“நீலக்கடல் நிறம் மாறும்” புதுக்கவிதை
***********************************************
மீண்டும் ஒரு உலகயுத்தமா?
மீளாது இவ்வுலகம்
இஸ்ரேல் காஸாபோர்
ரஷ்யா உக்ரைன்
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்
இப்போது அமெரிக்கா
இஸ்ரேல் ஈரான்
போர்க்களத்தில்…..
உலக வரைபடம்
குருதியால் நனையும் முன்பே
கொடூரத் தாக்குதல்களை
நிறுத்துங்கள்….
எங்களின் சொல்லுக்கு
அடிபணியா நாடுகளை
அடக்க முனைந்திடும் போர்கள்
இரு நாடுகளின் இருமாப்பால்
இருளப்போகிறதுஇவ்வுலகம்
போர்மேகம்
புவி எங்கும் சூழ்ந்து வருகிறது
நீலக்கடல் நிறம் மாறும்
சாக்கடலாய் சரிந்து விடும்
உலகப் பொருளாதாரம்
ஈரானில் விழும் குண்டு
ஈரோட்டை அழித்துவிடும்
உக்ரனின் தாக்குதல்
உலகின் முதுகெலும்பை
உடைத்து விடும்….
ரஷ்யாவின் தாக்குதலோ
பதுங்குகுளிப் போராய்
மீண்டும் உருவெடுத்திடும்…
அதிகார வெறிகொண்டோர்க்கு
அன்பான வேண்டுகோள்
அணு ஆயுத அழிவு நடக்கும் முன்பு
அமைதிப் பாதைக்குத் திரும்புங்கள்
அறுவடை பூமி தன்னில்
விதை விதைக்க வேண்டும்
அணுவிதைக்க வேண்டாம்
உயிர் அறுக்க வேண்டாம்
ஹிரோசிமா நாகசாகி மீண்டும்
உருவெடுத்திடல் வேண்டாம்
யுத்தம் என்ற சப்தமே
உலகினில் எங்கும் வேண்டாம்
***********************************************
📚 எழுதியவர் :
✍🏻 கு. மணி
த/பெ: குருசாமி
தெற்குப்புதுத்தெரு
சக்கம்பட்டி- 625512
ஆண்டிபட்டி வட்டம்
தேனி மாவட்டம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

