக்குக் கொடுக்கும் அதிகாரம் தனக்கில்லை என்பதாகவும் நிலவும் வந்து அதையே கூறி அந்த நட்சத்திரங்களைப் பிடித்து பூமியில் தள்ளி விடுவதாகவும் நட்சத்திரங்கள் மழலையர் பள்ளியில் விழுந்து குழந்தைகளோடு நட்பு கொள்வதாகவும் கதை. மீதியைப் படியுங்கள்.

டோலி லாலி _தவளைகள், சின் சின் __ சிட்டுக்குருவி, மண் புழு _மோச்சு. இவர்கள் மூலம் பூமியின் நீர் குறைபாடு நீர் நிலைகள் அழிந்து வீடுகளின் வரவு, மரங்கள் அழிந்து படுதல், பூச்சி மருந்துகளின் தாக்குதலால் பூமியின் நச்சுத்தன்மை, ஜீவராசிகளின் அழிவு போன்றவற்றை வெளிப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் ஆசிரியர்.

வெட்டுக்கிளிகள் பயிரை நாசம் செய்கிறது, மரங்களை வெட்டி மழை தடை படுகிறது என்று விவசாயிகள் வருந்துவதாக ஒரு கதை. முழு கதையையும் படித்தால்
புரியும் மீதி. காட்டு மரங்களின் ராஜாவாக தேக்கு மரம். தூதுவராக கிளிகள்.
பறவைகள் மூலம் விதைப்பு நடைபெறும் தகவல் சொல்லும் ஒரு கதை.

காட்டு மிருகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயரை வைத்து காட்டுக்குள்ளே ஏலேலோ ஐலசா என்று ஒரு கதை அமைத்துள்ளார் இந்த பெயர்களுக்காகவே இந்த கதையை வசிக்க வேண்டும்.

காட்டில் இருக்கும் உயிரினங்களின் தலைமையைத் தேடும் போட்டிக்கு எலிகளுக் கிடையில் நடக்கும் போட்டியைப் பற்றிய ஒரு கதை சின்னா லட்டு தின்ன ஆசையா. வாங்க படிக்கலாம்.

கதை சொல்வதும் கதை கேட்பதும் அறிவின் திறவுகோல். இந்த கதையில் கதை சொல்லி தாத்தாவையும் குழந்தைகளையும் இணைத்து அறிவியலை புகழ்த்தியுள்ளார் ஆசிரியர்.

குழந்தைகள் முதல் என்னைப் போன்ற பெரியவர்கள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். நானும் இந் நூலை படித்துவிட்டு குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

நன்றி.

வ.சு.வசந்தா

நூல்: நீல மரமும் தங்க இறக்கைகளும்
ஆசிரியர்: சரிதா ஜோ
விலை : ரூ 71

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *