நீலத்தங்கம் -இரா முருகவேள் |நூல் அறிமுகம் -அன்பரசன்

எப்படிப்பட்ட அரசு வேணும்..அது யாருக்காக இருக்க வேண்டும்..அதனைடைய முதல்பணி என்னவாக இருக்க வேண்டும் என்பன போன்ற விசயங்களை “கொரோனோ”, இன்று பொது வெளியில் பலரையும் பேச வைத்திருக்கிறது…

தனியார் மருத்துவமனை நோக்கி ஓடிய பலரின் கால்களும், இன்று அரசு மருத்துவமனைகளை தேடிக் கொண்டிருக்கிறது.. எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்தால் நாடு முன்னேறும்ன்னு பேசிய பலரின் வாய்கள், இன்று அரசு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தேவைகள் குறி்த்து பேசத் தொடங்கியிருக்கிறது. அரசின் உதவிகள் தன் வீடு தேடி வராதா..? அரசு அதற்கான முயற்சியை ஏன் மேற்கொள்ளவில்லை? என்கிற விவாதங்கள் தொடங்கி இருக்கிறது.

தனியார் நிறுவனங்கள் பல இழுத்து மூடிட்டு தன் ஊழியர்களை.. தொழிலாளர்களை நடுவீதிக்கு தள்ளியபோது, அரசு தனியாரிடம் பேசி, ஊழியர்களுக்கு மாத வருமானத்தை உறுதி படுத்திடனும்.. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம், உணவு மற்றும் பாதுகாப்பை உத்திரவாதப் படுத்தனும், உத்தரவு போடனும்.. என்பன போன்ற கோரிக்கைகள் எல்லாரிடுமும் எழுந்திருக்கிறது.

Added by @__vera_level_memes_2.o__vlm_ Instagram post Water day ...

தன் மகளோ.. மகனோ..தானோ வீட்டில் அமர்ந்து கொண்டு தனியார் நிறுவனத்தின் வேலைகளை செய்து முடிக்கனும், ஒவ்வொரு மணிக்கும் ஒர்க்கிங் ரிப்போர்ட் கொடுக்கனும், என தனியார் முதலாளிகள் உத்திரவிடும்பொழுது, “இந்தக் காலத்திலும் இப்படி கேட்கனுமா? இது அடுக்குமா?”, என்று அழுது புலம்பும் மனிதர்கள், அரசு இதை கேட்கக்கூடாதா என்று, இன்று நிறையவே தொடர்ந்து பலரும் பேசி வருகின்றனர்.

“காய்கறி, மளிகைப் பொருட்கள் கொள்ளை விலைக்கு பல தனியார் நிறுவனங்கள் விற்கிறதே, இதை அரசு கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்து நியாய விலையில் வீடுவீடாகக் கொடுக்கக் கூடாதா..? அரசு நினைத்தால் செய்யலாமே!!”, என்று கருத்துக்கள் பரவலாக பேசப்படும் இந்த சூழ்நிலைக்கு பொருத்தமாக,

“எல்லோருக்கும் பொதுவான நீர் எப்படி விற்பனைக்கு கிடைக்கிறது? அதை பணமாக்கிய குயுக்தி, எப்படி? யாருக்கு உருவானது?.. அரசு பல கோடி செலவு செய்து, கட்டிய அணைகளும் குடி நீர் பாசணங்களும் தனியார் உலக பெருமுதளாளிகளுக்கு தாரை வார்த்திட ஆளும் அரசுக்கு யார் நிர்பந்தம் கொடுத்தார்கள் (இன்றும் கொடுக்கிறார்கள்)? பெரு நகரங்களை நோக்கி கிராமப் புறத்தில் இருந்து உழைக்கும் மக்களை அவர்களாகவே வந்து சேரும்படி எப்படி திட்டமிடுகிறார்கள்? அப்படி திரண்டு வரும் மக்களிடம், இலவசமாக கொடுக்க வேண்டிய, குடிநீரை வியபரமாக்கி கொள்ளையடித்தது எவரின் மூளை? அப்படி குடியேறி, நகரை அழகாக்கியவர்கள் வாழும் பகுதியை சேரி எனவும் அழுக்கானவர்கள் எனக் கூறி வலுக்கட்டாயமாக நகரின் வெளிப்புறத்திற்கு அரசு, காவல் துறை துணையோடு துரத்தியடிக்கும் நோக்கத்தின் பின்புலமாக இருபது எவரின் வஞ்சகம்.?… இப்படி பல கேள்விகளை இந்நூல் முன் வைக்கிறது.

