சட்டம் ஏழைகளுக்குச்
சாதகமாக இருப்பதில்லை ..
இருக்கும் ஒன்றிரண்டும்
ஏழைகளால் அணுகமுடிவதில்லை ..
அணுகினாலும்
அதிகாரத்தை மோதி
ஆதரவு பெறமுடிவதில்லை ..
பெற்றாலும் ..
வார்த்தைகளோ
நீதியின் வாயால்
வளைத்து நெளிக்கப்படுகின்றன..
அதுவும்
சாமானியன் காதை
எட்டுவதற்குள்
தண்டனை நிறைவேற்றப்படுகிறது..
நிறைவேற்றப்பட்டபின்னும்..
அதிகாரவர்க்கத்தால்
அவனது உடைந்துபோன
மண்டையோட்டினுள் புகுத்தப்படுகிறது –
“இருந்தும் நம்புங்கள்..
சட்டத்தின்முன்
அனைவரும் சமம்”
என்ற வாசகம்…
– சரகு.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.