நூல் அறிமுகம்: தோழியர் தென்றலின் இலக்கிய முயற்சிகளுக்கும்.. – சுப்ரபாரதிமணியன்கட்டுண்டு கிடக்கிறார்கள் பெண்கள். தங்களை விடுவித்துக் கொண்டு முன்னேறி சாதனையாளர்கள் ஆகிறார்கள். அப்படி சாதனை புரிந்த பெண்மணிகள் கட்டுகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்ட அனுபவங்கள். இதில் அந்த வகையில்  நூற்றுக்கணக்கான பெண்களைப் பற்றிய பதிவாக இந்த நூல் இருக்கிறது இலக்கியம் சார்ந்த சில முன்னெடுப்புகளும் முயற்சிகளும் சாதனை மூலமாக தோழியர் தென்றல் அவர்களின் நடவடிக்கைகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டு  இருக்கின்றன.

            தாத்தாவின் திண்ணை பள்ளியினை விரிவாக்கி 100 ஆண்டுகளுக்கு மேலாக கல்விப் பணி செய்து வரும் அந்தப் பள்ளியை நிர்வகித்து அதில் ஒரு ஆசிரியையாக பணிபுரிந்து குழந்தைகளின் உலகத்தோடு எப்போதும் ஒன்றி இருப்பவர் . அதைத்தவிர பள்ளி வகுப்பறையிலேயே ஒரு நூலகம் உருவாக்கியவர். வகுப்பறை நூலகத்தை பள்ளி மாணவ-மாணவிகளின் மட்டுமில்லாமல் பெற்றோர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கூட பயன்படுத்தும் விதமாக அதை ஒரு பொது நூலகம் ஆகியிருப்பதில் அப்படி ஒரு சாதனை செய்திருக்கிறார் .  சமீப காலங்களில் புதிய தலைமுறை, தினமணி, மலேசிய பத்திரிக்கைகள் மற்றும் முகநூல் களிலிருந்து அவரைப் பற்றி தெரிந்து கொண்டபோது பெருமிதமாக இருந்தது. திருப்பூரில் இருக்கும் பாண்டி நகர் தாய்த்தமிழ்ப் பள்ளியில் நூலகத்தை இப்படி பொதுமக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் என்று பொதுவானதாக நூலகத்தை அமைக்கவேண்டும் என்று அப்பள்ளி தொடங்கப்பட்ட காலத்தில் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

Image

ஆனால் அதே முயற்சியை ஒரு பெரிய சாதனை ஆக்கிக் கொண்டிருக்கிறார் தென்றல் அவர்கள். தொடர்ந்து இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவதும் நேரத்தை செலவழித்து வெளியூர் கூட்டங்களில் கலந்துகொண்டு இலக்கியம் சார்ந்த உரையாடல்களில் பங்கு பெறுவதும் தென்றலை ஒரு முக்கிய எழுத்துப் பணியாளர் என்ற அளவில் உயர்த்தியிருக்கிறது .அவரின் ஆதர்சமாக பலநூறு பெண்மணிகள் இருந்திருக்கிறார்கள் அந்தப் பெண்மணிகளை எல்லாம் இந்த நூலில் அடையாளம் காட்டுகிறார் . அவர்களெல்லாம் ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்தவர்கள் .இலக்கியத்துறையில் சாதனையாளர்கள் பற்றி குறிப்பிடும்போது இயல்பிலேயே அவர் மனம் குதூகலித்தது விரிவாய் எழுதுகிறார். தங்களின் கூண்டுகளிலிருந்து  பெண்கள் முற்படுவதையும் சாதனை புரிவதும் இந்தப் புத்தகம் சொல்கிறது. இலக்கிய நூல்களும் படைத்தவர்களும் ஒருபுறம் இந்த நூலுக்கு பலம் சேர்க்கிறார்கள் . தென்றலின் இலக்கிய முயற்சிகளுக்கு இந்த நூலும் ஒரு படிக்கல்லாக அமையும்

 (நீசமாக எண்ணாதே  நீச்சலடிக்க கற்றுக்கொடு : பா தென்றல் கட்டுரைகள், ரூ 150, இனிய நந்தவனம், திருச்சி வெளியீடு)

 சுப்ரபாரதிமணியன்