நீலத்தங்கம் – தனியார்மயமும் நீர் ...

“தமிழக அரசோ , மாநகராட்சி நிர்வாகமோ அல்லது மெட்ரோ வாட்டர் நிர்வாகமோ நமக்கு மட்டும் நீர்வழங்கும் நிறுவனம்”, என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் நம்மைப் போன்ற அலட்சியம் கொண்ட, தன்னிலை அறியாதவர்கள் எவருமே இருக்க முடியாது. இவர்கள் அனைவருமே குடிநீர் வியபாரம் செய்யும் உலக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நம் வரிப் பணத்தில் வேலை பார்க்கும் அவர்களின் ஏஜெண்டுகளே என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..என்ற புதிரோடு ஆசிரியர் தன் கருத்தை முன்வைக்கிறார்.

மேலும், திட்டமிட்ட நகரங்கள் உருவாக்குதலின் பின்னணி, குறிப்பாக, ஜவஹர் திட்டம் எப்படி உலகவங்கித் துணையோடு உள் நுழைகிறது.. அப்படி நுழையும்போது அது எந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்காக வேலை பார்க்கிறது.. குறிப்பாக குடிநீர் விநியோகம், சுத்திகரிப்பு பணிகளில் தலையீடுகிறது, எப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சுயாட்சி அமைப்பு வரை குறுக்கீடு செய்கிறது, தானாகவே வீழ்ந்திடும் விட்டில் பூச்சிகளாக இந்த அமைப்புகள் மாறிட, என்னென்ன மாய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது..என பல்வேறு விசயங்கள் ஒவ்வொன்றையும் வெளிக்கொணர்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேல் “எல்லோருக்கும் நீர்” என்கிற முழக்கத்தை வைத்து “3வது உலக வாட்டர் ஃபோரம்” என்கிற அமைப்பு உலகளாவிய மாநாட்டை நடத்தியதின் பின்னணி; இந்த அமைப்பை எந்தேந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பின்னிருந்து இயக்கியது; அப்படி ஒரு முழக்கம் ஏற்பட ஏதுவான புறச்சூழலை எப்படி உருவாக்கினார்கள்?.. இப்படி பல கேள்விகளால்… நீண்டு கொண்டே செல்கிறது, பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வந்திருக்கும் ” நீலத்தங்கம்” என்கிற நூல்.
இந்த நூலை தான் வாழும் நில மக்களின்பால் பேரன்பு கொண்டு பல உண்மைகளை நிஜமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் எழுத்தாளர் இரா.முருகவேள்.

தனியார்மயத்தால் ஏற்படும் தண்ணீர் ...

சமூக மக்களின் வாழ்நிலை குறித்து அக்கறை கொள்ளும் அனைவரும் வாசித்து களமிரங்க வேண்டிய நேரமிது.

1990 களில் பொலிவியாவின் கொச்சபாம்பா நகரின் நீர் வினியோகத்தில் நுழைந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக அம்மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த விடாப்பிடியான போராட்டம் “பெக்டல்”, என்ற அந்த நிறுவனத்தை ஓட விரட்டியதில் முடிந்தது.

கார்பரேட் நிறுவனங்களுக்கெதிராக, தமிழகத்திலும் தேவை அப்படியொரு போராட்டமே!

நீர் வளம் பொதுச் சொத்து.. அது மக்கள் சொத்து.. அதை இலவசமாக கொடுக்க வேண்டியது ஆளும் அரசுகளின் கடமை!!

புத்தகம் : நீலத்தங்கம்
ஆசிரியர்: இரா முருகவேள்.
வெளியீடு: பாரதி புத்தகாலயம்

– அன்பரசன்