நேஹா ஜே ஹிரானந்தானி எழுதிய "Girl Power: Indian Women Who Broke the Rules" - நூல் அறிமுகம் | Neha J Hiranandani's Girl Power Book Review in Tamil | Popular Book Reviews | www.bookday.in

நேஹா ஜே ஹிரானந்தானி (Neha J Hiranandani) எழுதிய “Girl Power! Indian Women Who Broke the Rules” – நூல் அறிமுகம்

மகளிர் தினத்தையொட்டி மலர்ந்த புத்தகமொட்டுக்குள் எட்டிப் பார்த்தது 50 பெண்களின் வெற்றி வரலாறாக,
Neha J. Hiranandani’s *Girl Power*..

ஒரு பெண் கனவு காணும் போது
ஒரு புதிய உலகம் பிறக்கிறது.
ஒரு பெண் எழுந்து நிற்கும் போது
ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது.
அந்த வரலாற்றின் ஒளிக் கதிர்களை
ஒரே நூலில் சேர்த்து இளம் மனங்களில்,
தைரியத்தின் விதையை விதைக்கிறது இந்நூல்..

Girl Power: Indian Women Who Broke the Rules
என்னும் இந்நூல் இந்தியாவின் பல துறைகளில் சாதனை செய்து சமூகத்தின் பழைய விதிகளை உடைத்த 50 பெண்களின் வாழ்க்கைப் பயணத்தை அழகாக வர்ணிப்பதோடு நில்லாது அவர்களது தைரியம், உறுதி, முயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை எப்படி அவர்களை வெற்றியின் உச்சிக்குக் கொண்டு சென்றன என்பதை சுவாரஸ்யமாக வரைந்து சென்றிருப்பது எழுத்தாளரின் படைப்புத்திறன் என்றே சொல்லலாம்..

இந்நூலில் இடம்பெறும் பெண்கள் பல முக்கியமான விருதுகளை பெற்றுள்ளனர், உதாரணமாக
*Padma Shri, Padma Bhushan, Bharat Ratna, Arjuna Award, Ramon Magsaysay Award, NASA Space Flight Medal மற்றும் Nari Shakti Puraskar*
இந்த விருதுகள் அவர்களின் தைரியம், சாதனைகள் மற்றும் சமூகத்திற்கான முக்கியமான பங்களிப்புகளை பாராட்டி வழங்கப்பட்டவை..

நம் நாட்டின், அரிய முத்து மணிகளாகிய பெண் மணிகள்
போராட்டத்தின் புயலைத் தாண்டி, வெற்றியின் விடியலை வரவேற்றவர்கள்..
அவர்களின் கனவுகள்
இன்று வரலாற்றின் விண்மீன்களாய் ஜொலிக்க,
அந்த சாதனைகளின் பயணத்தை ஓரிரு வரிகளில் இங்கு பார்ப்போமா!!?

வண்ணங்களால் உலகை கவர்ந்த
Amrita Sher-Gil

அறிவின் ஒளி ஏந்தி
மருத்துவப் பாதை கண்ட
Anandibai Joshi

Quit India moment ல் சுதந்திரக் கொடியை தைரியமாய் உயர்த்திய
Aruna Asaf Ali

விதியை வென்று உச்சி தொட்ட
Arunima Sinha

கட்டிடங்களில் கலை பேச வைத்த
Brinda Somaya

அலைகளுடன் நடனமாடிய
Bula Choudhury

சுதந்திரத்தின் படையில் நின்ற
Lakshmi Sahgal

புயல்களை வென்ற கடல் வீராங்கனை
Radhika Menon

வயதை வென்ற துப்பாக்கி வீராங்கனை
Chandro Tomar

சமத்துவத்தின் குரலாய் எழுந்த
Dakshayani Velayudhan

அம்பின் முனையில் கனவு வைத்த
Deepika Kumari

சிறகுகள் விரித்து விண்ணைத் தொட்ட
Kalpana Chawla
கனவுகளுக்குச் எல்லை இல்லை எனும் குரலாக மாறிய பெண்மணி…

வீரத்தின் வளையத்தில் உலகை வென்ற
Mary Kom,
முயற்சியின் வியர்வையில்
வெற்றியின் மாலை சூடியவர்..

இதில் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சில பெண்மணிகளை பற்றி,

போராட்டத்தின் பாதையில் நின்று மக்களின் குரலாய் உயர்ந்த
*Irom Sharmila*
சமூகத்தின் வலியை உணர்ந்து, மாற்றத்தை தேடிய விதம் வாசிக்கும் போதே மாற்றத்தை நோக்கிய பயணத்தின் உந்து சக்தியாக அமைந்தது..

நீதியையும், ஒழுக்கத்தையும் முன்னிறுத்தி அதற்கான
பாதையை திறந்த
*Kiran Bedi*
அச்சமின்றி முன்னேறிய
முன்னோடி பெண்மணி creates more boldness in me..

அரசியல் மேடையில் உறுதியாய் நின்ற
*Indira Gandhi*
உறுதியான முடிவுகள் கொண்டு நாட்டை வழிநடத்திய தலைவர்.. Good example for us in decision making..

கல்வியின் ஒளியை பெண்களுக்கு தந்த ஆசிரியர்
*Savitribai Phule*
அறிவின் விதையை சமூகத்தில் விதைத்தார்
Best example for teachers..

Totally the bookreflects,
For every woman and young mind that fixes their eyes on a goal, it acts as an energy booster, reminding them that
with courage and determination, every dream can turn into reality..

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “Girl Power: Indian Women Who Broke the Rules”
ஆசிரியர்: நேஹா ஜே ஹிரானந்தானி (Neha J Hiranandani)
வெளியீடு:
Scholastic India
விலை: ₹.499
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻அ.சுகிர்தா
நெல்லை

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *