தமிழகத்தின் கொங்கு பகுதியில் உள்ள வெள்ளக்கோயில் காங்கேயம் தாராபுரம் ஊர்களில் உள்ள கிராமங்களை இணைத்து இக்கதை மையமாகக் கதை சுழன்றுக் கொண்டிருக்கிறது காருமாமாவை மையப்படுத்திய கதை உறவுகள் சென்ற பின்பு அவர்களை காடு வரைக் கொண்டு செல்லும் முறை நமக்கு இலக்கியமாகக் கொண்டு வருகிறது.

சாகித்ய அகாதெமி விருது பெறுவதில் மகிழ்ச்சி: தேவி பாரதி- Dinamani
ஆசிரியர்  : திரு. தேவிபாரதி

சமூகத்தின் அடித்தட்டு மக்களாக இருக்கும் நாவிதர் பற்றிய குடும்ப வாழ்க்கையும் சமூகத்தில் அவர் படம் துயரத்தையும் அவர்களோடு அவர்களோடு வாழ்வியல் உறவு கொள்ளும் மற்ற சமூக மக்களின் வாழ்வியலையும் நீர்வழிப் படூஉம் நமக்கு நன்றாகவே உணர்த்துகிறது.ஒரு ஆணின் துணையை பெண் இழப்பதைக் காட்டிலும் ஒரு பெண்ணின் துணையை நான் இழக்கும் போது ஏற்படும் சோக காவியத்தை நமக்கு நன்கு உணர்த்துகிறது ஞாயிற்றுக்கிழமை வெள்ளக்கோயில் சந்தை திங்கள் கிழமை காங்கேயத்தில் சந்தை செவ்வாய்க்கிழமை கொடுவாயில் சந்தை புதன்கிழமை நத்தக்காடையூரில் சந்தை என்று அன்று முதல் இன்று வரை வழக்கத்தில் உள்ள வார நாட்களின் சந்தையை மையப்படுத்தி காரு மாமாவின் மனைவி செட்டி உடன் செல்வதை ஞாயிற்றுக்கிழமை என்று கூறுவதன் மூலம் அவர்கள் சென்றது வெள்ளகோவிலுக்கு தான் என்பதை சொல்லாமல் புரிய வைக்கிறார் ஆசிரியர்.

கருணாநிதிக்காக உயிரைக் கொடுக்க இருந்த டெய்லர் தங்கராஜ் என்று எழுதுவதின் மூலம் தமிழகத்தின் குக்கிராமங்களின் நிலைமையை ,அரசியலை, கொள்கையை , யதார்த்தத்தை கள நிலவரத்தை நன்கு உணர்த்துகிறார் ஆசிரியர் திருமங்கலம் அத்தை வீட்டுக்கு வார வாரம் மிச்சர், வெற்றிலை, பாக்கு, புகையிலை என்றுப் பலகாரங்கள் வாங்கிக் கொண்டு அலையும் சம்பு என்ற சண்முகம் எதிர்காலத் திட்டத்தை முதல் பெண்ணை வேறொரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்துக் கொடுத்தின் மூலம் ஏமாற்றப்பட்ட சம்பு என்ன முடிவு எடுத்திருக்கிறார் ? அத்தை விட்டார் “ஏன் சம்பு உனக்கு அப்படி ஒரு ஆசை இருந்ததா அப்படின்னு சொல்லி?

நீ ஏமாந்ததுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்று இப்போ ஒன்னும் கொறஞ்சி போகல இளையவா இருக்கிரா அப்படின்னு சொல்லி சம்புவை மீண்டும் பலகாரத்துடன் காவடி எடுக்க வைக்கிறார்கள் அதை வீட்டார் என்பது சொந்த பந்தங்கள் எல்லாம் போய் செய்யும் சூழ்ச்சிகளை அருமையாக விளக்கி இருக்கிறார் கொங்கு நாட்டின் அழகிய கலாச்சாரம் கதையின் நன்றாகவே விழுகிறது தமிழ் மண்ணின் ஒவ்வொரு துகள்களிலும் இலக்கியம் படிந்து இருக்கிறது என்பதை கதை தான் நீர் வழிப்படூஉம் நல்லவர்க்கு நீர் உண்டு என்பதை நன்கு உணர்த்துகிறது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஓர் ஆசிரியராய் பணிபுரியும் ஆசிரியர் பள்ளிக் குழந்தைகளையும்,சொந்தக் குழந்தையையும் அடக்க முடியாமல் கிராமத்து ஆசிரியரின் நிலைமை படம் படித்துக் காட்டியது, ஊருக்கு ஒதுக்குப் புறமான கோயில்களில் சிறுவர் சிறுமியர் பெற்றோருக்குத் தெரியாமல் அரிசி,பருப்பு,உப்பு எடுத்துட்டு வந்து கூட்டாஞ்சோறு பொங்கி சாப்பிடுவதைக் கதையில் சொல்லிக் கிராமத்தை இன்னும் மெருகேற்றுகிறது நீர் வழிப் படூஉம் தேனிட்டப் பனியாரம் தமிழ் மொழிக்கு இன்னொரு பொக்கிஷம் சாகித அகடமி விருதுப் பெற்ற இந்த நாவல் கொங்கு மண்டலத்தின் இலக்கியத்தை இன்னொருப் படிக்குக் கொண்டு செல்கிறது மாபெரும் எழுத்தாளர் திரு.தேவிபாரதி அவர்களுக்கு எனதுத் தாழ்மையான வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

 

            நூலின் தகவல் 

நூல்              : “நீர்வழிப் படூஉம்

ஆசிரியர்  : திரு. தேவிபாரதி

வெளியீடு : தன்னறம் நூல்வெளி

தொடர்புக்கு : 44 2433 2924..https://thamizhbooks.com/product/neervazhi-paduvum/

பதிப்பு       : 2022

              எழுதியவர் 

          இரா.மதிராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 3 thoughts on “தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம்””
  1. சிறந்த நூல்.இனிமையான விமர்சனம்.
    இதயம் நிறைந்த வாழ்த்துகள்.

  2. நீர் வழிப்படூஉம்
    கொங்கு மண்டலத்தில் நடைபெறுகிறது.
    பகுதி மக்கள் அவசியம் படிக்கவேண்டும் என்ற உணர்வை தூண்டுகிறது

  3. சிறப்பான நூல். படிக்கத் தூண்டுகிறது கவிஞரின் நூல் அறிமுகம். இரு கவிகளுக்கும் இதய வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *